For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெமீஸ் ஒரு மனநல அபாயமாக மாறி வருகிறதா? -அதிர்ச்சி!!!

|

மெமீஸ் என்பதும், மெமீஸ்களை உருவாக்குவதும் தான் தற்போதைய இளம் தலைமுறையினரை மிகவும் ஈர்க்கும் வண்ணமாக இருந்து வருகிறது. முக்கியமாக இப்படி ஒரு விஷயம் பூதாகரமாக வெளிப்பட காரணமாக இருப்பது அரசியலும், திரைப்படங்களும் தான். அதிலும் திரைப்பட நடிகர்களை கேலி செய்யவும், அவர்களது படங்களை பழித்து கூறவும் தான் இந்த மெமீஸ்கள் அதிகம் உருவாக்கப்படுகின்றன.

அணு சக்தி பேரழிவால் மக்களுக்கு ஏற்படும் அதிர்ச்சிகரமான பாதிப்புகள் - ஆய்வு தகவல்கள்!!!

ஓர் நடிகர் அல்லது திரைப்படம் வெற்றிப் பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி அதில் இருந்து ஓர் சிறு நூலிழை வாய்ப்பு கிடைத்தாலும் அதை எப்படி கேலி செய்யலாம் என்ற எண்ணம் தான் தற்போது இணையத்தில் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப நிறைய புகைப்பட எடிட்டிங் மொபைல் செயலிகளும் இருக்கின்றன.

ஆன்மிகம் மனரீதியான ஆரோக்கியத்தின் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

தற்போது பெரும்பாலான மக்களின் மனதில், ஏன் இவ்வளவு கேலி, கிண்டல்கள்? இதனால் என்ன மாற்றம் நடைப்பெற போகிறது? யாருக்கு என்ன லாபம்? இது ஒரு மன நோயாக மாறி வருகிறதா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இனி, மெமீஸ் ஒரு மனநல அபாயமாக மாறி வருகிறதா என்பதை பற்றி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதீத போதை

அதீத போதை

போதைகளில் பல விதம் இருக்கின்றன, மது, புகை, இச்சை (உடலுறவு), பணம், உணவு, விளையாட்டு மற்றும் இணையம். இதில் கடைசியாக இடம் பெற்றுள்ள இணையம் மற்றும் இதன் கீழ் இயங்கும் சமூக வலைத்தளம் தான் மிகவும் அபாயமாக மாறி வருகிறது.

எவ்வாறான மனநல மாற்றம்?

எவ்வாறான மனநல மாற்றம்?

பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஏதேனும் ஒரே மனநிலையில் நிலைபெற்று இருந்துவிடுவார்கள். எல்லா உணர்வையும் கண்டு சிரிப்பது, அல்லது அழுவது, கோபம் அடைவது, எந்த உணர்வும் இன்றி இருப்பது போன்றவற்றை நாம் எடுத்துக் காட்டாக பார்க்க இயலும்.

இதில் இணையம் எந்த வகை

இதில் இணையம் எந்த வகை

இணையம் என்பது நமது வாழ்வியலோடு 1990-களிலேயே கலந்துவிட்டது. ஆனால், சமூக இணையங்களின் வருகைக்கு பிறகு தான் இதற்கு அடிமையாகுதல் என்பது வளர ஆரம்பித்தது.

ஃபேஸ் புக்

ஃபேஸ் புக்

முக்கியமாக ஃபேஸ் புக் என்ற சமூக இணையத்தின் வருகைக்கு பின், சரியாக 2010-ஆம் ஆண்டிற்கு பிறகு இது மாபெரும் வளர்ச்சி அடைந்தது. நாம் இடும் பதிவுகளுக்கு கிடைக்கும் லைக்ஸ், கமெண்ட்டுகள் போன்றவை அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. இது மெல்ல, மெல்ல ஒருவரின் மனநிலையை சீர்குலைக்கவும், எதிர்வினை எண்ணங்கள் அதிகரிக்கவும் காரணமாக மாறியது.

மெமீஸ் எனும் அபாயம்

மெமீஸ் எனும் அபாயம்

லைக்ஸ் மற்றும் அதிக கமெண்ட்ஸ் போன்றவைக்காக, "My reaction" என்று ஆரம்பிக்கப்பட்ட பதிவுகள் தான் காலப்போக்கில் மெமீஸ்களாக மாறின. இதற்கு ஃபேஸ் புக் பயனாளிகளிடம் இருந்து பெரிய வரவேற்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.

அஞ்சான் மூலம் பிரபலம்

அஞ்சான் மூலம் பிரபலம்

அஞ்சான் குறித்த இயக்குனர் லிங்குசாமியின் பேட்டி ஒன்றின் காரணமாக மெமீஸ் உருவாக்கம் பூதாகரமாக வெடித்தது. மெமீஸ் உருவாக்குபவர்கள் என்றால் அவர்களை ஃபேஸ் புக்கில் பெரிய ஆளாக பார்ப்பது, பின் தொடர்வது போன்றவை நிகழ ஆரம்பித்தன.

மெமீஸ் என்பது மன நோயா?

மெமீஸ் என்பது மன நோயா?

நல்லவை, கேட்டவை, வெற்றி, தோல்வி என எது நடந்தாலும் அதை ஒரு கேளிக்கையாகவும், கேலி, கிண்டலாகவும் மட்டுமே பார்க்கும் சுபாவம் இதன் மூலம் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த வகையான போதை அல்லது அடிமையாகுதல், அந்த நபர்களின் மனதில் எதிர்வினை எண்ணங்களை அதிகப்படுத்துகிறது.

மனநல பாதிப்பா?

மனநல பாதிப்பா?

எந்த விஷயமாக இருந்தாலும் அதை கேலியாக மட்டும் பார்ப்பது, ஒருவரை குறி வைத்து பழித்து பேசுவது போன்றவை மனதில் எதிர்வினை எண்ணங்கள் அதிகரிக்க தூண்டுகிறது. இதற்கு மெமீஸ் உருவாக்குவது ஒரு மறைமுக காரணமாக இருக்கிறது. இதெல்லாம் கூட ஒருவரின் மனநிலையை பாதிக்குமா? எனில், ஆம் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். அளவுக்கு மீறும் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போன்றது தான் இதுவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Meme A Mental Hazard

Is Meme A Mental Hazard? take a look.
Desktop Bottom Promotion