For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாரதருக்கும் காதலுண்டு! தெரியுமா உங்களுக்கு…

By Boopathi Lakshmanan
|

இந்திய புராணங்களில் மிகவும் பிரசித்தமானவர் நாரத முனிவர். இவர் கடவுள்களுக்கும், அசுரர்களுககும் இடையில் சென்று தன்னுடைய ‘நாரத' வேலைகளை எப்பொழுதும் செய்து வருவார். வாழ்நாள் முழுவதுமே பிரம்மச்சாரியாக வாழ்ந்த நாரதருக்கும், ஒரு இளவரசியிடம் காதல் கொண்ட கதை உண்டென்பது பலருக்கும் தெரியாது. நாரதர் அந்த இளவரசியை மணந்து கொள்ள விரும்பினார் என்பதும் கூட உண்மை தான்.

பலருக்கு தெரியாத சிவபெருமானின் 5 காதல் கதைகள்!!!

எனினும், அந்த இளவரசியை மணந்து கொள்ள முடியாத சூழல் எழுந்த போது, மகா விஷ்ணுக்கு கோபத்துடன் சாபம் கொடுத்தார் நாரதர். அவருடைய காதல் தோல்வியடையக் காரணம் என்ன? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குறிப்பு: கோஸ்வாமி துளசிதாஸ் எழுதிய இராம்சரிதமனாஸ் என்ற நூலில் இந்த உண்மைக் கதை நிகழ்வை நீங்கள் காண முடியும்.

கிருஷ்ணரின் ராசலீலை பற்றிய அதிர்ச்சியூட்டும் தொன்மங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தபோவனத்தில் நாரதரின் தவம்

தபோவனத்தில் நாரதரின் தவம்

ஒருநாள் நாரதர், சிவபெருமானின் அருள் பெற்ற ஒரு சோலைக்கு சென்றார். இந்த தபோவனத்தில் அமர்ந்து தவம் செய்தால், உன்னை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று சிவபெருமானும் அருள் கொடுத்திருந்தார். எனவே, நாரதர் அங்கே சென்று தவமிருக்கத் தொடங்கினார்.

தவத்தைக் கலைக்கும் இந்திரனின் முயற்சி

தவத்தைக் கலைக்கும் இந்திரனின் முயற்சி

நாரதரின் கடும் தவத்தைக் கண்ட இந்திரன், தன்னுடைய சகாக்களான அக்னி, வருணன் மற்றும் வாயு தேவர்களை அனுப்பி நாரதரின் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தார். மூவரும் தேவலோகத்திலிருந்து வந்து, வருண பகவான் மழை பொழிவித்தார் - நாரதர் தவம் கலையவில்லை. வாயு பகவான் பெரும் காற்றைக் கொண்டு வந்தார் - தவம் கலையவில்லை. அக்னியாரும் நெருப்பைக் கொண்டு வந்தார் - அவராலும் தவத்தைக் கலைக்க முடியவில்லை. இவை அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது போல், நாரதரின் தவம் தொடர்ந்து வந்தது.

தேவலோக பேரழகிகளின் முயற்சி

தேவலோக பேரழகிகளின் முயற்சி

அதன் பின்னர், காதலின் கடவுளான காம தேவரை அழைத்து நாரதரின் தவத்தை கலைக்க முயன்றார் இந்திரர். நாரதரின் தவத்தைக் கலைக்க நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று இந்திரர் காம தேவரிடம் கேட்டுக் கொண்டார். எனவே, தேவலோக பேரழகிகளான ரதி, அப்சரஸ் போன்றவர்களை அவர் பயன்படுத்தினார்.

காம தேவரின் முயற்சி

காம தேவரின் முயற்சி

பின்னர் காம தேவரே இறங்கி வந்து, தன்னுடைய சக்தியை நேரடியாக பயன்படுத்தினார். துன்னைச் சுற்றிலும் பேரழகிகளின் நடனம், வசந்தத்தின் வாசம் மற்றும் தேனீக்களின் ரீங்காரம், பறவைகளின் கானங்கள் என இருந்தாலும் நாரதரின் தவத்தை யாராலும் கலைக்க முடியவில்லை. காம தேவரும் தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டியதயிற்று.

தவத்தை வெற்றிகரமாக முடித்த நாரதர்

தவத்தை வெற்றிகரமாக முடித்த நாரதர்

இந்நேரத்தில் விழித்தெழுந்த நாரதர், "நான் அனைத்து கடவுள்களையும் தோற்கடித்து விட்டேன், காதலின் கடவுளானவரையும் கூட நான் தோற்கடித்து விட்டேன், நான் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவன்", என்று குறிப்பிட்டார். மிகுந்த மகிழ்ச்சியுடனும், செருக்குடனும் நாரதர் சிவபெருமானைப் பார்க்க கைலாசத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.

