பட்ஜெட் 2016: இந்த வருடம் எதன் விலையெல்லாம் அதிகரித்துள்ளது என தெரியுமா?

By:
Subscribe to Boldsky

இன்று அமெரிக்காவில் ஆஸ்கர் விருது விழா நடந்து கொண்டிருக்க, இந்தியாவில் மத்திய பட்ஜெட் தாக்கல் போய் கொண்டிருக்கிறது. எனவே ஆஸ்கர் விருது விழாவிற்கு யார் எப்படி வந்தார் என்பதைப் பார்ப்பதை விட்டு, இந்த வருடம் எந்த பொருட்களின் விலை எல்லாம் அதிகரித்துள்ளது என்று கொஞ்சம் பாருங்கள்.

இங்கு இந்த 2016-17 நிதி ஆண்டில் எந்த பொருட்களின் விலை எல்லாம் அதிகரித்துள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பால் பொருட்கள்

ஏற்கனவே பால் பொருட்களின் விலை அதிகரித்த நிலையில், இந்த வருடமும் பால் பொருட்களான பன்னீர், சீஸ், ஐஸ் க்ரீம், தயிர் மற்றும் இதர பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று நினைத்தோம். ஆனால் அவற்றில் விலையில் மாற்றம் ஏதும் இல்லை.

புகையிலைப் பொருட்கள்

இந்த வருடம் பீடியைத் தவிர அனைத்து புகையிலைப் பொருட்களின் விலையும் 10-15% அதிகரித்துவிட்டது. இனிமேலாவது சிகரெட் பிடிப்போரின் எண்ணிக்கை குறைகிறதா என்று பார்ப்போம்.

தங்க விலை

கடந்த வருடமே தங்கத்தின் இறக்குமதி விலை அதிகரித்திருந்தது. அப்படியெனில் இந்த வருடம் மட்டும் குறையப்போகிறதா என்ன? நிச்சயம் இந்த வருடத்திலும் தங்கத்தின் விலை அதிகரிக்கப் போகிறதாம்.

மது

புகையிலையின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது போல், மதுவின் விலையும் அதிகரித்துவிட்டது.

அழகு சாதனப் பொருட்கள்

பெண்களே! உங்களுக்கு ஓர் கெட்ட செய்தி. இந்த வருடம் அழகு சாதனப் பொருட்களின் விலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதில் எம்மாற்றமும் இல்லை.

எலக்ட்ரானிக் பொருட்கள்

வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றின் விலையும் அதிகரித்துவிட்டது.

வாகனங்கள்

இதுவரை பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதால் தான் கஷ்டப்பட்டோம். ஆனால் இந்த வருடம் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விலையும் அதிகரித்துவிட்டது. அப்ப இனிமேல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது!

கேஜெட்கள்

தற்போது கேட்ஜெட்டுகள் வாங்குவது பலருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த வருடம் அந்த கேஜெட்டுகளின் விலையும் அதிகரித்துவிட்டது.

வீட்டு கடன்கள்

பலருக்கும் வீடு வாங்கும் கனவு இருக்கும். ஆனால் இந்த வருடம் பலருக்கு அந்த கனவு நனவாக வாய்ப்புள்ளது. ஏனெனில் புதியதாக வீட்டு கடன்கள் வாங்குவோருக்கு சில சலுகைகள் இருப்பதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நறுமணமிக்க எண்ணெய்கள்

பல்வேறு நறுமணமிக்க எண்ணெய்களான லாவெண்டர், டீ-ட்ரீ போன்ற மருத்துவகுணமிக்க எண்ணெய்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று நினைத்தோம். ஆனால் அப்படி ஏதும் இல்லை.

பயண செலவுகள்

உங்களுக்கு பயணம் மேற்கொள்வது மிகவும் விருப்பமா? இந்த நிதி ஆண்டில் பயணத்தை மேற்கொள்ள நினைக்கும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆர்கானிக் உணவுகள்

ஆர்கானிக உணவு மார்கெட்டுகளில் நல்ல வளர்ச்சி உள்ளது. இருந்தாலும் இந்த வருடம் ஆர்கானிக் உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Budget 2016: List Of Lifestyle Products To Get A Hit

Check the list of things that are going to get affected this year in budget 2016 release. Read on to know more how you are going to face the brunt.
Story first published: Monday, February 29, 2016, 13:22 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter