For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திரௌபதியின் சபதம்: திரௌபதி கூந்தலை முடியாமல் இருக்க காரணம் என்ன?

By Ashok CR
|

மகாபாரதம் என்னும் காவியம் மர்மங்கள் நிறைந்தவை. இந்த காவியத்தில் காதல், மரியாதை, வீரம், புத்திசாலித்தனம், பக்தி மற்றும் ஒழுக்க பண்புகளை பறைசாற்றும் கதைகள் பல இருக்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் வெறுப்பு, வஞ்சம், சூழ்ச்சி, ஒழுக்கமின்மை, கூடா ஒழுக்கம் மற்றும் அநீதியை பறைசாற்றம் கதைகளும் இருக்கவே செய்கிறது.

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!

மகாபாரத கதை இந்த முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நகர்கிறது: பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள். பெரிய போரை உருவாக்கும் அளவிற்கு பல நிகழ்வுகள் இந்த மகாபாரத காவியத்தில் நடைபெற்றுள்ளது. இந்த காவியத்தின் ஆண் கதாபாத்திரங்களை சுற்றி பல வீரக்கதைகள் உள்ளது. வாழ்வா சாவா என்கிற கதைகள் அவை. இந்த காப்பியத்தில் மற்றொரு முக்கியமான பெண் பாத்திரமும் உள்ளது. இவ்வளவு பெரிய போர் வருவதற்கு மூல காரணமாக இருந்ததும் அந்த பெண்ணே. ஆம், நாம் பேசி கொண்டிருப்பது திரௌபதியை பற்றி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
த்ரௌபதி

த்ரௌபதி

திரௌபதி என்பவள் மகாபாரத்ததில் உள்ள பிரதான பாத்திரமாகும். பஞ்சாலா அரசாங்கத்தின் இளவரசியாக, பஞ்ச பாண்டவர்களின் மனைவியாக, மிகுந்த ஞானத்துடன், கணவன்களின் மீது பக்தியுடன் வாழந்தவர் அவர். மகாபாரத போருக்கு இவர் தான் காரணம் என பல நேரங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அதை தான் பலரும் நம்பி வருகின்றனர். ஆனால் இது முழுமையான உண்மை அல்ல. கௌரவர்களின் வீழ்ச்சிக்கு இவர் முக்கிய பங்கு வகித்திருந்தாலும், இவரே அதற்கு முழு காரணம் கிடையாது.

திரௌபதி பற்றிய அனைத்து கதைகளும் சுவாரஸ்யமாக இருக்கும். அவளின் அபார அழகு, நிறைவுணர்வு, பக்தி, காதல், அவள் பட்ட அவமானம், அவளின் சபதம் என அனைத்துமே சுவாரஸ்யத்துடன் இருக்கும். சக்தி வாய்ந்த கௌரவர்களின் அரசாங்கம் திரௌபதியின் சபதத்தால் எப்படி வீழ்ந்தது என்பதைப் பற்றி பார்க்கலாமா?

புகழில்லா தாய விளையாட்டு

புகழில்லா தாய விளையாட்டு

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த மோசமான தாய விளையாட்டு சூதாட்டம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு, பாண்டவ சகோதரர்களை தாய சூதாட்டத்திற்கு தங்களின் ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்தனர் கௌரவர்கள். யுதிஷ்டிராவிற்கு சூதாட்டத்தின் மீது ஆர்வம் இருந்ததால் இந்த அழைப்பை அவர் ஏற்றார். இருப்பினும் கௌரவர்கள் ஏமாற்றியதால், யுதிஷ்டிரர் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தார். தன் சகோதரர்களை பனையமாக வைத்து விளையாடியும் தோற்றார். தன்னை பனையமாக வைத்தும் தோற்று, கௌரவர்களிடம் அடிமையானார். அதன் பின்னர் இழந்த அனைத்தையும் மீட்க தன் மனைவி திரௌபதியை பணையம் வைத்து ஆடினார். ஆனால் அவளையும் இழந்தார்.

திரௌபதியின் ஆடை அவிழ்ப்பு

திரௌபதியின் ஆடை அவிழ்ப்பு

யுதிஷ்டிரர் தன் மனைவியை இழந்த பிறகு, அதன் பின் நடந்த நிகழ்வுகள் மனித இனத்திற்கே அவமானத்தை தேடி தந்தது. பெண்களின் பகுதியில் இருந்த திரௌபதியை அழைத்து வரச்சொல்லி சபையில் இருக்கும் அனைவரின் முன்னிலையில் திரௌபதியின் ஆடையை அவிழ்க்க துட்சாதனனுக்கு ஆணை பிறப்பித்தார் துரியோதனன். ஆணையை பின்பற்றிய துட்சாதனன், திரௌபதியின் கூந்தலை பிடித்து இழுத்து வந்தான். அவளை வாய்க்கு வந்த படி பேசி, சபை வரை கூந்தலை பிடித்து இழுத்து வந்தான். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடம் இருந்து உதவி கோரினார் திரௌபதி.ஆனால் அவளை காக்க யாருமே முன் வரவில்லை. அவளது கணவன்கள் அவமானத்தில் தலை குனிந்த நிலையில் இருந்தனர். இதன் பின் வரம்பை மீறி நடக்க ஆரம்பித்தான் துச்சாதனன். தன் சொந்த அண்ணியின் ஆடையை சபையினர் முன் அவிழ்க்க முனைந்தான். ஆனால் திரௌபதியை காக்க கிருஷ்ண பகவான் வந்ததால், துச்சாதனின் எண்ணம் ஈடேறவில்லை.

திரௌபதியின் சபதம்

திரௌபதியின் சபதம்

ஆடை அவிழ்ப்பு சம்பவத்திற்கு பிறகு, தனக்கு உதவ யாருமே முன் வராததை எண்ணி அங்கே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் திரௌபதி. மூத்தவர்கள் எவ்வளவோ மன்றாடியும் கூட, அவமானத்தில் அவர்கள் தலை குனிந்து தான் நின்று கொண்டிருந்தனர். அவளை மேலும் மேலும் அவமானப்படுத்திக் கொண்டிருந்தனர் கௌரவர்கள். இந்த அவமானத்தால் பொங்கி எழுந்த திரௌபதி, தன் கூந்தலை துச்சாதனனின் குருதியால் நனைக்காத வரை, அவிழ்ந்த இந்த கூந்தலுக்கு எண்ணெய்யும் தேய்ப்பதில்லை, முடிவதுமில்லை என சபதம் எதுத்தாள். சபையில் இருந்த அத்தனை பேரையும் அவளின் சபதம் உலுக்கி எடுத்தது. அதன் பின் த்ரிட்டராஷ்டிரா அரசர் திரௌபதியை அமைதியாக கோரினார். பாண்டவர்களையும் விடுவிக்க சொன்னார்.

இந்த அவமானத்திற்கு பிறகு அதனால் திரௌபதி தன் கூந்தலை முடியவில்லை. தனக்கு நேர்ந்த அவமானத்தை பாண்டவர்களுக்கு நினைவு படுத்தி கொண்டே இருக்க கூந்தலை முடியாமலேயே இருந்தார். பின்னர் பீமன் துட்சாதனனை கொன்ற பிறகு, அவனின் குருதியை திரௌபதிஇடம் எடுத்து வந்தான். அந்த இரத்தத்தில் தன் கூந்தலை கழுவிய பின்னரே தன் கூந்தலை முடிந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Draupadi's Vow: Why She Never Tied Her Hair?

Let us find out about that great vow of Draupadi which destroyed the mighty Kaurava empire. Everything about Draupadi is fascinating.
Desktop Bottom Promotion