For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்களுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்: சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்

By Ashok CR
|

ரஜினி... இந்த மூன்றெழுத்து மந்திரசொல்லிற்கு விழுந்து கிடக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கோடான கோடிகள். 1974 இல் சாதாரண சிவாஜி ராவாக இருந்தவர் நமக்கு ரஜினிகாந்த்தாக அறிமுகமானார். இன்று இந்த உச்சத்தை தொடுவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவரின் தனித்துவமான பலமே அவரின் ஸ்டைல் தான். ஒரே டெம்ப்ளேட் நடிப்பை பார்த்து பழகிய மக்களுக்கு இவரின் நடிப்பு வித்தியாசத்தை காட்டியது.

'ஸ்டைல் மன்னனின்' வித்தியாசமான ஹேர் ஸ்டைல்கள்!!!

துருதுருவென இருந்த அவரின் ஸ்டைல் சிறுவர்களை மட்டுமல்லாது இளைஞர்கள் மற்றும் பெரியவர்களையும் கூட கவர்ந்தது. தன் பேருக்குள்ளே காந்தம் உண்டு என்பது உண்மை தான். சும்மாவா, இத்தனை ஆண்டு காலம் மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்றால் சும்மாவா? இன்றைய இளம் கதாநாயர்கள் மத்தியில் கோலோச்சி வருவது என்றால் சாதாரண ஒன்றா? ஜப்பான் போன்ற நாடுகளில் நம் பாஷையே தெரியாத பல மக்கள் இவரால் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மறக்க முடியாத ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்!!!

சரி, இவையெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு கூட தெரிந்த விஷயங்கள் தான். சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை திருவிழா போல் கொண்டாடும் இன்றைய தினத்தில் இவரைப் பற்றிய மற்றொரு விஷயத்தைப் பற்றி பார்க்கலாமா? தன் படங்களில் ஆரம்ப காலம் முதல் அவர் பேசி வரும் பஞ்ச் வசனங்கள் தான் அது. அதிலும் என்ன புதுசு என கேட்கிறீர்களா? பஞ்ச் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதே சூப்பர் ஸ்டார் தானே. அவரை பார்த்தது தானே இன்று அவரவர் பஞ்ச் பேசி திரிகின்றனர்.

ஆனால் சூப்பர் ஸ்டார் பேசும் வசனங்களில் உள் அர்த்தம் ஆழமாக இருக்கும். அவர் பேசிய வசங்களின் தொகுப்பை கொண்டு நிர்வாக பாடமே கற்பிக்கும் அளவிற்கு புத்தகமே வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இது சிலருக்கு தெரிந்திருந்தாலும் கூட பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் கூறிய பஞ்ச் வசனம் எப்படி நிர்வாக பாடமாக வகுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சில உதாரணங்களை இப்போது பார்க்கலாமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாபா

பாபா

"கண்ணா நான் யோசிக்காம பேச மாட்டேன்... பேசுன பிறகு யோசிக்க மாட்டேன்"

நிர்வாக பாடம்:

திட்டமிடுவது மிகவும் முக்கியமாகும். ஒரு முறை தெளிவாக திட்டமிட்டு விட்டால், நம் குறிக்கோளை அடைவதற்கு மீண்டும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை"

16 வயதினிலே

16 வயதினிலே

"இது எப்படி இருக்கு"

நிர்வாக மந்திரம்:

நாளடைவில் அபிப்ராயத்தை தெரிந்து கொள்ள வேண்டியது உயர்மட்ட நிர்வாகத்திற்கு மிகவும் முக்கியமாகும். இதனால் நிறுவனமும் ஜனநாயகத்துடன் செயல்படும்.

தர்மத்தின் தலைவன்

தர்மத்தின் தலைவன்

"நான் தட்டி கேட்பேன்... ஆனா கொட்டி கொடுப்பேன்"

நிர்வாக மந்திரம்:

வேலை நடப்பதற்கு உயர்மட்ட நிர்வாகம் கேள்வி கேட்கவும் செய்யும், அதே சமயம் ஊக்களிப்புகள் மற்றும் ESOP-க்கள் போன்றவைகள் மூலமாக வெகுமதி அளிக்கவும் செய்யும்.

அருணாச்சலம்

அருணாச்சலம்

"சொல்றான்... செய்றான்"

நிர்வாக மந்திரம்:

அதிகாரம் அல்லது வேலை ஒப்படைப்பு மற்றும் அதனை செயல்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள இந்த இரண்டு வார்த்தைகளே போதுமானது. எந்த ஒரு நிர்வாகத்திற்கும் இந்த இரண்டுமே மிகவும் முக்கியமானதாகும்.

பாபா

பாபா

"நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்"

நிர்வாக மந்திரம்:

நம் பொருளை அல்லது சேவையை நடைமுறைக்கு கொண்டு வர சற்று தாமதமானாலும் கூட, அது சமீபத்திய முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறதா என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இது அனைத்து வகை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

பாட்ஷா

பாட்ஷா

"நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி"

நிர்வாக வல்லுனரான பீட்டர் ட்ரக்கரையே இந்த அசாதாரண கூற்று சிறுமைப்படுத்திவிடும்.

நிர்வாக மந்திரம்:

சரியான தொடர்புத்திறன்கள் மற்றும் கேட்கும் திறன்களின் முக்கியத்துவத்தை எட்டே வார்த்தையில் அசால்டாக கூறிவிட்டார். நிர்வாகம் சொல்லும் விஷயங்களில் எப்போதுமே தெளிவும், அதிகாரமும் இருக்க வேண்டும். எந்த ஒரு தவறான புரிதலுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. அதேப்போல் கேட்கும் திறன் சரியாக நிறுவப்பட்டிருந்தால், தொலைப்பேசி, மின்னஞ்சல்கள் மற்றும் மெமோக்கள் மூலமாக தெரிவிக்க வேண்டிய தகவலை காலம் மற்றும் முயற்சி விரயமாகாமல் தவிர்க்கலாம்.

படையப்பா

படையப்பா

"என் வழி தனி வழி"

நிர்வாக மந்திரம்:

வெற்றியை ஈட்ட நீங்கள் புதுமையாக சிந்தித்து செயல்பட வேண்டும். "நானும் அப்படியே செய்கிறேன்" என பிறர் வழியில் தொழிலை செய்யாதீர்கள்.

பாபா

பாபா

"அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது பாபா பாலிசி"

நிர்வாக மந்திரம்:

நடந்த பின்பு எதிர்செயலாற்றுவதை விட நடப்பதற்கு முன்பே தயாராக இருப்பது முக்கியமாகும். தொலைதொடர்பு மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு இது குறிப்பாக பொருந்தக்கூடிய ஒன்றாகும். நம் போட்டியாளர்கள் களத்தில் இறங்குவதற்கு முன்பு, நம் வாடிக்கையாளர்களுக்கு இனிமையான அதிர்ச்சிகளை அறிமுகப்படுத்தி அசத்த வேண்டும்.

எங்கேயோ கேட்ட குரல்

எங்கேயோ கேட்ட குரல்

"கை அளவு காசு இருந்தா அது நம்மள காப்பாத்தும்; அதுவே கழுத்து அளவு இருந்தால் அத நாம காப்பாத்தணும்"

நிர்வாக பாடம்:

கருவூல செயல்பாடுகள் மற்றும் சொத்து நிர்வாக சேவைகளைப் பற்றி அவர் தெளிவாக கூறுகிறார். நிர்வாகம் தங்களின் மைய வணிகத்தின் மீதே கவனத்தை செலுத்த வேண்டும். முதலீட்டு அறிவுரையை சொத்து நிர்வாக நிறுவனங்கள் அல்லது வல்லுனர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். சொல்லப்போனால், தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்க ம்யூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இதனை பயன்படுத்த வேண்டும்.

பாபா

பாபா

"பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ் 1, 2, 3, ......"

நிர்வாக மந்திரம்:

காலக்கெடுவின் முக்கியத்துவத்தை அவர் இதன் மூலம் கூறுகிறார்.இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hidden Meanings Of Rajinikanth's Punch Dialogues: Superstar Birthday Special

Celebrating superstar rajinikanth's birthday, Tamil Boldsky shares with you some hidden meanings of rajinikanth's punch dialogues. Take a look...
Desktop Bottom Promotion