நாரதரின் கண்ணை மறைத்த தற்பெருமை

நாரதரின் கண்ணை மறைத்த தற்பெருமை

நாரதரின் இந்த மனநிலையைக் கண்ட சிவபெருமான், இதைப் பற்றி விஷ்ணுவிடம் எதையும் சொல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். ஆனால், அந்த அறிவுரையைக் கண்டு கொள்ளாத நாரதர், விஷ்ணுவிடம் இதைப் பற்றி தற்பெருமையுடன் சொல்லி விட்டார். இதைக் கேட்ட விஷ்ணு ‘பாதுகாப்பாக இரு' என்று மட்டும் பதிலளித்தார். நாரதரின் தற்பெருமை அவருடைய கண்ணை மறைக்க, விஷ்ணுவின் எச்சரிக்கையையும் அவர் பொருட்படுத்தவில்லை. எனவே, நான் காதலின் கடவுளை வீழ்த்தி விட்டேன் என்றும், தான் அன்பு, காமம் மற்றும் ஆசைகளிலிருந்து விடுபட்டவர் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே, விஷ்ணுவின் இடத்திலிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.

அழகில் மயங்கிய நாரதர்

அழகில் மயங்கிய நாரதர்

அவர் திரும்பிச் செல்லும் வழியில் ஒரு அழகிய நகரத்தைக் கண்டார், அந்நகரத்தை ஆண்டவரின் பெயர் ஷீலாநிதி என்பதாகும். நாரதர் அந்நகரத்தின் அரண்மனையை அடைந்த போது, அரசரின் மகளான ஸ்ரீமதியின் சுயம்வரம் நடக்கவிருக்கும் தகவலை அறிந்தார். ஸ்ரீமதியைக் கண்ட நாரதர், அவளுடைய அழகில் மயங்கி விட்டார்.

கைரேகை பார்க்கும் நாரதர்

கைரேகை பார்க்கும் நாரதர்

நாரதரைக் கண்ட ஷீலாநிதி தன்னுடைய மகளை நாரதருக்கு அருகில் அமருமாறு சொன்னார். பிறகு, தன்னுடைய மகளின் கைரேகையைப் பார்த்து, அவளுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லுமாறு நாரதரைக் கேட்டுக் கொண்டார். அவளுடைய கைரேகையைப் பார்த்த நாரதர், அந்த பெண்ணை மணந்து கொள்பவர், மூன்று உலகங்களுக்கும் அரசராகவும், கடவுள்களைப் போல வாழ்பவராகவும் இருப்பதை அறிந்தார்.

திருமணம் செய்ய முடிவு செய்த நாரதர்

திருமணம் செய்ய முடிவு செய்த நாரதர்

ஏற்கனவே இளவரியின் மீது மையல் கொண்டிருந்த நாரதருக்கு, கடவுளாகும் ஆசையும் வந்து விட்டது. எனவே, மிகுந்த மகிழ்ச்சியுடன் இளவரசியை மணந்து கொள்வதென முடிவெடுத்து விட்டார்.

விஷ்ணுவிடம் வரம் கேட்ட நாரதர்

விஷ்ணுவிடம் வரம் கேட்ட நாரதர்

அவளை மணந்து கொள்ள விரும்பியதால், விஷ்ணுவின் அழகைப் பெற திட்டமிட்டார் நாரதர். அவர் மகா விஷ்ணுவின் இடத்திற்கு சென்று, அவர் முன் வணங்கி, தன்னுடைய முகத்தை ‘ஹரி'-யைப் போல காட்சி தரச் செய்து, அந்த இளவரசியை கவரச் செய்ய உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விஷ்ணு இந்த வரத்தை நாரதருக்குக் கொடுத்து விட்டார்.

குரங்கு முகத்தைப் பெற்ற நாதரர்

குரங்கு முகத்தைப் பெற்ற நாதரர்

துரதிருஷ்டவசமாக, விஷ்ணுவின் மற்றொரு பெயரான ஹரிக்கு குரங்கு என்று அர்த்தம் உள்ளதை நாரதர் அறிந்திருக்கவில்லை.

