For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்து மதம் பற்றிய 6 சுவாரஸ்யமான உண்மைகள்!!!

By Nobert Thivyanathan
|

இந்து மதம் பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மதமாகும். குறிப்பாக இந்த மதமானது இதன் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்காக பாராட்டப்படும் ஒரு மதம் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, இந்து மதத்தின் நம்பிக்கை முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், இதன் பண்புகள் மற்றும் கோட்பாடுகளால், இன்னும் சமுதாயத்தில் பெரிய இடத்தைப் பிடித்து வருகிறது. அதே நேரம் உலகம் எப்போதும் கண்டுகொள்ளும் மற்றும் மனதை ஆட்கொள்ளத்தக்க ஒரு மதம் இந்து மதம். இந்து மதம் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளை பற்றிப் பார்ப்போம்.

கலை நிபுணத்துவம், இலக்கியம் மற்றும் கட்டிடக்கலை- பண்டைய அரசாட்சி கோயில்கள், அரண்மனைகள் என நம்மை வளப்படுத்தியுள்ள பல இணையற்ற அம்சங்கள் இந்து மதத்தின் நம்பகமான சான்றுகள் ஆகும். இவ்வாறான பல அம்சங்களைப் பற்றி பேசுவதற்கு, இந்து மதத்தின் சுவாரஸ்யமான உண்மைகள் பற்றி பார்ப்போம். இவைகள் இந்து மதத்தின் சிறந்த போதனைகளாகவும் உள்ளன.

இதோ இந்து மதத்தின் சுவாரஸ்யமான உண்மை போதனைகளைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ்வின் குறிக்கோள்

வாழ்வின் குறிக்கோள்

மனித வாழ்வின் நோக்கம் பற்றி இந்து மதம் விரிவாக எடுத்துச் சொல்கிறது. இந்து மதத்தின் படி, மனித வாழ்வின் முதன்மையான நோக்கம் அக-உணர்வு. அதாவது மனிதன் தன்னை தானே அறிந்து கொள்ளுதல் ஆகும்.

அதிகளவில் விவாதிக்கப்படும் இந்துமத தலைப்புகள்

அதிகளவில் விவாதிக்கப்படும் இந்துமத தலைப்புகள்

இந்து மதத்தின் நம்பிக்கைகளில் ஆழமானதாக, தர்மம், கர்மம் மற்றும் மறுபிறவி ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. இவைகள் தான் இந்து மதத்தின் மிகவும் ஆழமான மற்றும் கூர்மையான இன்றியமையாத கோட்பாடுகள் ஆகும்.

ஆன்மா

ஆன்மா

இந்து மதம் ஆன்ம கோட்பாடுகள் பற்றி விவாதிக்கிறது. இந்து மதக் கோட்பாட்டின் படி, கிரகத்தில் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா உள்ளது. இது தான் உடல்களுக்கு சிறந்த திறன்களைக் கொடுக்கும் மிக உயர்ந்த ஆற்றலாக இருக்கிறது.

பெண்களுக்கு மரியாதை

பெண்களுக்கு மரியாதை

இந்து மதத்தின் நம்பிக்கையானது பெண்களுக்கு அதிகளவில் மரியாதை செலுத்தும் ஒரு அடையாளமாக உள்ளது. இந்த உண்மையை உறுதிப்படுத்துவதற்காக இந்து மதத்தில் ஆண் மற்றும் பெண் கடவுள்கள் உள்ளனர்.

கும்பமேளா

கும்பமேளா

கும்பமேளா மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில் தான் உலகில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுகின்றனர்.

ஓம்

ஓம்

ஓம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மந்திரம். இது தான் பண்ணிசைப் பாடும் போது உச்ச உணர்வை வெளிப்படுத்துகிறது. ஓம் என்ற முழக்கம் மிகவும் ஆன்மீகமான மறை உண்மையாகும் மற்றும் சுற்றுப்புறத்தில் இது தாக்க அலைகளைக் கொண்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Interesting Facts About Hinduism

Hinduism has endued us with unparalleled expertise in art, literature and architecture- the temples of ancient kingdoms, palaces etc. are more than just credible attestations to this. With so much to talk about, let us go ahead and take a look at these interesting facts about Hinduism.
Desktop Bottom Promotion