வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறி செல்ல நம்ப வேண்டிய, நம்ப கூடாத விஷயங்கள்!!!

Subscribe to Boldsky

வெற்றி அனைவரும் வேண்டும் வரம். தோல்வி அனைவரும் வேண்டா வரம். தோல்வியை சந்திக்காத வெற்றியில் சுவாரஸ்யம் இருப்பதில்லை. நூறு மீட்டர் ஓட்ட பந்தயத்தில் நீங்கள் ஓடும் முன்னர், மண்டியிட்டு அமர்ந்திருக்க வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டாலே வாழ்க்கையில் வெற்றி என்றால் என்ன என்ற புரிதல் பிறந்துவிடும்.

எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவர நீங்கள் மேற்கொள்ள வேண்டியவை!!!

வெற்றியும் தோல்வியும் நமது இரு கால்களை போல. மாறி மாறி அடி எடுத்து வைத்தால் தான் முன்னேறி செல்ல முடியும். இல்லையெனில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். நம்பிக்கை அனைவருக்கும் வேண்டிய ஒன்று. ஆனால், வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறி செல்ல எதை நம்ப வேண்டும், நம்ப கூடாத என்றும் அறிந்துக் கொள்ள வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தகவல் 1

தன்னம்பிக்கை மிகவும் முக்கியம், டார்கெட்டை துரத்தி செல்லாமல், டார்கெட் உங்களை துரத்த செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த வேலையை நீங்கள் செய்து வந்தால் ஒரு போதும் சோர்வு ஏற்படாது. முதலில் உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய தொடங்குங்கள். வெற்றிகள் உங்களது காலுக்கு கீழ் அணிவகுக்கும்.

தகவல் 2

பணம் வேறு, சந்தோஷம் வேறு என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும். பலரும் பணம் இருந்தால் சந்தோஷம் வந்துவிடும் என தங்களுக்கு ஒத்துவராத வேலைகளை செய்து வருகிறார்கள். பணம் நிலையற்ற செல்வாக்கை மட்டுமே தரும். சந்தோஷம் உங்கள் கையில் தான் இருக்கிறது. பணத்தை ஏந்துவதற்காக உங்கள் கையில் இருக்கும் சந்தோசத்தை கீழே போட்டு உடைத்துவிட வேண்டாம்.

தகவல் 3

பெரும்பாலும் நம்மில் பலர் செய்யும் தவறு, சிறிய விஷயங்களில் கோட்டை விடுவது. எனவே, சிறிது, பெரிது என ஏதும் இல்லை அனைத்தும் சமம் என்பதை உணரத் தொடங்குங்கள்.

தகவல் 4

நீங்கள் விரும்பும் ஒன்றையே நீங்கள் பயந்து, பயந்து விரும்பினால். பின் வேறு எதில் நீங்கள் தைரியமாக செயல்பட முடியும். எங்கு பயம் மறைகிறதோ அங்கு தான் மகிழ்ச்சி பிறக்கும்.

தகவல் 5

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அந்த நிலையை நீங்கள் நம்ப வேண்டும். துன்பம், இன்பம், சமநிலை என உங்கள் வாழ்க்கையில் எந்த சூழல் ஏற்பட்டாலும் நீங்கள் உங்கள் நிலையை, உள்ளது உள்ளபடி நம்ப வேண்டும். தோல்வியை ஒப்புக் கொண்டால் தான் வெற்றியை அடுத்த முறையாவது ருசிக்க முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

தகவல் 6

மற்றவரிடம் உதவு கேட்கும் முன்னர், அதை ஏன் நான் செய்ய முடியாது என்ற என்ன வேண்டும். முதலில் உங்களிடம் ஒருமுறை கேள்வியும், உதவியும் கேளுங்கள். மற்றவரது உதவியும் வேண்டும் தான். ஆனால், அதற்கு முன்பு உங்களால் முடியும் என்ற எண்ணம் வேண்டும்.

தகவல் 7

வாய்ப்புகள் சிலருக்கு அமையும், சிலர் அமைத்துக் கொள்ள வேண்டும். அடுத்துமுறை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் வேண்டாம். வாழ்க்கை வீடியோ கேம் அல்ல.

தகவல் 8

எந்த ஒரு காரியமும் தேவையின்றி நடப்பது இல்லை. எனவே, தோல்வி ஆயினும், வெற்றி ஆயினும் எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் வேண்டும். மனதை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்று.

தகவல் 9

நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் எனில், முதலில் எதிர்மறை எண்ணங்களை விட்டொழிக்க வேண்டும். உங்களது வெற்றியை மறைக்கும் பெரிய தடை, முடியாது என்ற எண்ணம் தான்.

தகவல் 10

உதவி கிடைத்து பலனடைந்தவுடன் நன்றி மறந்துவிட வேண்டாம். மீண்டும் ஓர் நாள் உங்களது உதவி அவருக்கும், அவருடைய உதவி உங்களுக்கும் இதைவிட பெரிய அளவில் தேவைப்படும் தருணங்கள் ஏற்படும். நன்றி மறப்பது முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை.

தகவல் 11

யாராலும் 24 x 7, 100% பயனை தர முடியாது என்பதை உணருங்கள். உங்களது வேலையில் சிறிய தொய்வு ஏற்படுகிறது என்றால் கூட ஓய்வெடுங்கள். மேலாண்மை உங்களது சிறிய தோய்வை கூட பெரிய தோல்வி என்று தான் கூறும். ஓய்வு அனைவருக்கும் முக்கியமான ஒன்று.

தகவல் 12

உங்களை ஒருவர் முந்தி செல்கிறார் என்றால் அவரை முன்னேறி செல்ல பயிற்சி மேற்கொள்ளுங்கள். அவரது முன்னேற்றத்தை தடுக்க முயற்சிக்க வேண்டாம். இது, உங்களது முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்.

தகவல் 13

காரத்தை சுவைக்காது ஒருவரால் என்றும் இனிப்பின் முழு சுவை என்ன என்பதை உணர முடியாது. அதே போல தான் வெற்றியும், தோல்வியும். வாழ்க்கையை முழுமையாக சுவைக்க வெற்றிக்கு நிகரான தோல்வியையும் சந்திக்க வேண்டும். அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Believes You Should Accept For A Better Promotion

You should believe on somethings to achieve your way and to keep your position higher. Take a look.
Story first published: Tuesday, September 1, 2015, 13:44 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter