For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராவணனின் மகள் சீதா தேவியா...?

By Boopathi Lakshmanan
|

தலைப்பைப் படித்ததும் நாம் தவறாகப் படித்து விட்டோமோ என்று நினைக்கிறீர்களா? நீங்கள் தலைப்பை தவறாகப் படிக்கவில்லை என்பது சரிதான். தன்னுடைய தங்கையை அவமானப்படுத்தியதற்காக, இராவணன் சீதா தேவியை ஒரு காட்டிலிருந்து கடத்திக் கொண்டு சென்றான் என்பது நாம் அனைவரும் கேட்டறிந்த இராமயணக் கதை தான். ஆனால், இந்த கதைக்கு முற்றிலும் மாறாக, வேறொரு கதை உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்தியாவின் இதிகாசங்கள் மிகவும் ஆர்வமூட்டக்கூடிய சம்பவங்கள் நிறைந்தவையாகும். இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை அவற்றில் பல்வேறு வல்லுநர்களும் படித்துப் பாதுகாத்து வரும் நூல்களாகும். இந்த இதிகாசங்கள் உண்மையான எழுத்து வடிவங்களாக மட்டுமின்றி, செவிவழிக் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் ஆகிய வடிவங்களிலும் தங்களுக்குள் இருக்கும் வசீகரத்தையும், தோற்றத்தையும் வெளிப்படுத்தி வருகின்றன.

சுவாரஸ்யமான வேறு: விஷ்ணு பகவானின் 10 அவதாரங்களும்... அதன் கதைகளும்...

இராமாயணத்தின் முழு கதையுமே இராவணன் வலுக்கட்டாயமாக சீதையை கடத்திச் செல்வதும், இராமபிரான் அரக்க குணம் படைத்த அந்த அரசனிடமிருந்து தன்னுடைய மனைவியை மீட்டுச் செல்வதற்காக சண்டை செய்வதைப் பற்றியும் மட்டுமே கொண்டிருக்கும். ஆனால், இந்த சம்பவங்களுக்கு நேர்மாறான வகையில், இராவணன் என்பவர் சீதா தேவியின் தந்தை என்று சொல்லும் நாட்டுப்புறக் கதைகளும் வழங்கி வருகின்றன. இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடையச் செய்யும் என்பது உண்மை தான். ஆனால், சூர்ப்பணகையை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல், வேறு பல காரணங்களுக்காகவும் சீதா தேவியை இரவாணன் கடத்தினார் என்று சொல்லக்கூடிய ஆதாரங்களும் உள்ளன.

முதன்மைக் கடவுளான விநாயகரின் எட்டு அவதாரங்கள்!!!

எனவே, சீதா தேவியானவர் இரவாணனின் மகள் தானா என்பதை அறிந்து கொள்ளத் துடிக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீதையின் பிறப்பு இரகசியம்

சீதையின் பிறப்பு இரகசியம்

சீதா தேவி பூமியிலிருந்து பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஜனக மகாராஜா நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த போது சீதா தேவியைக் கண்டறிந்துள்ளார். எனவே, அவரை தன்னுடைய மகளாக தத்தெடுத்துக் கொண்டார். வடமேற்கு பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் கதைகளில், ஜனகரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மேனகையின் தெய்வப் புதல்வியாக சீதா தேவி சொல்லப்பட்டு வருகிறார். சில நூல்களில் ஜனகரின் உண்மையான மகள் சீதா தேவி என்றும் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான கதைகளில் சீதா தேவி வயல் வரப்புகளில் நிலத்திலிருந்து கண்டெடுக்கப் பட்டதாகவே சொல்லப்பட்டுள்ளது.

வேதவதியின் கதை

வேதவதியின் கதை

வேதவதியின் மறுஅவதாரம் தான் சீதா தேவி என்று சொல்லும் கதைகளும் உள்ளன. இராவணனால் துன்புறுத்தப்பட்ட பிராமண பெண்ணின் பெயர் தான் வேதவதியாகும். இராவணன் தன்னை அவமானப்படுத்தியவுடன், அவள் தன்னை சிதையில் ஏற்றிக் கொண்டு, வஞ்சம் தீர்க்கும் விதமாக மீண்டும் சீதையாக பிறந்தாள் என்று சொல்கிறது இந்தக் கதை.

இராவணனின் மகள்

இராவணனின் மகள்

உத்தர புராணத்தின் படி, அழகாபுரியின் இளவரசியான மனிவதியின் மேல் இராவணன் தவறான வகையில் ஆசை கொண்டிருந்தார். இதற்காக அவள் இராவணனைப் பழிவாங்க எண்ணினாள். பிற்காலத்தில், இராவணன் மற்றும் மண்டோதரி தம்பதியரின் மகளாக மீண்டும் பிறந்தாள். ஆனால், அந்தக் குழந்தை இராவணனின் சாம்ராஜ்யத்திற்கு பேரழிவைக் கொண்டு வரும் என்று சோதிடர்கள் குறிப்பிட்டார்கள். எனவே, இராவணம் அந்த குழந்தையைக் கொன்று விடுமாறு தன்னுடைய பணியாளிடம் சொல்லி விட்டார். ஆனால், அந்த பணியாள், குழந்தையைக் கொல்லாமல், ஜனகர் சீதையைக் கண்டெடுத்த மிதிலாவில் புதைத்து விட்டான்.

இராவணன் தன்னுடைய மகளை கைவிடுதல்

இராவணன் தன்னுடைய மகளை கைவிடுதல்

சமணர்களின் இராமாயணக் கதைப்படி, சீதை இராவணனின் மகளாகப் பிறந்தார். எனினும், இராவணனின் சாம்ராஜ்யத்தை அந்த குழந்தை அழித்து விடும் என்று சோதிடர்கள் சொன்னதால், இராவணன் தன்னுடைய பணியாட்களை அழைத்து சீதையை தொலைதூரத்தில் உள்ள நிலப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்து விடுமாறு கட்டளையிட்டார். அப்பொழுது தான் சீதை ஜனகரால் கண்டெடுக்கப்பட்டாள்.

சீதையின் மேல் இராவணனின் அன்பு

சீதையின் மேல் இராவணனின் அன்பு

இராவணன், ஒரு தந்தையாக மட்டுமே சீதையின் மேல் அன்பு வைத்திருந்தார். இந்த வகையான விளக்கம் சமணர்களின் இராமாயணத்தில் காணப்படுகிறது. மண்டோதரியின் வயிற்றில் சீதை பிறந்த போது, இராவணன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருந்திருக்கிறார். ஆனால், இந்தக் குழந்தை சாம்ராஜ்யத்தை அழித்து விடும் என்று சோதிடர்கள் சொன்னதால், தன்னுடைய பணியாட்களிடம் சீதையைக் கொண்டு போய் தொலைதூரத்தில் விட்டு விடச் சொல்லியிருக்கிறார். ஆனால், விட்டு விட்டு வந்த குழந்தை எங்கிருக்கிறாள் என்பதை அவ்வப்போது இராவணன் தெரிந்து கொண்டிருக்கிறார். சீதையை ஜனக மகராஜா இளவரசியாக தத்தெடுத்துக் கொண்டதை அறிந்தவுடன் இராவணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். சீதைக்கு திருமணம் நடப்பதை காணும் ஆவலில் இராவணனும் கூட, சீதையின் சுயம்வரத்தில் கலந்து கொண்டிருந்தார். அயோத்தி நகரத்தைச் சேர்ந்த ஆரிய இளவரசர் இராமருக்கு சீதை மணமுடித்ததைக் கண்டு இராவணன் மகிழ்ச்சியடையவே செய்தார். இராமரை 14 ஆண்டுகள் காட்டுக்குள் வனவாசம் அனுப்பும் வரை அனைத்தும் இன்பமாகவே இருந்தது.

சீதையை கடத்துதல்: தந்தையின் பாசமா அல்லது பழிவாங்கும் எண்ணமா?

சீதையை கடத்துதல்: தந்தையின் பாசமா அல்லது பழிவாங்கும் எண்ணமா?

இராமர் வனவாசம் சென்று வனாந்திரங்களில் துன்பப்பட்டு வந்த போது, சீதா தேவியும் இராமருடன் சேர்ந்து துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதை இராவணன் அறிந்தார். எனவே, தன்னுடைய மகளை கடத்திக் கொண்டு வருவதன் மூலமாக அவளுடைய துன்பத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று இராவணன் நினைத்தார். எனவே தான், சீதா தேவியை இராவணன் கடத்திக் கொண்டு வந்து இலங்கையில் வைத்தார். இதனை பழிவாங்கும் செயலாக புரிந்து கொண்ட இராமரும், லட்சுமணரும், இராவணனின் தங்கை சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து விட்டனர். ஆனால், இராவணன் செய்தது தன்னுடைய மகளை துன்பத்திலிருந்து பாதுகாக்கும் செயல் தான். இராவணன் தூங்கும் போதும் கூட சீதையின் பெயரைச் சொன்னதால், அவனுடைய மனைவியான மண்டோதரியும் கூட தவறாக நினைத்துவிட்டார்.

இராவணனின் அழிவு

இராவணனின் அழிவு

சீதை இராவணனுடைய மகளோ அல்லது இல்லையோ, இராவணனின் அழிவுக்கு காரணம் சீதை மட்டுமே. தன்னுடைய மகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற தந்தைப் பாசத்தின் காரணமாகவே, இராவணன் சீதா தேவியை இராமருக்குத் தர மறுத்தார் என்றும் சொல்கிறார்கள். சீதா தேவி மீண்டும் காட்டுக்கு சென்று துன்பப்படுவதை இராவணன் விரும்பவில்லை. எனவே தான், இராமருடன் யுத்தம் செய்து, சோதிடர்களின் கூற்றுப்படி உயிரை விடவும் செய்தார் இராவணன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Was Goddess Sita The Daughter Of Ravana?

Was Goddess Sita really the daughter of Ravana? Read on to find out. According to many folklores and ancient scriptures, Ravana is said to be the father of goddess sita.
Desktop Bottom Promotion