For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கௌரி விரதத்துடன் தொடர்புடைய சடங்குகள்...!

By Boopathi Lakshmanan
|

தென் கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வரும் முக்கியமான பண்டிகையாக கௌரி விரதம் உள்ளது. இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் 'ஹர்டாலிக்கா' என்ற பெயரில் இந்த பண்டிகை பெயர் பெற்றுள்ளது. விநாயக சதுர்த்தி பூஜைக்கு முன் வரும் நாளில் கௌரி விரதம் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கணேச பெருமானுக்கும், சுப்ரமணியருக்கும் (கார்த்திகேயர் அல்லது முருகன்) தாயாரான பார்வதி தேவியை தான் இங்கு கௌரி என்று குறிப்பிடுகிறார்கள்.

கௌரி விரத நாளின் போது, கௌரி தேவியை வெகுசிரத்தையுடனான பக்தியுடன் வணங்குவார்கள். சக்திகளின் ஆதாரமாக இருக்கும் ஆதி சக்தியின் அவதாரமாகவே கௌரி தேவி பார்க்கப்படுகிறார். முழு நம்பிக்கை மற்றும் பக்தியுடன் கௌரி தேவியை யார் வணங்குகிறார்களோ, அவர்களுக்கு வீரத்தையும், அளவற்ற சக்தியையும் கௌரி தேவி வழங்குவாள் என்று சொல்லப்படுகிறது.

Rituals Associated With Gowri Habba

இந்த புனிதமான கௌரி விரதத்தின் போது, தேவியின் அருளைப் பெறுவதற்காக ஸ்வர்ண கௌரி விரதம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்த திருவிழாவுடன் தொடர்புடைய சடங்குகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

1. கௌரி விரத நாளுக்கு முன் நாளில், கௌரி தேவியின் சிலையை வீட்டுக்கு கொண்டு வருவார்கள். இந்த நேரத்தில் தான் கௌரி தேவி தன்னுடைய தந்தையின் வீட்டுக்கு வருவது வழக்கம் என்று நம்பப்படுகிறது. எனவே, ஒவ்வொரு வீட்டிலும் பெரும் ஊக்கம் மற்றும் உற்சாகத்துடன் தேவியை வரவேற்பார்கள்.

2. கௌரி விரதம் தினத்தின் போது, பாரம்பரிய உடையை பெண்கள் அணிந்து கொண்டு, மஞ்சளுடன் சேர்த்து 'ஜலகௌரி' என்ற சிலையை செய்வார்கள். அதன் பின்னர் மந்திரத்தை உச்சாடனம் செய்து கடவுளை வழிபடத் துவங்குவார்கள்.

3. அதன் பின்னர் கௌரி தேவியை குவித்து வைக்கப்பட்டிருக்கும் அரிசி அல்லது தானியங்களின் மீது வைப்பார்கள்.

4. இந்த பூஜையை முழுமையான சுத்தம் மற்றும் பக்தியுடன் நடத்த வேண்டும்.

5. வாழைத்தண்டுகளைக் கொண்டு எழுப்பப்பட்ட ஒரு 'மண்டபம்' அல்லது 'கூரை' மற்றும் சிலையைச் சுற்றிலும் மாவிலைகளும் வைக்கப்பட வேண்டும். அழகான பூமாலைகளையும், பருத்தி துணிகளையும் கொண்டு சிலையை அலங்காரம் செய்து வைக்க வேண்டும்.

6. 'கௌரிதாரா' என்று அழைக்கப்படும் 16 முடிச்சு கொண்ட நூற்கற்றையை பெண்கள் தங்களுடைய கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் தேவியின் அருளைப் பெற முடியும்.

7. விரதத்தின் ஒரு பகுதியாக 'பாக்கினா' தயார் செய்யப்படும். மஞ்சள், குங்குமம், கருப்பு வளையல்கள், கருப்பு மணிகள், சீப்பு, சிறிய கண்ணாடி, தேங்காய், ரவிக்கை துணி, பயறு வகைகள், தானியங்கள், கோதுமை மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்ட சேர்க்கை தான் பாக்கினா என்பதாகும். இந்த விரதத்திற்காக 5 பாக்கினாக்கள் தயார் செய்யப்படும்.

8. ஒரு பாக்கினாவை தேவிக்கு படையல் போட்டு விட்டு, மீதமுள்ள நான்கையும் திருமணமான பெண்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

9. அதன் பின்னர், போலி, பாயாசம் போன்ற இனிப்புகளை தேவிக்கு கொடுக்க வேண்டும்.

கௌரி விரதத்தை கொண்டாடியதற்கு அடுத்த நாள், கணேச பெருமானை வீட்டுக்கு கொண்டு வந்து வணங்க வேண்டும். இந்த கொண்டாட்டங்கள் 11 நாட்களுக்குத் தொடரும். 11-வது நாளில் விநாயகர் சிலையை தண்ணீரில் மூழ்கடித்து விட வேண்டும்.

English summary

Rituals Associated With Gowri Habba

The Swarna Gowri Vratha is performed to appease the Goddess on this auspicious occasion of Gowri Habba. Let us have alook at the few rituals which are...
Desktop Bottom Promotion