For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்பகப் புற்றுநோயுடன் போராடிய பிரபலங்கள்!!

இங்கு மார்பக புற்றுநோயுடன் போராடிய பிரபலங்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

|

மார்பக புற்றுநோய்!!! உலகம் முழுதும் பெண்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கும் மாபெரும் நோய். நாம் இயற்கையை தவிர்த்து செயற்கையுடன் வாழ ஆரபிம்பித்ததன் விளைவாக நமக்கு கிடைத்த பரிசு தான் இந்த மார்பக புற்றுநோய்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்தரங்க இடத்தில் எசக்க பிசக்க அடிவாங்கிய பிரபலங்கள்!!!

பல்வேறு இரசாயனங்கள் கலந்த அழகுசாதனப் பொருட்களை தினமும் பயன்படுத்துவதனால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் என்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயம். நாள்பட, நாள்பட தான் அதன் விளைவு வெளித் தெரியும்.

பிரபலங்களுக்கு பின் இருக்கும் அந்தரங்க கருப்பு பக்கங்கள்!!!

திரையுலகில் தினமும் அலங்காரத்தின் பின்னணியில் வாழ்ந்து வரும் நடிகைகளை மட்டும் இது விட்டு வைக்குமா என்ன. ஆம், ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகைகள் மார்பக புற்றிநோயினால் பாதிக்கப்பட்டனர். அவர்களை பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏஞ்சலினா ஜூலி

ஏஞ்சலினா ஜூலி

கடந்த 2013 ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி ஏஞ்சலினா ஜூலியின் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி வெளிவந்தது. ஏஞ்சலினா ஜூலிக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டது என்று. இதன் பிறகு மார்பக புற்றுநோய் குறித்து நிறைய பிரச்சாரங்கள் செய்தார் ஏஞ்சலினா ஜூலி.

மும்தாஸ்

மும்தாஸ்

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் மும்தாஸ். கடந்த 2000 ஆண்டு இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவரது மன தைரியம், இவரை புற்றுநோயில் இருந்து மீண்டுவர உதவியது. பிறகு, புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து,"இறப்பால் கூட என்னை நெருங்க முடியாது" என்று பேசினார்.

நம்ரதா சிங் குஜ்ரால்

நம்ரதா சிங் குஜ்ரால்

இந்திய-அமெரிக்க நடிகையான நம்ரதா "காண்ட" (Kaante) என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2008ஆம் ஆண்டு இவருக்கு புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதற்கு பிறகு இவர் துவண்டுவிடவில்லை. மார்பக புற்றுநோய் குறித்து ஓர் நிமிட குறும்படத்தை எடுத்து 600 திரையரங்குகளில் வெளியிட்டார்.

கைலி மினாக் (Kylie Minogue)

கைலி மினாக் (Kylie Minogue)

ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நடிகையான கைலி மினாக்கிற்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக கடந்த 2005ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. கீமோதெரபி மூலம் வெற்றிகரமாக புற்றுநோயை வென்று வந்தார் இவர். இதன் பிறகு உலகம் முழுதும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சிந்தியா நிக்சன்

சிந்தியா நிக்சன்

"செக்ஸ் அண்ட் தி சிட்டி" எனும் பிரபல ஆங்கில படத்தின் நாயகி தான் இவர். கடந்த 2006 ஆம் ஆண்டு இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. ஏறத்தாழ ஏழு வாரங்கள் இவர் கதிர்வீச்சு சிகிச்சையில் இருந்து புற்றுநோயுடன் போராடி வென்று வந்தார்.

பார்பரா மோரி

பார்பரா மோரி

மெக்ஸிக்கன் நாட்டை சேர்ந்த இவர் பாலிவுட்டில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் உடன் தனது முதல் படத்தை நடித்தார். இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது என்பது இவரது 29வது வயதில் தெரிய வந்தது. பிறகு தான் அது மார்பக புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது. இதன் பிறகு, உலகம் முழுதும் பல இடங்களுக்கு சென்று நிறைய பிரச்சாரங்கள் செய்தார்.

ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா

தமிழ் சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்து, மாபெரும் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஸ்ரீவித்யாவிற்கு மார்பக புற்றுநோய் இருந்தது 2003ஆம் ஆண்டு தான் தெரிய வந்தது. தீவிர சிகிச்சைகள் அளித்த போதிலும் கூட 2006 ஆம் ஆண்டு அவரது உயிரைப் புற்றுநோய் பலிவாங்கியது.

கிறிஸ்டினா அபல்கேட்

கிறிஸ்டினா அபல்கேட்

ஆங்கில திரைப்பட நடிகையான கிறிஸ்டினா அபல்கேட்டிற்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது கடந்த 2008ஆம் ஆண்டு தெரிய வந்தது. இதன் பிறகு, புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து, புற்றுநோய்கான விழிப்புணர்வுக் குறித்து நிறைய வேலைகளில் ஈடுபட்டார் கிறிஸ்டினா அபல்கேட்.

மனிஷா கொய்ராலா

மனிஷா கொய்ராலா

பாலிவுட்டை தனது திறமையான நடிப்பால் கட்டிப்போட்ட நடிகை மனிஷா கொய்ராலாவிற்கு கருப்பைவாய் புற்றுநோய் ஏற்பட்டது. நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சையின் பலனில் குணமடைந்தார் மனிஷா. இவர் தன்னால் முடிந்த வரை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebrities Who Fought Against Breast Cancer

Do You Know About The Celebrities Who Fought Against Breast Cancer? Read Here.
Desktop Bottom Promotion