For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அம்புபாசி: பூமி மாதாவின் மாதவிடாய் காலம்!

By Ashok CR
|

பெண்கள் பருவமடைதலை இந்துக்கள் திருவிழாவாக கொண்டாடுவது வழக்கமான ஒன்றே. பருவமடைதல் என்பது பெண்கள் வயதிற்கு வருவதையே குறிக்கும். பெண்கள் கருவளத்தை பெறும் அறிகுறியே அவர்கள் வயதுக்கு வருவதாகும். அதனால் இது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. இந்த பூமியில் வாழும் அனைவரையும் காக்கும் பூமி மாதாவும் கூட வருடம் ஒரு முறை மாதவிடாய்க்கு உள்ளாவார். ஆம் இது உண்மையே. இதனை மிகுந்த ஆரவாரத்துடன் அசாமில் உள்ள நிலச்சல் மலையில் இருக்கும் காமாக்யா கோவிலில் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

கடவுளின் மாதவிடாய் காலத்தையே அம்புபாசி என அழைக்கின்றனர். அம்புபாசி காலத்தின் போது, பூமி மாதா (உச்ச உயர்வான மாதா) மாதவிடாய்க்கு உள்ளாவார். அதனால் இந்த கடவுளுக்கான கோவில்கள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்படும். கோவிலுக்குள் தினமும் தேவி குளிப்பாட்டப்பட்டு, சிகப்பு நிற ஆடை அணிவிக்கப்பட்டு, பழங்கள் மற்றும் பூக்களை வைத்து வணங்கப்படுவாள்.

மகாபாரதத்தின் பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

அம்புபாசி நேரத்தின் போது, பூமி தேவிக்கு தன் பணியில் இருந்து சற்று ஓய்வு கொடுக்கப்படுகிறது. பருவகாலத்தின் தொடக்கத்தையும் கூட அம்புபாசி நேரத்தின் போது கொண்டாடப்படுகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து பூமி தேவிக்கும் நமக்கும் இது ஆறுதலை ஏற்படுத்தும். இந்து நாட்குறிப்பின் படி, ஆடி மாதத்தின் 7-ஆம் நாளில் அம்புபாசி தொடங்கும்.

எப்படி பெண்கள் கருவுற்று, கர்ப்பமாகி, குழந்தையை பெற்றெடுக்கிறார்களோ அதே போல் தான் பூமி தேவியும் பல பயிர்களை முளைக்க செய்து வளர்க்கிறார்கள். அதனால் பூமி தேவி கருவளம் மிக்க பெண்ணாக பார்க்கப்படுகிறாள். இதுவே இந்த கொண்டாட்டங்களுக்கு பின்னணியில் ஒரு பாரம்பரிய நம்பிக்கையாகும். அதனால் பழங்கால விவசாய கருத்துக்களை அம்புபாசி குறிக்கிறது. புராணத்தின் படி, சிவபெருமான் அவர்கள் சதி தேவியை தூக்கி கொண்டு செல்லும் போது, சதி தேவியின் யோனி எனப்படும் கருப்பை கீழே விழுந்த இடத்தில் தான் காமாக்யா கோவில் கட்டப்பட்டுள்ளது. இதனால் தான் என்னவோ இந்த கோவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

சுவாரஸ்யமான வேறு: அகோரிகள் யார்?

அம்புபாசியின் போது கடவுளின் மாதவிடாய் கொண்டாட்டங்களைப் பற்றி சற்று விவரமாக பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்புபாசி - அர்த்தம்

அம்புபாசி - அர்த்தம்

சமஸ்கிருதப்படி அம்புபாசி என்றால் 'அம்புவாச்சி' என அர்த்தமாகும். அதற்கு வெளிவரும் தண்ணீர் என அர்த்தமாகும். பருவகாலத்தினால் உலகத்தில் உள்ள நீர் சார்ந்த பகுதிகள் வீக்கமடைவதையே இது குறிக்கும். இதனை தான் காமாக்யா தேவியின் மாதவிடாயாக குறிக்கின்றனர். ஆனால் உண்மையில் இது ஒட்டு மொத்த பூமி தேவியின் மாதவிடாயாகும். காமாக்யா தன் யோனியை பாதுகாத்து வருவதால், இதுவே கொண்டாட்டத்தின் முக்கிய புள்ளியாக பல ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

