இந்திய டிசைனர் வடிவமைத்த ஆடையை அணிந்து வந்த ஒபாமாவின் மனைவி!

By: Babu
Subscribe to Boldsky

குடியரசு தினமான இன்று அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார். அவருடன் அவரது மனைவி மிச்செல் ஒபாமா அவர்களும் வந்திருந்தார். அப்போது மிச்செல் ஒபாமா மிகவும் பிரத்யேகமான உடையை அணிந்து வந்திருந்தார். அவர் அணிந்து வந்த ஆடையை வடிவமைத்தவர் இந்தியாவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் பிபு மொஹபத்ரா ஆவார்.

உலகில் எத்தனையோ பிரபலமான டிசைனர்கள் இருந்தாலும், மிச்செல் ஒபாமா இந்திய டிசைனர் வடிவமைத்த ஆடையை அணிந்து வந்தது அவர் மீது நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்து இறங்கிய ஒபாமாவின் மனைவி நீல நிற பூ பிரிண்ட் போடப்பட்ட கருப்பு மற்றும் வெள்ளை கலந்த முழங்கால் அளவுள்ள உடையை அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு இவர் முழுக்கை கொண்ட நீல நிற பூப்பிரிண்ட் போடப்பட்ட கோட் அணிந்து வந்திருந்தார்.

Michelle Obama Wears Bibhu Mohapatra Dress At India Visit

ஒடிசா பகுதியைச் சேர்ந்த டிசைனர் பிபு பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் மிகவும் அழகாக உடையை டிசைன் செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிச்செல் ஒபாமா மிகவும் சிம்பிளாக வந்திருந்தார்.

English summary

Michelle Obama Wears Bibhu Mohapatra Dress At India Visit

Ditching her international designers, Michelle Obama picked up a Bibhu Mohapatra dress while landing yesterday at Palam airport.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter