பிப்ரவரி மாதத்தை காதலர்களுக்கான மாதம் என்று சொல்லலாம். இத்தகைய மாதத்தில் வெளிவந்த நாளிதழ்களின் அட்டைப் படங்களில், சினிமாவில் ரொமான்ஸில் கலக்கிய சில பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். இப்போது 2014 பிப்ரவரி மாதம் வெளிவந்த நாளிதழ்களில், எவற்றில் எந்த பிரபலம் இடம் பெற்றுள்ளார் என்பதைப் பார்ப்போம்.
மசாலா: ஷாருக்கான்
பாலிவுட்டின் கிங் நடிகர் ஷாருக்கான் பிப்ரவரி மாதம் வெளிவந்த மசாலா நாளிதழின் அட்டைப் படத்தில் இடம் பெற்றார்.
எஃப்.எச்.எம்: ஸ்ருதிஹாசன்
யாராலும் ஸ்ருதிஹாசனைப் போல் மிகவும் தைரியமாக இந்த மாதிரியான போஸ் கொடுக்க முடியாது. ஏனெனில் அந்த அளவில் அவர் எஃப்.எச்.எம் என்னும் ஆங்கில இதழின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார்.
வோக்: பரினீத்தி சோப்ரா
மிகவும் ஸ்டைலான நடிகையான பரினீத்தி சோப்ரா வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு சில்வர் நிற உடையில் போஸ் கொடுத்திருந்தார்.
ஸ்டார்டஸ்ட்: இம்ரான் கான்
பிப்ரவரி மாதம் வெளிவந்த ஸ்டார்டஸ்ட் என்னும் நாளிதழின் அட்டைப் படத்தில் இம்ரான் கான் இடம் பெற்றிருந்தார்.
சினி பிளிட்ஸ்: ஃபர்ஹான் அக்தர்
ஃபர்ஹான் அக்தர் சினி பிளிட்ஸ் என்னும் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு மிகவும் அழகாக போஸ் கொடுத்திருந்தார்.
L'officiel: ஃபர்ஹான் அக்தர் & அதுனா அக்தர்
ஃபர்ஹான் அக்தர் மற்றும் அதுனா அக்தர், பிப்ரவரி மாத L'officiel பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம் பெற்றிருந்தனர்.