சுயம்வரத்தில் அவமானம் அடைந்த நாரதர்

சுயம்வரத்தில் அவமானம் அடைந்த நாரதர்

அனைத்து அரசர்கள் மற்றும் இளவரசர்களும் வீற்றிருந்த அவைக்குள், நாரதர் நுழைந்த போது, அங்கிருக்கும் இளவரசர்களிலேயே தான் தான் மிகவும் அழகானவர் என்றும், இளவரசி கண்டிப்பாக தன்னைத் தான்; மணமகனாக தேர்ந்தெடுப்பார் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார். மாலையைக் கையில் ஏந்திய படி ஒவ்வொரு இளவரசரையும் பார்த்து கடந்து வந்து கொண்டிருந்த இளவரசி, நாரதரைப் பார்க்கும் முறை வந்த போது சிரிக்கத் தொடங்கி விட்டாள்! அவையிலிருந்த அனைவரும் நாரதரைக் கேலி செய்து, சிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

 விஷ்ணுவிற்கு மாலையிட்ட இளவரசி

விஷ்ணுவிற்கு மாலையிட்ட இளவரசி

நாரதரையும் கடந்து சென்ற இளவரசி, வரிசையின் இறுதியில் அமர்ந்திருந்த மகா விஷ்ணுவைக் கண்டு அவருக்கே மாலையிட்டு விட்டாள்.

ஏமாற்றமடைந்த நாரதர்

ஏமாற்றமடைந்த நாரதர்

ஏமாற்றமடைந்த நாரதர், இளவரசியை பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொண்டு, அவள் தவறு செய்வதாகக் கூறினார். இங்கிருப்பவர்களிலேயே தான் தான் மிகவும் அழகானவர் என்றும், மாலையை தனக்குத் தான் போட வேண்டும் என்றும் அவளிடம் நாரதர் கூறினார். அனைவரும் நாரதரைப் பார்த்து சிரித்து விட்டு, கண்ணாடியைப் போய்ப் பாரும் நாரதரே என்றார்கள்.

விஷ்ணுவிற்கே சாபம்விட்ட நாரதர்

விஷ்ணுவிற்கே சாபம்விட்ட நாரதர்

நாரதர் கண்ணாடியைப் பார்த்த போது தன்னுடைய முகம் குரங்கின் முகமாக இருப்பதைக் கண்டார். மிகவும் கோபத்துடன், விஷ்ணுவைத் திட்டித் தீர்த்து விட நாரதர் சென்றார். "விஷ்ணு, என்னை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும் மனிதனாக்குமாறு நான் உங்களிடம் கேட்டேன், அதன் மூலம் நான் விரும்பியவளின் இதயத்தைப் பெற முடியும் மற்றும் காதலில் வெல்ல முடியும் என்பதற்காக, ஆனால் நீங்கள் என்னை குரங்காகத் தோன்றச் செய்து விட்டீர்கள். என்னுடைய காதலை நான் இழந்து விட்டேன், நான் உங்களுக்கு சாபம் விடப் போகிறேன்" என்றார்.

நாரதரின் சாபம்

நாரதரின் சாபம்

விஷ்ணு தன்னுடைய ஆசைக்குரியவளை இழக்க வேண்டும் மற்றும் அவளிடமிருந்து பிரிந்திருக்கும் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் நாரதர் சாபம் கொடுத்தார். அவளை மீண்டும் பெற விரும்பினால், நீ குரங்குகளுடன் நட்புறவு கொள்ள வேண்டும், அவர்கள் தான் உனக்கு உதவியாக இருப்பார்கள் மற்றும் உன்னுடைய பாதுகாவலர்களாகவும், பக்தர்களாகவும் இருப்பார்கள் என்பது தான் அந்த சாபம்.

நாரதரின் சாபம்

நாரதரின் சாபம்

இந்த சாபத்தைப் பெற்றவுடன் விஷ்ணு புன்னகை பூத்தார். அந்த சாபத்தை விஷ்ணு ஏற்றுக் கொண்டார். தான் மனிதனாக அவதாரம் எடுக்கவும் மற்றும் அப்பொழுது லட்சுமி தேவி தன்னுடைய மனைவியாக இருக்கவும் கூடும் என்றும் ஏற்றுக் கொண்டார். இந்த அவதாரத்தின் போது, மனைவியை பிரிந்திருக்கும் துயரத்தை அவர் அடைவார் என்பதும் அவருக்குத் தெரியும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Narada Muni Cursed Lord Vishnu?

Narad Muni is a popular mythological character of Indian mythology. He always remained in limelight among Gods and Demons for gossiping and spreading rumours. However, he was unable to marry her, which angered him a lot and made him curse Lord Vishnu. Why did he curse Vishnu; why was he unable to marry the princess? Click on this slide show for the entire incident….
Desktop Bottom Promotion