நல்ல எதிர்காலம் இருந்தும் தற்கொலை செய்துக் கொண்ட சில பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பிரபலங்களின் வாழ்க்கை நாம் நினைக்கும் அளவிற்கு மிகவும் அற்புதமானது அல்ல. தனது சொந்த வாழ்க்கையை கூட நிம்மதியாக, சுதந்திரமாக வாழ முடியாத கொடுமையை அனுபவித்து வருபவர்கள் தான் பிரபலங்கள். குறிப்பாக திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்.

மன அழுத்தம், ஏமாற்றம், பாலியல் வன்கொடுமை, சமூக சிக்கல்கள் என இவர்களது வாழ்க்கை பல இன்னல்களை கடந்து வருகின்றன.

இவை யாவும் மிகையாகும் நிலையில் இவர்கள் எடுக்கும் முடிவு தற்கொலை. வளரும் நட்சத்திரம், வளர்ந்த நட்சத்திரம், அறிமுகமானவர்கள் என பலரும் எடுத்த முடிவு இதுதான்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் திடீரென்று தற்கொலை செய்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நடிகர், நடிகைகள்!!!

அதிலும், தங்கள் எதிர்காலம் மிளிரும் பாதையில் சென்றுக் கொண்டிருந்த போதிலும் கூட சில பிரபலங்கள் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். இது தான் வியப்பு கலந்த அதிர்ச்சியை அளிக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராபின் வில்லியம்ஸ்

ராபின் வில்லியம்ஸ்

உலகளவில் பெரும் ரசிகர் கூட்டம் கொண்டிருந்தவர். அனைத்து ரசிகர்களின் முகத்திலும் புன்னகை தவழவிட்ட நடிகர். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இவர் இப்படியோர் முடிவு எடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இவருக்கு இருந்த மூச்சுத்திணறல் மற்றும் மன அழுத்தமே தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என சில நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

மர்லின் மன்றோ

மர்லின் மன்றோ

20-ம் நூற்றாண்டில் கனவுக்கன்னி. உலகளவில் ஒரு நடிகை பெரும்பாலான திரை ரசிகர்களை ஈர்க்க முடியும் என்றால் அதற்கு பதிலாக மர்லின் மன்றோவின் பெயரை குறிப்பிடலாம்.

கடந்த 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரது படுக்கையறையில் இறந்துகிடந்தார். தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார் என கூறப்பட்டது. ஆனால், மருத்துவ பரிசோதனையில் அப்படி ஏதும் தென்படவில்லை என கூறப்பட்டது. கொலையா? தற்கொலையா என்ற மர்மம் விலகவில்லை எனிலும்.

ஓர் பிரகாசமான எதிர்காலம் இருந்த தருணத்தில் இவர் இறந்தது இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

ஜியா கான்

ஜியா கான்

பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்துக் கொண்டது இன்றளவும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் தான். தனது வீட்டில் சீலிங் ஃபேனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இவரது காதலர் அளித்த சித்திரவதை தாளாமல் தான் இவர் தற்கொலை செய்துக் கொண்டார் என கூறப்படுகிறது.

பாலிவுட்டில் பெரியளவில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜியா கான். தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் தற்கொலை செய்துக் கொண்டார்.

திவ்யா பாரதி

திவ்யா பாரதி

மற்றுமொரு பாலிவுட் நடிகையின் தற்கொலை இது. 1993 ஏப்ரல் மாதம் தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்தி தற்கொலை செய்துக் கொண்டார் திவ்யா பாரதி.

இவரது மர்மம் விலகாமல் இருந்த போதிலும், போலீசார் இதுவொரு விபத்து. தவறி விழுந்துவிட்டார் என வழக்கை முடித்துவிட்டது. இறந்த போது திவ்யா பாரதிக்கு வயது வெறும் 19 என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் பெனாய்ட்

கிறிஸ் பெனாய்ட்

பிரபல WWE சூப்பர்ஸ்டார் கிறிஸ் பெனாய்ட். தனது நண்பர் எடி கோர்ரிரோவின் மரணத்தில் இருந்தே மன அழுத்தமாக காணப்பட்ட கிறிஸ் பெனாய்ட்.

திடீரென தன் மனைவி, மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டார்.

WWE-ல் முதன்மை ஸ்டார்களில் ஒருவராக இருந்த இவர் இப்படி செய்தது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.

தனது டைரியில் உன்னை விரைவில் சந்திப்பேன் நண்பா (எடி கோர்ரிரோ) என அவர் குறிப்பிட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏமி வைன்ஹவுஸ்

ஏமி வைன்ஹவுஸ்

பாடகியான ஏமி வைன்ஹவுஸ் ஜூலை 2011-ல் தற்கொலை செய்துக் கொண்டார். பவர்புல்லான குரல் கொண்டிருந்த ஏமி வைன்ஹவுஸ் ஆல்காஹால் பயன்பாட்டால் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

அளவுக்கு அதிகமாக மது அருந்தி இவர் தற்கொலை செய்துக் கொண்டார். இறக்கும் போது யூடியூபில் தனது காணொளியை பார்த்துக் கொண்டே இவர் இறந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Famous People Who Chose Suicide Despite Being Brilliant In Life

There are some Famous People Who Chose Suicide Despite Being Brilliant In Life, take a look on here.
Story first published: Tuesday, July 26, 2016, 12:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter