For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்மிகம் மனரீதியான ஆரோக்கியத்தின் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

By Ashok CR
|

மனரீதியான ஆரோக்கியமும் ஆன்மீகமும் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. மூளையின் செயல்பாடுகளை ஆன்மிகம் எவ்வாறு மேம்படுத்துகிறது என்ற புதிர் நிறைந்த அம்சத்தை அறிவியலும் கூட சற்று நிரூபித்துள்ளது. மூளையின் செயல்பாடுகளுக்கும், ஆன்மீகத்துக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க இதுவரை நாம் கண்ட விளைவுகளே போதுமானது.

புத்தரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையை மாற்றும் சில பாடங்கள்!!!

ஆன்மிகத்திற்கும், மன ரீதியான ஆரோக்கியத்தோடு அது கொண்டுள்ள தாக்கத்திற்கும் இடையேயான தொடர்பைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். அடிப்படையில் ஆன்மிகம் எப்படி மூளையின் மீது தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதையும் மனித உடலில் எந்த அளவிலான நேர்மறை திறன்கள் நுழைகிறது (குறிப்பாக மனித மூளை) என்பதையும் பார்க்க போகிறோம்.

How Does Spirituality Influence Mental Health?

ஆன்மீக என்ன செய்கிறது என்பதை பார்த்தோமானால், மனித மூளையின் மீதுள்ள ஆன்மீகத்தின் தாக்கத்தை சரியாக தீர்மானித்துவிடலாம். இந்த சொற்கூற்றை முழுமையாக வரையறை செய்ய, ஆன்மீகத்தில் பல வகையான அம்சங்கள் நிறைந்துள்ளது. ஆன்மீகத்தைப் பற்றி அதிமுக்கிய அம்சங்களாக விளங்குவது தியானத்தில் ஈடுபடுவது. ஆன்மீகத்தின் மற்றொரு அதிமுக்கிய அம்சங்களாக பார்க்கப்படுவது அமைதி, சந்தோஷம் மற்றும் நல்லது செய்வதை மேம்படுத்துவது.

இந்து மதத்தைப் பற்றிய தவறான கருத்துக்களும்... உண்மைகளும்...

மனிதர்களாக, நல்லதையும் கெட்டதையும் பிரித்து பார்க்க கூடிய உள்ளார்ந்த ஆற்றலுடன் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். நல்லது செய்தால் என்ன கெட்டது, செய்தால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் ஆற்றலை நாம் பெற்றிருக்கிறோம். இந்த உள்ளார்ந்த ஆற்றல் படி போகையில், பல வகையான வியத்தகு திறன்களுடன் படைக்கப்பட்டதே நம் மனம் என்பதை நம்மால் உணர முடியும்.

ஆன்மீகத்தின் மிக அடிப்படையான அம்சங்களின் ஒன்றான தியானத்தின் படி பார்க்கையில், நம் உடலுக்கும் மனதுக்கும் அருமையான தாக்கத்தை தியானம் ஏற்படுத்துகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் தியானத்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். மூளை தேய்வு மற்றும் ஸ்கிசோஃப்ரினியா போன்ற கொடிய நோய்களைக் கூட அண்ட விடாமல் உதவி செய்கிறது தியான ஈடுபாடு.

அதனால், தியானம் மூலமாகவும் அமைதி மற்றும் சந்தோஷத்தை பரப்புவதன் மூலமாகவும், ஈர்க்கப்படும் அதிர்வலைகள் மிகவும் மேலான நேர்மறை திறனாகும். இது மனிதனின் மனதில் நீடித்து நிலைக்கவும் செய்யும். மூளையின் அமைப்பை மாற்றி, சிறந்த மூளை மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலை தியானம் பெற்றுள்ளது.

English summary

How Does Spirituality Influence Mental Health?

In this article, we look at the connection between spirituality and the influence on mental health. Read on.....
Desktop Bottom Promotion