For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரபல இந்தியர்களின் சுயசரிதையில் தைரியமாக நடித்த இந்திய நடிகர்கள்!

|

தற்போதைய வாழ்வியலில், சமூகவியலில் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் ஏதேனும் பேசினால், செய்தால் தான் அது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

சாமானிய மக்கள் செய்யும், செய்த நல்ல காரியங்கள் ஊடகங்களிலும், சமூக தளங்களிலும் பெரிதாக கண்டுக்கொள்ளப் படுவதில்லை.

இதையும் படிங்க: உண்மையில் உலகை காக்கும் 8 ரியல் சூப்பர் ஹீரோஸ்!

இவர்களை பற்றி வெளியில் பேசுவதே அரிதாக இருக்கும் பட்சத்தில் இவர்களது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க, அந்த கதாபாத்திரத்தை நடிக்க இயக்குனருக்கும், நடிகருக்கும் தைரியம் வேண்டும்.

கற்பனையை எப்படி வேண்டுமானாலும் வடிக்கலாம். ஆனால், உண்மையில் சிறிய பிசுருத்தட்டினால் கூட அது பெரிய குறையாகிவிடும்.

இதையும் படிங்க: பலரும் அறியாத சில்க் ஸ்மிதா எனும் கவர்ச்சி கன்னியின் கண்ணீர் பக்கங்கள்!!

அந்த விதத்தில் நேர்மை, கண்ணியம், சர்ச்சை, பெருமை, இழிவு, இன கொடூரம், மக்களுக்காக உயிர் நீத்த உன்னத மனிதர்கள் பற்றி தைரியமாக எடுக்கப்பட்ட சில வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் பற்றி இனிக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டங்கள்

டங்கள்

பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்து வரும் திரைப்படம் டங்கள். ஹரியானாவில் உள்ள ஓர் கிராமத்தை சேர்ந்தவர் தான் மஹாவீர் இசங் போகத்.

இவர் தனது மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கி, பதக்கங்கள் வெல்லவைத்து வெற்றி மங்கைகளாக ஆக்கினார். அமீர்கான் போகத் என்பவரது கதாபாத்திரத்தை தான் டங்கள் படத்தில் நடித்து வருகிறார்.

அசார்

அசார்

சூதாட்ட புகாரில் சிக்கி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாருதீனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் இந்த அசார். இம்ரான் ஹாஷ்மி அசாரின் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

நீரஜா

நீரஜா

சோனம் கபூர் நடித்து பெரும் வெற்றி அடைந்த படம் நீரஜா. நீரஜா பனோட் எனும் விமான ஊழியரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் இந்த நீரஜா.

இவர், நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரை காத்து, தன் உயிரை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறந்த பிறகு இவருக்கு இந்திய அரசு, அசோகா சக்ரா விருது கொடுத்து கவுரவித்தது.

சரப்ஜித்

சரப்ஜித்

சரப்ஜித் சிங் என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் சரப்ஜித். ரன்தீப் ஹூடா எனும் இந்தி நடிகர் இவரது கதாபாத்திரம் ஏந்தி நடித்திருந்தார்.

தனது நடிப்பால் சரப்ஜித் சிங்கின் வாழ்க்கையை பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டுவந்து வியக்கவைத்தார் ரன்தீப்.

அலிகார்

அலிகார்

டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராமச்சந்திர சிரஸ் என்பவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதால் பல்கலைக்கழகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட மராத்தி பேராசிரியர் ஆவார். மனோஜ் பாஜ்பாய் இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்.

மேரி கோம்

மேரி கோம்

உலகத்தர குத்துசண்டை வீராங்கனை மேரி கோம்-ன் கதாபாத்திரம் ஏந்தி மேரி கோம் எனும் படத்தில் நடித்திருந்தார் பிரியங்கா சோப்ரா. பாக்ஸ் ஆபீஸ் மற்றும் மக்கள் விமர்சனம் என இரண்டு விதத்திலும் படம் வெற்றி பெற்றது.

மாஞ்சி

மாஞ்சி

மாஞ்சி என்பவர் மவுண்டெயின் மனிதர் என அழைக்கப்படுபவர். இவர் 22 வருடங்களாக ஓர் மலையை குடைந்து 55 கிலோமீட்டர் சுற்றி வர வேண்டிய பாதையை 15 கிலோமீட்டராக குறைத்தார். அதுவும் தனி ஆளாக. நடிகர் நவாசுதின் இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்.

பாக் மில்கா பாக்

பாக் மில்கா பாக்

தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் இந்த பாக் மில்கா பாக் . ஃபர்ஹான் அக்தர் இந்த காதாபாத்திரம் ஏற்று நடிக்க நிறைய சிரமங்களை எதிர்கொண்டார். தன்னை தானே வருத்திக் கொண்டு இந்த படம் சிறப்பாக வெளிவர உழைத்தார்.

பான் சிங் டோமர்

பான் சிங் டோமர்

ராணுவ வீரர் மற்றும் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் பான் சிங் டோமர். நடிகர் இர்பான் கான் இந்த கதாபாத்திரத்தை மிக அற்புதமாக ஏற்று நடித்திருந்தார்.

தனது திறமையால் இந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை அனைவரும் ரசிக்கும் வண்ணம் உழைத்திருந்தார்.

ஷாஹித்

ஷாஹித்

ஷாஹித் ஆஸ்மி எனும் வழக்கறிஞர் மக்கள் உரிமைக்காக போராடிய சிறந்த சமூக ஆர்வலரும் கூட. இவர் கடந்த 2010 ஆண்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் இயக்குனர் ஹன்சல் மேத்தா ஆஸ்மியின் வலிமிகுந்த வாழ்க்கையை கண்முன்னே கொண்டுவந்தனர்.

தி டர்ட்டி பிக்சர்

தி டர்ட்டி பிக்சர்

தென்னிந்திய கவர்ச்சி கன்னியாக திகழ்ந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தான் தி டர்ட்டி பிக்சர். நடிகை வித்யா பாலன் இந்த கதாபாத்திரத்தை மிக கச்சிதமாக நடித்திருந்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட நாயகன்!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட நாயகன்!

இந்திய சுதந்திர வரலாற்றில் பெரும் பங்கு கொண்டிருந்தவர் நேதாஜி. இவரது வாழ்க்கை வரலாற்று படமான "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட நாயகன்!"-ல் சச்சின் கேதேகர் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டுகளை பெற்றார்.

காந்தி

காந்தி

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கை வரலாற்று படம் தான் காந்தி. இந்த படம் ஆஸ்கர் விருது வென்றது. பென் கின்ச்லே என்பவர் காந்தியின் கதாபாத்திரம் ஏந்தி நடித்திருந்தார்.

சர்தார்

சர்தார்

இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். இந்திய சுதந்திர போராட்ட வீரரான இவரது கதாபாத்திரத்தை பரேஷ் ராவல் ஏற்று நடித்திருந்தார்.

பண்டிட் கியூன்

பண்டிட் கியூன்

பூலான் தேவி உ.பி-ன் தாழ்த்தப்பட்ட மல்லா இனத்தை சேர்ந்தவர். அந்த ஊரில் உயர்சாதியினருக்கும், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் நிகழ்ந்த இன வேற்றுமை காராணமாக, அவர்களின் இழி செயல்களினால் கொள்ளைக்காரியாக மாறினார்.

சீமா பிஸ்மாஸ் என்பவர் பூலான் தேவியின் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Actors In Biopics

Here’s How Well These Famous Indian Personalities Were Portrayed In Their Biopics By Actors.
Desktop Bottom Promotion