For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

|

ஓர் கடத்தல் காரனை பிடித்துக் கொடுத்தால் ஐந்து கோடி ரூபாய் சன்மானம் என்ற ஓர் அறிவிப்பு வந்தது என்றால், அது வீரப்பனை பிடிக்க கூறப்பட்ட சன்மானம் என அனைவருக்கும் தெரியும். தமிழகம், கேரளா, கர்நாடகா என மூன்று மாநில போலீசாரின் கண்களிலும் விரலைவிட்டு ஆட்டிய கடத்தல் வித்தகன் வீரப்பன்.

பெரிய மீசை, துப்பாக்கி ஏந்திய தோள்கள், ஒல்லியான உடல் வாகு, சந்தனம், தந்தம், சத்தியமங்கலம் என சில அடையாளங்களை கூறினாலே வீரப்பனின் ஞாபகம் பலருக்கும் வந்து செல்லும். ஏறத்தாழ 15 ஆண்டுகள் மூன்று மாநில போலீசாரிடம் இருந்து தப்பித்து வந்த வீரப்பனை கடந்த 2004-ம் ஆண்டு போலீசார் சுட்டுக் கொன்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை # 1

உண்மை # 1

வீரப்பன் தனது வாழ்நாளில் ஏறத்தாழ 2000 யானைகளை கொன்றதாக கூறப்படுகிறது. வீரப்பன் முதன் முதலில் யானைக்கு முன் துப்பாக்கியை தூக்கியது அவரது 10 வயதில் என்றும் சிலர் கூறுகின்றனர்.

உண்மை # 2

உண்மை # 2

வீரப்பன் முதல் கொலை செய்யும் போது, அவரது வயது வெறும் 17 தான். தனது வாழ்நாளில் வீரப்பன் செய்த மொத்த கொலைகளின் எண்ணிக்கை 184. இதில் 97 பேர் காவல் துறையினர் மற்றும் வன அதிகாரிகள்.

MOST READ: தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

உண்மை # 3

உண்மை # 3

வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை முப்பது கோடி ரூபாய் பணத்திற்காக நூறு நாட்கள் கடத்தி வைத்திருந்தார். அதே போல உள்ளூர் அமைச்சர் எச்.நாகப்பாவை 2002-ம் ஆண்டு கடத்தினார், ஆனால், கேட்டது கிடைக்கவில்லை என்பதற்காக நாகப்பாவை கொலை செய்துவிட்டனர்.

உண்மை # 4

உண்மை # 4

தமிழக - கேரள - கர்நாடகா எல்லை காடு பகுதியில் வாழ்ந்து வந்த வீரப்பன். இந்த மாநில போலீசாரிடம் இருந்து தப்பிக்க கொரில்லா தந்திரங்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

உண்மை # 5

உண்மை # 5

2000 யானைகளை கொன்ற வீரப்பன், 75 கோடி ரூபாய் மதிப்பிலான 88,000பவுண்ட் தந்தம் மற்றும் சந்தன கட்டைகளை கடத்தியதாகவும் கூறப்படுகிறது.

உண்மை # 6

உண்மை # 6

வீரப்பன் ஆடுமேய்க்கும் பெண்ணான முத்துலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார். முத்து லட்சுமி வீரப்பனின் மீசை மற்றும் கெட்டப் பெயர் பிடித்து போய் தான் திருமணம் செய்துக் கொண்டார் என சிலர் கூறுகின்றனர்.

உண்மை # 7

உண்மை # 7

காட்டிலேயே வாழ்ந்து வந்த வீரப்பன், காட்டு விலங்குகளுடன் விசித்திர ஒலி எழுப்பி பேசும் திறனும் பெற்றிருந்தார் என சில தகவல்கள் உலா வந்துக் கொண்டிருந்தன. இது எவ்வளவு உண்மை என தெரியவில்லை.

MOST READ: ராகி யாரெல்லாம் சாப்பிடலாம்? காலை நேரத்தில் சாப்பிட்டால் என்ன ஆகும்?

உண்மை # 8

உண்மை # 8

வீரப்பன் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம், மற்றும் தங்கங்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அவர் காட்டில் ஒளித்துவைத்த பல தங்கங்கள் யாருக்கும் தெரியாத இடத்தில் இருக்கின்றன என்றும் கூட சில தகவல்கள் கூறப்படுகின்றன.

உண்மை # 9

உண்மை # 9

வீரப்பன்: இந்தியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளி எனும் புத்தகத்தை தழுவி தான் லெட்ஸ் கில் வீரப்பன் எனும் படம் எடுக்கப்பட்டது.

உண்மை # 10

உண்மை # 10

பறவைகள், மிருகங்கள், கொள்ளைக்காரர்கள்: வீரப்பனுடன் 14 நாட்கள் என்ற புத்தகத்தை குருபாகார் மற்றும் செனானி (Krupakar and Senani) என்பவர்கள் எழுதினர். இவர்கள் வீரப்பனால் 1998-ம் ஆண்டு கடத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

உண்மை # 11

உண்மை # 11

"Operation Cocoon" என்ற சிறப்பு படை வகுத்து தான் வீரப்பனை போலீசார் சுற்றிவளைத்து கொன்றனர்.

உண்மை # 12

உண்மை # 12

15 வருடங்கள் மூன்று மாநில அரசிடம் இருந்து தப்பித்து வந்த வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு தமிழக போலீசாரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

MOST READ: பித்ருக்களின் அடையாளமாக ஏன் காகத்தை குறிப்பிடுகிறோம்? அவர்கள் ஆசிர்வாதம் கிடைத்ததன் அறிகுறி என்னென்ன

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lesser Known Facts About Indian Dacoit Veerappan

Lesser Known Facts About Indian Dacoit Veerappan, read here in tamil.
Desktop Bottom Promotion