For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகர் சத்யராஜ் பற்றி பலரும் அறியாத 8 சுவாரஸ்யமான உண்மைகள்!

நடிகர் சத்யராஜ் அவர்களது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான உண்மைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

லொள்ளுக்கு பெயர்போனவர் என்று தான் பலர் சத்யராஜ் அவர்களை குறிப்பிடுவார்கள். ஆனால், நடிப்பிலும் கைதேர்ந்த நபர் சத்யராஜ் அவர்கள். ஒன்பது ரூபாய் நோட்டு, பெரியார், பாகுபலி என இவரது நடிப்புக்கு தீனி போட்ட படங்கள் வெகு சில தான்.

பெரும்பாலும் இவரை தகடு, தகடு என சொல்லியே லொள்ளு, நக்கல் கதாபாத்திரம் கொடுத்து கமர்ஷியல் நடிகர் ஆக்கிவிட்டனர். ஆனால், சினிமாவை நேசித்து, பெரும் ஆசையின் தூண்டுதலால் நடிக்க வந்தவர் சத்யராஜ் அவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாவரவியல் மாணவர்!

தாவரவியல் மாணவர்!

நடிகர் சத்யராஜ்-ன் இயற்பெயர் ரங்கராஜன். இவரது பெற்றோர் சுப்பைய்யா மற்றும் நாதாம்பாள் ஆவார்கள். இவர் கோயம்புத்தூர் சேர்ந்தவர் ஆவார். இவர் இளங்கலை தாவரவியல் படித்த மாணவர் ஆவார்.

அம்மா பேச்சை கேட்காமல்...

அம்மா பேச்சை கேட்காமல்...

சிறு வயது முதலே சத்யராஜ் அவர்களுக்கு நடிப்பின் மீதும், திரைத்துறை மீதும் அளவுக்கடங்காத ஆசையும், ஈர்ப்பும் இருந்தது. இதற்கு அவரது தாய் அனுமதிக்காத போதிலும் கூட, கனவை எட்டிப்பிடிக்க கோவையில் இருந்து சென்னை கிளம்பினார் சத்யராஜ் அவர்கள்.

ப்ரொடக்ஷன் மானேஜர்!

ப்ரொடக்ஷன் மானேஜர்!

சட்டம் என் கையில் என்ற படம் தான் சத்யராஜ் அவர்களது திரை பயணத்தின் முதல் படி. இவர் வில்லன் நடிகனாக துவங்கி, குணசித்திர வேடங்கள் ஏற்று பிறகு தான் ஹீரோ ஆனார் என்பது நாம் அறிந்தது தான்.

ஆனால், நடிகர் சத்யராஜ் அவர்கள் ஒருசில படங்களுக்கு ப்ரொடக்ஷன் மானேஜராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி தோழர்!

கல்லூரி தோழர்!

சத்யராஜ் அவர்களுடைய உயிர் நண்பன் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் இவரது கல்லூரி தோழர் ஆவார். நடிகர் சத்யராஜ் நடித்த 200 படங்களில் 25 படங்கள் மணிவண்ணனுடன் கைகோர்த்து நடித்து தான்.

1984 - 2013 வரை இவர்கள் பல படங்களில் சேர்ந்து பணியாற்றினார். இவர்களது காம்போவில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்கள் ஆகும்.

புராண படங்கள்!

புராண படங்கள்!

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் சத்யராஜ் அவர்கள். எம்.ஜி.ஆரை போலவே புராண படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு அதிகம் இருந்தது. ஆனால், எதிர்பார்த்தது போல எந்த படமும் அமையவில்லை.

இவரது நீண்ட நாள் ஆசை இயக்குனர் ராஜமவுளி மூலமாக பாகுபலியில் நிறைவேறியுள்ளது.

எந்த கவலையும் இல்லை!

எந்த கவலையும் இல்லை!

சத்யராஜ் அவர்கள் யாருக்காகவும், எதற்காகவும் இறங்கி போகமாட்டார். தமிழ் பற்று அதிகம் கொண்டவர். சுய வாழ்க்கை மட்டும் என்றி, திரை வாழ்விலும் எதை பற்றியும் கவலை படாமல் இருந்தவர் சத்யராஜ் அவர்கள்.

மிஸ்டர். பாரத் படத்தில் ரஜினுக்கு அப்பாவாக நடித்த போது ரஜினியின் வயது 35, சத்யராஜ்-ன் வயது 31.

நல்ல பெயர்...

நல்ல பெயர்...

1985-லேயே இரண்டு தெலுங்கு படங்களில் நடித்திருந்தார் சத்யராஜ் அவர்கள். ஆனால், அப்போது அவருக்கு பெரிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை. பிறகு 2008 முதல் மீண்டும் குணசித்திர வேடங்கள் ஏற்று இவர் நடித்த தெலுங்கு படங்கள் அனைத்தும் இவருக்கு நல்ல பெயர் வாங்கி தந்தன.

அச்சமில்லை!

அச்சமில்லை!

அரசியல் ரீதியான கருத்துக்களையும் அச்சமின்றி எடுத்து முன்வைக்கும் தைரியம் கொண்டவர் நடிகர் சத்யராஜ். மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்ற அச்சமின்றி கருத்துக்களை பதிவு செய்வார். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, காவிரி பிரச்சனை பற்றி சத்தியராஜ் அவர்கள் பேசியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Actor Sathya Raj

Interesting Facts About Actor Sathya Raj
Desktop Bottom Promotion