அழகிய தீவாக மாறிய சீனாவின் "பேய்" நகரம் : இயற்கை செழிப்பின் மாயாஜாலம்!!!

By: John
Subscribe to Boldsky

சீனாவின் ஓர் கடற்கரை தீவு தான் அந்த பகுதி. மீன் பிடித்தல் தான் அப்பகுதியின் முக்கிய தொழில். சரியான வியாபாரம் இல்லாதால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் அருகாமையில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு குடிப் பெயர்ந்து போய்விட்டனர்.

பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய வேடிக்கையான 10 தகவல்கள்!!!

காலப்போக்கில் ஆட்களே இல்லாமல் வெறிச்சோடி இருந்ததால், அந்த பகுதி பேய் நகரம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், இயற்கையின் மாயஜாலத்தினால், இன்று சேங்ஸி (Shengsi) எனப்படும் அந்த தீவு பச்சைப் பசேலென காட்சியளிக்கிறது.

மக்கள் இறந்த பிறகு பேயாவதற்கான சில காரணங்கள்!!!

யாரும் இனி இங்கு குடிப் பெயர்ந்து வர முடியாது. ஆனால், இது ஓர் அழகிய சுற்றுலா தளமாக மாற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆயினும், மக்கள் இன்றி இருந்த காரணத்தினால், பேய் நகரம் என்று கூறப்பட்டு வந்ததால் என்னவோ, அதிகமாக யாரும் இங்கு வர ஆர்வம் காட்டுவதில்லை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அனாதையாக இருக்கும் பகுதி

பச்சை நிற போர்வை போத்தியது போல அழகாக இருப்பினும், மக்கள் ஆள் நடமாட்டம் இன்றி அனாதையாக இருக்கிறது இந்த தீவு.

சுவர்களெங்கும் பச்சை நிறம்

ஒரு சென்டிமீட்டர் அளவு கூட அளவு விடாமல், டைலர் கட்சிதமாக துணி தைத்தது போல பச்சை செடிகள் கட்டிடங்களை அரவணைத்து இருக்கிறது.

பேய் நகரம் - சோலைவனம்

பேய் நகரில் இருந்து, வியக்க வைக்கும் அளவில் ஓர் இரம்மியமான சோலைவனமாக மாறி காட்சியளிக்கிறது இந்த தீவு.

சுவர்களிலும் முளைத்த செடிகள்

சுவர்களின் துவாரங்கள், விரிசல்களில் கூட செய்தால் முளைத்திருக்கின்றன.

புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடம்

இயற்கையை விரும்பும் புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த தீவு ஓர் வரபிரசாதம். 

தீவின் வரைப்படம்

சீனாவின் கடற்கரை பகுதியில் இருக்கும் சேங்ஸி (Shengsi)தீவின் வரைப்படம்

கடற்கரை ஒட்டிய அழகு தீவு

ஹாலிவுட் படங்களில் கிராபிக்ஸ் செய்து காண்பித்தால் கூட இப்படி ஓர் அழகை கொண்டுவர முடியாது போல. இயற்கை செய்த அற்புதம்.

இயற்கையின் ஓவியம்

ஒரு வேளை, மனிதர்கள் அழிந்துவிட்டால், பூமி திரும்பவும் அழகாக மாறிவிடும் என்பதற்கு இந்த தீவு ஓர் நல்ல உதாரணம்.

பாதைகள் எங்கும் புல்வெளி

தீவினுள் பெரும்பாலும் கற்களால் ஆன பாதைகளும், படிக்கட்டுகளும் தான் இருக்கிறது, அவைகளிலும் கூட புல், செடிகள் முளைத்திருக்கின்றன.

வீடுகளின் வெளிப்புற தோற்றம்

தீவில் இருக்கும் வீடுகளின் வெளிப்புற தோற்றம் இவை.

சொர்க்க வாசல் இப்படி தான் இருக்குமோ..

ஒருவேளை சொர்கத்திற்கு செல்லும் வழி கூட இவ்வாறு தான் மிக அழகாக இருக்கும் போல. இவ்வளவு அழகான இடத்தை காண மக்கள் வராமல், அஞ்சி நடுங்குவது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

மீண்டும் மக்கள் வராமல் இருப்பதே நல்லது

மீண்டும் மக்கள் வந்தால் ஒருவேளை, இந்த தீவு பழையபடி பேய் (மக்கள்) நகரமாக கூட மாறிவிடலாம். எனவே, மக்கள் வராமல் இருப்பதே நல்லது. ஆயினும், இந்த அழகை காண ஒருமுறையாவது இந்த தீவிற்கு சென்று வர வேண்டும். மற்றும் இந்த இடத்தை மீட்டெடுக்க சீனா அரசு பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Abandoned Fishing Village Became A Green Wonderland

China's seaside ghost town: Stunning images show how an abandoned fishing village became a green wonderland swallowed up by mother nature.
Story first published: Saturday, July 11, 2015, 11:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter