For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமண நாளின் போது அழுத்தமில்லாமல் இருப்பதற்கான 6 எளிய தந்திரங்கள்!!!

By Ashok CR
|

திருமணம் என்ற நாளை எண்ணி எத்தனை ஆண்களும், பெண்களும் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். திருமணத்தின் போது அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும், யார் யாரை அழைக்க வேண்டும், எப்படி அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என பல விதமான கற்பனைகளில் மூழ்கியிருப்பார்கள். அந்த கனவு நாளை எண்ணி ஒவ்வொரு நொடியும் காத்திருப்பார்கள். ஒரு வழியாக அந்த நாளும் வந்து சேரும். நினைத்தப்படி அனைத்தையும் செய்வோம். ஆனால் நம்மில் பலருக்கும் திருமண நாளின் போது ஒரு பிரச்சனை காத்திருக்கும். அது தான் நடுக்கமும் அழுத்தமும்!

கடைசி நிமிட வேடிக்கை மற்றும் அவதி அவதியான திருமண ஏற்பாடுகள் உங்கள் குடும்ப உறுப்பினர்களை மட்டுமல்லாது உங்களையும் கூட டென்ஷனாக்கிவிடும். ஒவ்வொரு மணப்பெண்ணும் தன் திருமணத்தை மிகச்சிறப்பாக நடக்க வேண்டும் என விரும்புவார்கள். அன்று நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். மணப்பெண்களே, இந்த அழுத்தமும் டென்ஷனும் உங்கள் முகத்தில் தெரிய ஆரம்பித்தால், அது உங்கள் அழகிய தோற்றத்தை கெடுத்துவிடும். இதனால் உங்கள் திருமண நாள் புகைப்படங்களிலும் கூட உங்கள் முகம் சரியாக விழுந்திருக்காது. இந்த நிலைமையை தவிர்க்க, திருமண நாளின் போது அமைதியாகவும், அழுத்தம் இல்லாமலும் இருக்க சில எளிய முறைகளைப் பின்பற்றுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீர்ச்சத்துடன் இருங்கள்

நீர்ச்சத்துடன் இருங்கள்

நீங்கள் கோடைக்காலத்தில் திருமணம் செய்கிறீர்களோ அல்லது குளிர் காலத்தில் திருமணம் செய்கிறீர்களோ, நீங்கள் நீர்ச்சத்தை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திருமணத்திற்கு முன் நடக்கும் சடங்குகளால் நீங்கள் சோர்வடைந்திருப்பீர்கள். அதனால் தண்ணீர், நற்பதமான பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை நாள் முழுவதும் குடித்து நீர்ச்சத்துடன் இருங்கள். இதனால் ஆற்றல் திறனுடன் இருப்பதோடு, பொழிவான சருமத்துடனும் இருப்பீர்கள். தண்ணீருக்கும், மன அழுத்தம் குறைவிற்கும் நேரடி தொடர்பு உள்ளது என ஆய்வுகளும் கூறுகிறது.

எப்போதும் உங்களருகில் யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள்

எப்போதும் உங்களருகில் யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள்

மணப்பெண்ணான உங்களால் அனைத்து வேலையையும் செய்ய முடியாது. அதனால் திருமண வைபவம் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள். அதனால் எப்போதுமே உங்களருகில் நண்பர் அல்லது சொந்தக்கரார்களை வைத்துக் கொண்டால், திருமண நாளின் போது நீங்கள் அமைதியாக இருக்கலாம். உங்களுக்கு தேவையானதை எல்லாம் உங்களுக்கு உதவியாக இருக்கும் நபரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். இதுப்போக பதற்றத்தை குறைக்க உங்களுடன் யாராவது துணைக்கு இருந்தால் நல்லது தானே!

லேசான திருமண ஆடைகளை தேர்ந்தெடுங்கள்

லேசான திருமண ஆடைகளை தேர்ந்தெடுங்கள்

மிக கனமான லெஹெங்கா அல்லது புடவையை உங்கள் திருமண நாளின் போது நீங்கள் அணிய திட்டமிட்டிருந்தால் கண்டிப்பாக அதுவே கூட உங்களுக்கு ஒரு பிரச்சனையாகலாம். திருமண வைபவம் சிறிது நேரமே கூட ஆனாலும், அப்படிப்பட்ட கனமான ஆடைகளை அணிவது சில மணப்பெண்களுக்கு தோதாக இருக்காது. நீங்களும் அப்படிப்பட்ட பெண் என்றால், திருமண நாளன்று அணிய லேசான ஆடைகளை தேர்ந்தெடுங்கள். அதற்கேற்ற அணிகலன்களையும் தேர்ந்தெடுத்து அழகாக காட்சியளியுங்கள்.

நேர மேலாண்மை

நேர மேலாண்மை

நேர மேலாண்மை என்பது அழுத்தம் இல்லாத திருமணத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாது, அழுத்தமில்லாத வாழ்க்கைக்கும் உதவும். எந்த ஒரு விஷயத்திலும் தாமதம் ஏற்பட்டால், அது நமக்கு டென்ஷனை அதிகரிக்கச் செய்யும். அதனால் திருமண நாளின் போது, காலை எழுந்தது முதல் நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒரு பட்டியலாக தயார் செய்து, அனைத்திற்கும் நேரத்தை ஒதுக்குங்கள். அதனை அந்த நேரத்திற்கு சரியாக செயல்படுத்தினால், திருமணத்திற்கு கிளம்புவதற்கு முன்பு கூட ஓய்வெடுக்க சற்று நேரம் கிடைக்கும்.

ஆரம்பம் முதலேயே திருமண ஏற்பாடுகளில் ஈடுபடுங்கள்

ஆரம்பம் முதலேயே திருமண ஏற்பாடுகளில் ஈடுபடுங்கள்

உங்கள் விருப்பங்களை திருமண ஏற்பாட்டாளர்களிடம் கடைசி நிமிடத்தில் விவரிக்க முயற்சி செய்யாதீர்கள். அலங்காரம், சமையல், பூவலங்காரம் போன்றவைகள் உங்களுக்கு பிடித்ததை போல் இல்லை என்றால், திருமண ஏற்பாடுகள் நடக்கும் போது நீங்களும் அதில் ஈடுபடுங்கள். உங்களின் விருப்பு வெறுப்புகளை ஏற்பாட்டாளர்களிடம் முன்னதாகவே தெரிவித்து விடுங்கள். கடைசி நிமிடம் குறை கூறினால் உங்களுக்கு டென்ஷன் ஆவதோடு ஏற்பாட்டாளர்களுக்கும் கஷ்டம் தானே.

பிரச்சனை ஏற்படும் விஷயங்களில் கவனம் செலுத்தவும்

பிரச்சனை ஏற்படும் விஷயங்களில் கவனம் செலுத்தவும்

கடைசி நிமிடத்தில் பிரச்சனைகள் உருவாக காரணமாக இருக்கும் அனைத்து விஷயங்களையும் கருத வேண்டும். அதை எப்படி நிவர்த்தி செய்வது என்பதன் மீதும் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பை அளியுங்கள். இதனால் அனைத்து வேலைகளும் டென்ஷன் இல்லாமல் நடைபெறும்.

உங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நாளே உங்கள் திருமண நாள் தான். அதனால் எந்த ஒரு காரணத்திற்காகவும் அது கெட்டு விடக்கூடாது. அதனால் அழுத்தத்தை போக்கும் இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்துங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Simple Tricks To Stay Stress-Free On Your Wedding Day

Here are some easy steps that would help you stay calm and stress-free on your wedding!
Desktop Bottom Promotion