For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலட்சுமி பூஜையும்... அதன் சடங்குகளும்...

By Boopathi Lakshmanan
|

இந்தியாவின் தெற்கத்திய மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வரும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக வரலட்சுமி பூஜை உள்ளது. வட இந்தியாவில் இந்த விழாவை மகாலட்சுமி விரதம் என்றும் அழைக்கிறார்கள். எனினும், இந்த பூஜையில் செல்வத்திற்கும், குடும்ப நலத்திற்கும் காரணமாக இருக்கும் லட்சுமி தேவியையே வணங்கி வருகின்றனர் இந்தியா முழுமையும்.

'வர' என்ற வார்த்தைக்கு வரம் என்று பொருளாகும். எனவே தான், வரலட்சுமியானவர் வரம் தரும் கடவுளாக கருதப்படுகிறார். இந்த விரதத்தை திருமணமான பெண்கள் மட்டுமே செய்து வருகிறார்கள். வரலட்சுமி விரதத்தை யாராவது செய்தால் - அது அஷ்டலட்சுமிகளுக்கும் விரதம் இருந்ததற்கு சமமான பலன்களைத் தரும். செல்வம், கல்வி, அன்பு, புகழ், அமைதி, மகிழ்ச்சி மற்றும் வலிமை ஆகியவற்றையே இந்த எட்டு லட்சுமிகளும் கொடுக்கின்றனர். ஸ்ரவண மாதத்தில், பௌர்ணமிக்கு முன்னதாக வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

திருமணமான பெண்கள் இந்த வரலட்சுமி விரதத்தை மிகுந்த நம்பிக்கையுடனும், பக்தியுடனும் கடைபிடிப்பார்கள். அதிகாலையில் குளித்து முடித்து விட்டு, பாதி நாளுக்கு சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். குடும்பத்தின் நலம் மற்றும் வளத்திற்காக இந்த விரதம் மேற்கொள்ளப்படும். சில பெண்கள் குழந்தைப்பேறுக்காகவும் கூட இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள். குடும்பத்திற்கு அருள் பெறுவதற்காக எட்டு லட்சுமிகளையும் வைத்து வணங்குவார்கள். இந்த வரலட்சுமி பூஜையின் போது பின்பற்றப்பட்டு வரும் சடங்குகளைப் பற்றி இன்று விரிவாக தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரலட்சுமி விரதத்தின் தொடக்கம்

வரலட்சுமி விரதத்தின் தொடக்கம்

ஒரு காலத்தில சர்மதி என்ற மிகவும் தெய்வ பக்தியுள்ள பெண் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். ஆவள் தன்னுடைய கனவுகளில் லட்சுமி தேவியைக் கண்ட போது, சர்மதியின் பக்தியால் லட்சுமி தேவி மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். மேலும், லட்சுமியின் அருளை பெறுவதற்காக அவளை வரலட்சுமி விரதம் கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொண்டார். எனவே, அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, விரதம் இருந்து லட்சுமி தேவியின் அருளை வேணடினார். அவளுக்கு நலமும், வளமும் ஒருங்கே கிடைத்தன. இந்த கனவைப் பற்றி கிராமத்தில் இருந்த பிற பெண்களும் கேள்விப்பட்டு, அவர்களும் விரதம் இருக்கத் தொடங்கினார்கள். இவ்வாறகவே, வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் முறை தொடங்கியது.

அதிகாலை குளியல்

அதிகாலை குளியல்

இந்த பூஜையை பெண்கள் தான் வழக்கமாக செய்வார்கள். எனவே, அவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விடுவார்கள். பாரம்பரியமாகவே, பிரம்ம முகூர்த்தம் எனப்பம் வேளையில் எழுந்து, குளித்து விட்டு, பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்வார்கள்.

கோலம்

கோலம்

பூஜை செய்யும் இடத்தையும், வீட்டின் பிற இடங்களையும் சுத்தம் செய்த பின்னர், வீட்டின் வாயிலில் பெண்கள் அழகிய கோலங்களைப் போடுவார்கள். இதன் மூலமாக அதிர்ஷ்டத்தையும், கடவுள் இலட்சுமியையும் வரவேற்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

கலசம்

கலசம்

கலாஸ் என்பது பித்தளை அல்லது வெள்ளியாலான பாத்திரத்தைக் குறிக்கும். இதனை முழுமையாக சுத்தம் செய்து விட்டு, அதன் மேல் ஸ்வஸ்திக் அடையாளத்தை சந்தனத்தில் தேய்த்து போடுவார்கள். சமைக்காத அரிசி அல்லது தண்ணீர், நாணயம், ஒரு முழு எலுமிச்சை, ஐந்து மாவிலைகள் மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவற்றைக் கொண்டு கலசத்தை நிரப்புவார்கள். சில பேர், மஞ்சள், சீப்பு, சிறிய கருப்பு வளையல்கள் மற்றும் மணிகளையும் கூட கலசத்தில் போடுவார்கள். அதன் பின்னர், கலசத்தின் வாயில் சந்தனம் பூசப்பட்ட தேங்காயை வைப்பார்கள். கலசத்தின் வாயில் சிவப்பு துணி அல்லது மாவிலை கொண்டு மூடுவது வழக்கம். தேங்காயில் இலட்சுமி தேவியின் உருவத்தை வைத்து வணங்குவார்கள்.

பூஜையை தொடங்குதல்

பூஜையை தொடங்குதல்

கணேச பெருமானின் பெயரைக் கொண்டு பூஜையை வணங்கித் தொடங்குவது வழக்கம். அதன் பின்னர் இலட்சுமி தேவியைப் பற்றிய ஸ்லோகங்கள் சொல்லப்படும். ஆரத்தி எடுக்கப்பட்டு, பொங்கல் போன்ற பல்வேறு இனிப்புகளும் இலட்சுமி தேவிக்கு படைக்கப்படும். சில பெண்கள் மஞ்சள் கயிற்றை தங்களுடைய கைகளில் கட்டிக் கொள்ளவும் செய்வார்கள். அருகில் வசித்து வரும் பெண்களுக்கு வெற்றிலை-பாக்கு, வெட்டப்பட்ட எலுமிச்சம் பழம் ஆகியவற்றைக் கொடுத்து, மாலையில் ஆரத்திக்கு வருமாறு கேட்டுக் கொள்வார்கள்.

பூஜையை முடித்து வைத்தல்

பூஜையை முடித்து வைத்தல்

அடுத்த நாள், அதாவது சனிக்கிழமையன்று குளித்து முடித்தவுடன், கலசத்திலிருந்த பொருட்களை எல்லாம் வெளியில் எடுத்து விட்டு, அதிலுள்ள தண்ணீரை வீடு முழுமையுடன் தெளிக்க வேண்டும். அரிசி இருந்தால், சமைக்க பயன்படுத்தும் அரிசியுடன் அதனை பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த பண்டிகைக்கான சடங்குகள் மிகவும் எளிமையானவையாகும். இதில் எதையாவது விட்டால் அதற்காக கவலைப்பட வேண்டாம். ஏனெனில் கடவுளை வணங்குவதற்கு மனதை சுத்தமாக வைத்திருந்தால் கூட போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rituals Of Varalakshmi Puja

Varalakshmi puja is one of the most popular celebration in the Southern states of India. The word Vara denotes boon. So, Varalakshmi is one who grants boon. This vrata is performed by married women only. Take a look at the rituals of the Varalakshmi puja in detail.
Desktop Bottom Promotion