அமீர் கானின் தீபாவளி பார்ட்டிக்கு செம கிளாமராக வந்த பாலிவுட் நடிகைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது இல்லத்தில் தீபாவளியையொட்டி பிரமாண்டமான பார்ட்டி ஒன்றை நடத்தினார். அந்த பார்ட்டியில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக கங்கனா ரனாவத், அதிதி ராவ், தீபிகா படுகோனே மற்றும் சோனம் கபூர் போன்றவர்கள் கலக்கலான உடையில் செம கிளாமராக வந்திருந்தனர்.

Aamir Khan diwali bash was a ramp show with all the Bollywood celebrities who attended in style. Here are some of them who will surely impress you.

அதுமட்டுமின்றி இந்த பார்ட்டியில் நடிகர் ரித்திக் ரோஷன், அனில் கபூர், அமிதாப் பச்சன், மாதவன் போன்றவர்களும் கலந்து கொண்டனர். இப்போது அமீர் கானின் பார்ட்டிக்கு கிளாமராக வந்த பாலிவுட் நடிகைகளின் ஸ்டைல்களைப் பார்ப்போம்.

அதிதி ராவ் ஹைதாரி

நடிகை அதிதி ராவ் பேபி பிங்க் நிற குர்தா மற்றும் வெள்ளை நிற பாலாஸ்ஸோ பேண்ட் அணிந்து வந்திருந்தார். மேலும் இவர் இந்த உடைக்கு ஏற்றவாறு அழகான மேக்கப் போட்டு, அழகிய ஆபரணங்கள் அணிந்து, க்யூட்டான ஹேர் ஸ்டைலைப் பின்பற்றி வந்திருந்தார்.

தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே செக்ஸி நிறமான சிவப்பு நிற எம்பிராய்டரி பார்டர் கொண்ட புடவையில் கண்களை பறிக்கும் அளவில் அழகாக வந்திருந்தார். அதிலும் இந்த புடவைக்கு இவர் மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் மற்றும் மேக்கப் அவரை அட்டகாசமாக வெளிக்காட்டியது.

சோனம் கபூர்

சோனம் கபூர் க்யூட்டாக வந்திருந்தார். அதிலும் அவர் அணிந்து வந்த சில்வர் எம்பிராய்டரி செய்யப்பட்ட மிண்ட் நிற சூட் அவரது அழகை அதிகரித்து வெளிக்காட்டியது. அதுமட்டுமின்றி, சோனம் கபூர் உடைக்கு ஏற்றவாறு ஆபரணங்கள் அணிந்து, சிம்பிளான மேக்கப் போட்டு வந்திருந்தார்.

கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத் கோபால்ட் நிற லெஹெங்கா அணிந்து, மேக்கப்பே போடாமல், ஆபரணங்கள் எதுவும் அணியாமல், கொண்டை போட்டு வந்திருந்தார். சொல்லப்போனால், அவரது ஆடையும், மேக்கப்பும் அவருக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை என்று சொல்லலாம்.

நர்கிஸ் பக்ரி

Celebs Add Glamour At Aamir Khan's Diwali Bash

பாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி மிகவும் ஹாட்டாக வந்திருந்தார். அதுவும் அவர் அணிந்து வந்த மஞ்சள் நிற புடவையும், அதனை அவர் அணிந்து வந்த விதமும் அவரை செம செக்ஸியாக வெளிக்காட்டியது.

என்ன நண்பர்களே! உங்களுக்கு இவர்களில் யாருடைய ஸ்டைல் பிடித்துள்ளது...?

English summary

Celebs Add Glamour At Aamir Khan's Diwali Bash

Aamir Khan diwali bash was a ramp show with all the Bollywood celebrities who attended in style. Here are some of them who will surely impress you.
Story first published: Saturday, October 25, 2014, 15:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter