For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காளி தேவியை அகோரிகள் வணங்குவதற்கான காரணங்கள்!!!

By Ashok CR
|

இந்து மதத்தில் உள்ள மிகவும் கடுஞ்சினம் கொண்ட கடவுளாக கருதப்படுபவர் காளி தேவி. அவருடைய கருமையான சருமம், கடுஞ்சினம் கொண்ட பார்வை, பயமுறுத்தும் நாக்கு, இரத்த சிவப்பினாலான கண்கள் போதும், நம்மை அப்படியே உறைய வைக்க. ஆனாலும் இந்து புராணத்தின் படி, மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக பார்க்கப்படுகிறார் இவர். அகோரிகளும், சித்தர்களும் சிவபெருமானுடன் சேர்த்து காளி தேவியையும் தங்களின் முக்கிய கடவுளாக வணங்குகின்றனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து அகோரிகளும் தங்களின் தலைமை தெய்வத்தை 'அன்னை (மாதா)' என்றார் கூறுகின்றனர். அதற்கு காளி தேவி என்று தான் பொருள் தரும். நம் அனைவரிடமும் உள்ள ஆதி நிலை ஆற்றல் திறன் அல்லது சக்தியின் காட்டுத்தனமான மற்றும் ஒழுங்கற்ற உள்ளடக்கத்தை தான் காளி குறிக்கிறார். தன் கணவனான சிவபெருமானின் மேல் நிற்பதை போல் தான் இவர் வடிவமைக்கப்பட்டுள்ளார். ஆணின் ஆற்றல் திறன் அடக்கமாகவும் இணங்கிப் போகிறவாறும் இருக்கையில், பெண்ணின் ஆற்றல் திறன் முனைப்புடனும், ஆளுமையுடனும் இருக்கும் என்ற அகோரிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப காளி தேவியின் உருவம் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

காளி தேவியையும் சிவபெருமானையும் வணங்கிட வழக்கத்திற்கு மாறான சடங்குகள் பல தேவைப்படும். அண்டசராசர சக்தி மற்றும் பிரபஞ்சத்தின் முழுமையாக பார்க்கப்படுகிறார் காளி தேவி. படைத்தலுக்கு வழி கொடுக்கும் அழிக்கும் கடவுளாவார் இவர். அதனால் எதிர்பதமான ஜோடிகள் அனைத்தையும் பொருந்தும் படியானதாக பார்க்கப்படுகிறது. இந்த உலகத்தில் எதுவுமே அசுத்தம் இல்லை என அகோரிகள் நம்புகிறனர். அனைத்தும் சிவபெருமானிடம் இருந்தும் அவருடைய பெண் வெளிப்படுத்துதலான காளியிடம் இருந்தும் வந்து, மீண்டும் அவர்களிடமே செல்கிறது. அதனால் இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே சுத்தமானவை.

பெண்கள் அனைவரும் பெண்மையின் தோற்றம் என்ற விதியை உடைத்தெறிந்து, சக்தி மற்றும் வலிமையின் அருமையான தோற்றத்தை வெளிப்படுத்துபவர் காளி தேவி. தூய்மையான வீர பெண்ணான அவர், ஆண்களுக்கு இணையாக சண்டை போட்டு அவர்களை போர் களத்தில் வெல்லக்கூடியவர். இவர் 'கல்' எனப்படும் காலத்தை அழிக்கக்கூடியவர். நேரம் என்ற கருத்தமைவிற்கும் அப்பாற்ப்பட்டவர் இவர் என்பதை இது குறிக்கிறது.