எப்போது காமாக்யா சிவக்கிறாள்

எப்போது காமாக்யா சிவக்கிறாள்

யோனியில் இருந்து வெளிவரும் சிவப்பு நிற நீரை அம்புபாசி காலத்தின் போது காமாக்யா கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் என்பது நிலவுகின்ற நம்பிக்கையாகும். இந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள எந்த தேவி கோவில்களிலும் வழிபாடு நடைபெறுவதில்லை. மூன்று நாட்களுக்கு கோவில்களில் சாத்தப்பட்டிருக்கும். நான்காம் நாள் தேவியை குளிப்பாட்டிய பிறகே பொது தரிசனத்திற்கு கோவில்கள் திறக்கப்படும். மேலும் இந்த நேரத்தில் தேவி அணிந்திருக்கும் சிவப்பு நிற ஆடை மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இதில் சிறிய பகுதி கிடைத்தாலும் போதும், கிடைத்தவர்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

சிவப்பு: சக்தியின் நிறம்

சிவப்பு: சக்தியின் நிறம்

சிவப்பு நிறம் என்பது சக்தியின் அடையாளமாகும். ராஜாஸ் குணாவுடன் தொடர்புடையது இந்த வண்ணம். மேலும் படைப்பாற்றல் சார்பான அடையாளத்தையும் அது குறிக்கும். இந்த உச்ச உயர்வான தேவி இந்த நிறத்தினால் ஆனந்தம் அடைவதாகவும் நம்பப்படுகிறது. அதனால் அம்புபாசியின் போது தேவிக்கு சிவப்பு நிறத்தில் ஆடை அணிவிக்கப்படுகிறது. அதனால் பக்தர்கள் இந்த சிவப்பு நிற ஆடையை மிகவும் புனிதமாக கருதுகின்றனர்.

வீட்டில் அம்புபாசியை கொண்டாடுவது எப்படி?

வீட்டில் அம்புபாசியை கொண்டாடுவது எப்படி?

உங்கள் வீட்டிலேயும் கூட அம்புபாசியை கொண்டாடலாம். முதல் நாள், சிவப்பு நிற துணியை எடுத்து, தேவி சிலையை அதை கொண்டு மூடவும். பூஜை அறையின் திரை சீலை அல்லது கதவை மூடி வைக்கவும். மாதவிடாய் காலத்தின் போது கடவுளுக்கு ஓய்வை அளிப்பதாக இது விளங்கும். மூன்று நாட்களும், மாலை நேரத்தில், வெளியில் இருந்து பழங்கள், நீர் மற்றும் ஆரத்தி போன்றவைகளை தேவிக்கு படைக்கவும்.

நான்காம் நாள்

நான்காம் நாள்

நான்காம் நாளன்று, சிவப்பு நிற துணியை கழற்றி, தேவியின் சிலையை குளிப்பாட்டவும். அனைத்தையும் சுத்தமாக துடைக்கவும். தேவியின் துணிகளை மாற்றி புது துணிகள் அணிவிக்கவும். பின் பழங்கள் மற்றும் பூக்களை படைக்கவும். பின் தேவியை குளிர்விக்கும் வகையில் மந்திரங்கள் மற்றும் பஜனைகள் பாடுங்கள். நீங்கள் வேண்டியதை அவள் கண்டிப்பாக அருளுவாள்.

அம்புபாசியின் போது காமாக்யா தேவியின் முக்கியத்துவம்

அம்புபாசியின் போது காமாக்யா தேவியின் முக்கியத்துவம்

காமாக்யா தேவியை காமரூபா அல்லது காமரூபிணி என்றும் அழைக்கின்றனர். அதற்கு ஆசைகளின் தேவி என அர்த்தமாகும். அவள் காமாக்யாவிடம் கற்பாக குடி கொண்டிருக்கிறாள். மேலும் சிவபெருமானின் மனைவியாகவும் திகழ்கிறாள். அவள் பல தோற்றங்கள் அல்லது ரூபத்தில் இருப்பாள். அவள் சம்போகா ரூபத்தில் இருக்கும் போது, அவளே காமாவாக மாறுவாள். அதனால் சிவபெருமான் மீதான தன் காதலை நிறைவேற்றி கொள்ளவே அவளை காமாக்யா என அழைக்கிறோம். அனைத்து ஆசைகளுக்கும் அவளே மூலம். அனைத்து ஆசைகளை நிறைவேற்றுவதும் அவளே. அம்புபாசியின் போது அவள் சக்திவாய்ந்த கடவுளாக விளங்குவாள் என நம்பப்படுகிறது. அம்புபாசியின் போது, தூய்மையான மனம் மற்றும் இதயத்துடன் கடவுளை வணங்கினால், உங்கள் ஆசைகள் அனைத்தும் ஈடேறும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ambubasi: When Mother Earth Menstruates!

Let us take a close look on this celebration of the Goddess' menstruation during Ambubasi.
Desktop Bottom Promotion