For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்துக்கள் ஏன் மாட்டிறைச்சி உண்ணுவதை பாவமாக கருதுகின்றனர்?

By Ashok CR
|

இந்துக்கள் மாட்டிறைச்சி உண்ணுவதை தவிர்த்து வருவது நீண்ட கால மரபாகும். இந்து மதத்தில் இத்தகைய மரபு ஏன் சூழப்பட்டிருக்கிறது என்ற கேள்வி இப்போது கூட பலருக்கு தோன்றும். பல நூறு வருடங்களுக்கு முன், இந்து மதம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, மாட்டிற்கு மரியாதை கொடுத்து வந்துள்ளனர். அதனை மரியாதையின் அடையாளமாக கருதி வந்துள்ளனர். இந்துக்கள் ஏன் மாட்டிறைச்சிகளை உண்ணுவதில்லை என்பதை பற்றியும் மாடுகளை ஏன் மதிப்பிற்குரிய உயிரினமாக பார்க்கின்றனர் என்பதை பற்றியும் தான் பார்க்க போகிறோம்.

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்!

இந்து மதத்தில் மாடுகளை மதிப்பது தொடர்பாக பல சமயஞ்சார்ந்த நம்பிக்கைகள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. மாடு என்பது வாழ்க்கையின் சின்னமாக கருதப்படுகிறது. மேலும் வளமையின் உதாரணமாக பார்க்கப்படுகிறது. சரி, அது ஏன் என்பதை பற்றியும், இந்து மதத்தில் அதை ஏன் புனிதமாக கருதுகின்றனர் என்பதைப் பற்றியும், இந்து மதம் தொடங்கி இத்தனை ஆண்டு காலம் ஆனாலும் இப்போதும் அதனை ஏன் கடைப்பிடிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் விலாவரியாக பார்க்கலாம்.

தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிருஷ்ண பரமாத்மா மாடு மேய்ப்பவராக இருந்தவர்

கிருஷ்ண பரமாத்மா மாடு மேய்ப்பவராக இருந்தவர்

இந்து மதத்தில் முக்கிய பிரமுகராக கருதப்படும் கிருஷ்ண பரமாத்மாவை, பண்டைய சமயத்திரு நூல்கள் ஒரு மாடு மேய்ப்பாளராக சித்தரித்துள்ளது. அதனால் கிருஷண பரமாத்மாவை வணங்குபவர்கள் மாடுகளை மிகவும் புனிதமாக பார்க்கின்றனர். கிருஷ்ணரை பால கோபாலன் என்றும் அழைப்பார்கள். அதற்கு "மாடுகளை காக்கும் பாலகன்" என அர்த்தமாகும்.

ரிக் வேதம்

ரிக் வேதம்

வேதங்களில் மிக பழமையான ரிக் வேதத்தில், தூய்மையையும் தரத்தையும் குறிக்கும் ஒரு புனிதமான சின்னமாக மாடுகளை போற்றியுள்ளனர். இந்து மதத்தில் மாடுகளை புனிதமாக கருதவும், அவைகளை உண்ணாமல் இருக்கவும் இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

தாய்வழி மரபை கொண்ட உயிரினம்

தாய்வழி மரபை கொண்ட உயிரினம்

இந்த உலகில், தாய்வழி மரபை கொண்ட உயிரினமாக மாடுகளை சித்தரித்துள்ளார் மகாபாரதத்தை எழுதிய வேத வியாச முனிவர். மறுபடியும் இது வேதங்கள் மற்றும் கிருஷ்ண பரமாத்மாவுடன் தொடர்பை கொண்டுள்ளது; மகாபாரதத்தின் மொத்த கதையின் மைய பாத்திரமே கிருஷ்ணர் தானே.

பால் கொடுக்கும் பசு

பால் கொடுக்கும் பசு

மதத்தின் பார்வைக்கு சற்று வெளியே இருந்து பார்க்கையில், பசு மாடுகள் பால் கொடுக்கும் காரணத்தினால் அவைகள் புனிதமாக பார்க்கப்படுவதற்கு மற்றொரு காரணமாக உள்ளது. மேலும் கடவுள்களுக்கு படைக்கவும் கூட பசும் பால் பயன்படுத்தப்படுகிறது.

தியாகத்தை குறிப்பதால்...

தியாகத்தை குறிப்பதால்...

அதிக அளவிலான தியாகத்தை குறிக்கிறது பசு மாடு. தன்னால் முடிந்த அனைத்தையும் வாரி வழங்கி, அதற்கு கைமாறாக தண்ணீர் மற்றும் புற்களை மட்டுமே திரும்பி பெறும் உயிரினமாகவே இந்து மதத்தில் பசு பார்க்கப்படுகிறது. அது நமக்கு பால், வெண்ணெய், சீஸ், தயிர் மற்றும் இதர பால் பொருட்களை அளிக்கிறது.

சைவ உணவை உண்ணுவது

சைவ உணவை உண்ணுவது

இறைச்சிகளை உண்ணுவது முற்றிலும் தவறு என பல இந்து சமயத்திரு நூல்கள் கூறுகிறது. இருப்பினும், இறைச்சிகள் உண்ணாமல் இருந்தால் அது பலவித நன்மைகளை அளிக்கிறது. இந்துக்கள் மாட்டிறைச்சியை உண்ணாமல் இருப்பதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கிறது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read in English: Why Hindus Don't Eat Beef?
English summary

Why Hindus Don't Eat Beef?

In this article,we try and understand why Hindus don't eat cow and why cows are revered in Hinduism.
Desktop Bottom Promotion