சிவபெருமான் அல்லது மஹாகலாவை (அழிப்பவர் அல்லது அவரின் பெண் வெளிப்பாடு - இறப்பின் கடவுளான சக்தி அல்லது காளி) வணங்குவார்கள் அகோரிகள். இறைச்சி, மதுபானம் மற்றும் காமம் ஆகிய மூன்றும் மற்ற சாதுக்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அகோரிகளுக்கோ இந்த உலகமே நடைமுறைப்படி வேறுபட்டதாகும். மாமிசம் சாப்பிடுவது அனைத்தையும் சாப்பிடுவதற்கு இணையாகும். அனைத்தும் ஒன்று என்பதால் வரம்பு என்பதே கிடையாது. அனைத்தையும் உண்ணுவதால், அனைத்திலேயும் உள்ள ஒருமையைப் பற்றியும், வித்தியாசப்படுத்துதலை நீக்குவதை பற்றியும், அவர்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும். அதனால் மலம், மனித திரவங்கள் மற்றும் மனித மாமிசத்தை அவர்கள் உட்கொள்கிறார்கள். இதுப்போக சில இறந்த சடலத்துடன் உடலுறவு கொள்ளும் பழக்கத்தையும் சில அகோரிகள் கொண்டுள்ளனர். அவர்கள் மதுபானமும் குடிப்பார்கள். பூஜை நேரத்தில் அதனை கடவுள்களுக்கும் படைப்பார்கள்.

10 மகாவித்யாக்களில் (அறிவு கடவுள்) ஒருவரான காளி அல்லது தாராவால் தான் தெய்வீக சக்திகளுடன் அகோரிகளுக்கு அருளளிக்க முடியும். தூமாவதி, பகளமுகி மற்றும் பைரவி ஆகிய வடிவங்களில் இந்த கடவுளை வணங்குகின்றனர். மஹாகால், பைரவர் மற்றும் வீரபத்திரர் போன்ற கடுஞ்சின வடிவத்திலான சிவபெருமானையும் இவர்கள் வழிபடுகிறார்கள். அகோரிகளின் ரட்சச கடவுளாக விளங்குபவர் ஹிங்லஜ் மாதா.

இந்த பிரபஞ்சத்தை செயல்பட வைக்கும் ஒரே வடிவிலான ஆற்றல் திறன் தான் சக்தி தேவி என சமயத்திருநூல்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வருகிறது. இந்த ஆற்றல் திறன் பெண்மையின் வடிவமாகும். இது துர்கை, சதி அல்லது பார்வதி வடிவில் அவதரித்து வரும். அதன் பின் தன் ஆண் துணையான சிவபெருமானுடன் இணைந்து படைத்தலுக்கான வழியை ஏற்படுத்தி கொடுப்பார்.

காளி என்ற வார்த்தை 'கால்' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டவை. அது காலத்தை குறிக்கும். காலத்தில் இருந்து யாருமே தப்ப முடியாது. தேவியின் அனைத்து வடிவங்களையும் விட காளி தேவி வடிவம் தான் இரக்க குணமுள்ளவர். அதற்கு காரணம் தன் குழந்தைகளுக்கு மோட்சம் அல்லது விடுதலையை கொடுப்பவர் இவரே. அழிக்கும் கடவுளான சிவபெருமானின் துணை இவர். உண்மையற்றதை அழிப்பவர்கள் இவர்கள்.

மனிதனிடம் மையமாகும் (சக்கரங்கள்) நுண்ணியம் வாய்ந்த வலிமையை தூய்மையாக்கும் மற்றும் தெய்வீக ஆற்றல் திறன் குண்டலினியை (முதுகெலும்பின் அடிப்பகுதியான மூலாதார சக்கரத்தில் செயலற்று இருக்கும்) விழிக்க வைக்கும் ஆன்மீக முயற்சியை குறிக்கிறது காளி சாதனா. குண்டலினி சக்தியை விழிக்க வைப்பது காளியின் முக்கியமான அம்சங்களில் ஒன்றை குறிக்கிறது. அதனால் சுத்தமான தெய்வீகத்தை உணர தீவிரமான காளி சாதனாவை நோக்கி போவார்கள் அகோரிகள்.

English summary

Reasons Why Aghoris Worship Goddess Kali

Aghoris and other Tantrik cults worship Goddess Kali as the main deity along with Lord Shiva. Here are some reasons why aghoris worship goddess kali. Take a look...
Desktop Bottom Promotion