For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

20ஆம் நூற்றாண்டின் சிறந்த நண்பர்களாக திகழும் இந்திய பிரபலங்கள் - சிறப்பு பார்வை!!!

20ஆம் நூற்றாண்டின் சிறந்த நண்பர்களாக திகழும் இந்திய பிரபலங்கள் - சிறப்பு பார்வை!!!

|

நமது இந்திய வரலாற்றில் கடந்த ஓர் நூற்றாண்டில் நட்பிற்கு சிறந்து விளங்கிய பிரபலங்கள் சிலர் இருக்கிறார்கள். இவர்களது நட்பு மூழ்காத ஷிப் என்ற போதிலும், சில கருப்பு பக்கங்களை கடந்து வந்தவை ஆகும். சில சூழ்நிலைகள் நல்லவர்களை கூட நிலைகுலைந்து போக செய்யும் என்பார்கள் அல்லவா, அது போல தான் இவர்களது நட்பிலும் கூட அவ்வாறான சில சூழ்நிலைகள் உருவாகியிருந்தன....

இன்றைய தலைமுறைக்கு இவர்களது நட்புறவை பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால் தான் இன்றைய நண்பர்கள் தின சிறப்பு தொகுப்பாக இவர்களது நட்பை பற்றிய ஓர் சிறிய சிறப்பு பார்வை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எம்.ஜி.ஆர் - மு.கருணாநிதி

எம்.ஜி.ஆர் - மு.கருணாநிதி

திரைபயனத்தின் ஆரம்பித்தில் இருந்து அரசியல் பயணத்தின் ஆரம்பம் வரையிலும் சிறந்த நண்பர்களாக திகழ்ந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் மு. கருணாநிதி அவர்கள். கட்சியும், ஆட்சியும் இவர்களது நட்பில் சிறிய விரிசலை எற்படுத்தினும் கூட, எம்.ஜி.ஆர்-ன் இறப்பு செய்தியை கேட்டு துடிதுடித்து போனார் கலைஞர்.

ரஜினி - கமல்

ரஜினி - கமல்

ஒரே துறையில், இரு நண்பர்கள் நல்ல போட்டியுடன் வளர்ந்து, வெற்றிக் காண்பது என்பது காணக்கிடைக்காத செயல். ஆனால் தமிழ் திரையுலகிற்கு அது கிடைத்தது ரஜினி-கமல் என்று இருவர் மூலம்.

சச்சின் - காம்ப்ளே

சச்சின் - காம்ப்ளே

பள்ளி முதலே ஒரே துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு கிரிக்கெட் மைதானத்தில் காலடி வைத்தவர்கள் இவர்கள். பதின் வயது முதலே சாதனையை சுவைக்க ஆரம்பித்தது இந்த கிரிக்கெட் ஜோடி. சொல்ல போனால் சச்சினைவிட வல்லமை அதிகமானவர் காம்ப்ளே. பவுன்சர் பந்துகளின் சூழ்ச்சியால் வந்த வேகத்தில் அணியில் இருந்து விலகினார் என்று கூறப்படுகிறது.

மகேஷ் பூபதி - லியாண்டர் பயஸ்

மகேஷ் பூபதி - லியாண்டர் பயஸ்

உலக டென்னிஸ் அரங்கில் இந்தியாவின் பெயரை இடம்பெற செய்த ஓர் வெற்றி கூட்டணி. பிரெஞ்சு ஓபன் (1999, 20001), விம்பிள்டன் (1999) போட்டிகளில் வெற்றியும், பல உலகத்தர போட்டிகளில் ரன்னர்-அப்'ஆகவும் வந்திருக்கின்றனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக பிரிந்துவிட்டனர்.

மம்மூட்டி - மோகன் லால்

மம்மூட்டி - மோகன் லால்

தமிழ் திரையுலகிற்கு ரஜினி - கமல் என்றால், மலையாள திரையுலகில் மம்மூட்டி - மோகன் லால். இருவருமே நடிப்பு சூறாவளிகள். இருவருமே சிறந்த நடிப்புக்காக மூன்று முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார்கள். மோகன்லால் கூடுதலாக "Vanaprastham" படத்திற்காக, சிறந்த படத்திற்கான தேசிய விருதும் வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் என்ற முறையில்.

அமிதாப் - ரஜினி

அமிதாப் - ரஜினி

பில்லா, தீ, மாவீரன் போன்ற ரஜினியின் பல வெள்ளிவிழா படங்கள் அமிதாபின் ஹிந்தி பதிப்பு படங்கள் ஆகும். இதிலிருந்து இவர்களது நட்பு இன்று வரையிலும் நீடித்து வருகிறது.

இளையராஜா - வைரமுத்து - மணிரத்தினம்

இளையராஜா - வைரமுத்து - மணிரத்தினம்

பல்லவி அனுபல்லவி படத்தில் தொடங்கி - தளபதி வரை மணிரத்னம் அவர்களது முதல் 11 படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி அவர்கள். பிறகு. தனக்கு ஓர் மாற்று இசையமைப்பாளர் வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் ரகுமானிடம் சென்றார். இவர்களது கூட்டணியில், மௌன ராகம், அஞ்சலி, அக்னி நட்சத்திரம், நாயகன், தளபதி, சத்ரியன் என அனைத்து படங்களுமே மனதை விட்டு விலகாதவை. இவர்களது கூட்டணியில் தமிழ் படங்கள் அனைத்திலும் வைரமுத்து அவர்கள் பாடல்கள் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனோ, சில காரணங்களால் இந்த காவிய கூட்டணி மீண்டும் இணையவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Remarkable Friends Of India

Do you know about the most remarkable friends of India? take a look.
Desktop Bottom Promotion