For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோபத்தில் தாண்டவமாடும் 5 இந்துக் கடவுள்கள்!!!

By Karthikeyan Manickam
|

தெய்வம் என்றாலே அது அன்பானது, சாந்தமானது என்றுதான் பொதுவாக நினைப்பதுண்டு. ஆனால் இந்து மதத்தில் சில கடவுள்களுக்கு பயங்கரக் கோபம் வரும் என சொல்லப்படுவதுண்டு. இந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

கோபத்தில் படுபயங்கரமான சாபங்களை அள்ளி வீசும் இந்தக் கடவுள்கள், சாந்தமாக இருக்கும்போது அதே அளவுக்கு வரங்களை வாரிக் கொடுப்பதும் உண்டு. நாம் தீமையான காரியங்களைச் செய்யாமல் இருப்பதன் மூலம் இந்தக் கோபக்காரக் கடவுள்களை அமைதியாக இருக்க வைக்கலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

கோபத்தில் தாண்டவமாடும் 5 இந்துக் கடவுள்களைப் பற்றிப் பார்ப்போமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காளி

காளி

பெரும்பான்மையான இந்து மதத்தினர் வணங்கும் பெண் தெய்வம் காளி. கழுத்தைச் சுற்றிலும் மண்டை ஓடுகளுடன் இவள் மிக உக்கிரமாகக் காட்சியளிப்பாள். அழிக்கும் கடவுள் என அழைக்கப்படும் காளிக்குக் கோபம் வந்தால் தவறு செய்பவர்களை ரணகளப்படுத்தி விடுவாள். அதனாலேயே, அவளுடைய கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக, கொள்ளையர்கள் இத்தெய்வத்தை அதிகம் வணங்குவதுண்டு.

சிவன்

சிவன்

புருஷ லட்சணத்திற்கு இலக்கணமாகக் கூறப்படும் சிவனுக்குக் கோபம் வந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவார். மிக உக்கிரமான கோபம் வரும்போது சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து பொசுக்கிவிடுவார். அதே நேரத்தில் அவரை சாந்தப்படுத்துவதும் எளிது என்று சொல்லப்படுவதுண்டு.

துர்க்கை

துர்க்கை

தன்னுடைய 10 கைகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் காட்சி தருவாள் துர்க்கை. அழிவின் சக்தி என்று கூறப்படும் இந்தப் பெண் கடவுள், மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழித்துத் துவம்சம் செய்ததால் மகிஷாசுர மர்தினி என்று அழைக்கப்படுகிறாள்.

சனி

சனி

இந்துக் கடவுள்களிலேயே இந்தக் கடவுளுக்குத்தான் சீக்கிரம் கோபம் வரும். சிலர் ஒரு மாதிரியாக நடந்து கொண்டால், அவர்களுக்கு சனி பிடித்துவிட்டது என்று கூறுவதுண்டு. பெரும்பாலும் நம் அனைவருடைய ஜாதகத்திலும் சனியின் ஆதிக்கம் இருப்பதாக ஜோசியர்கள் சொல்வதும் உண்டு.

ஹனுமான்

ஹனுமான்

சாந்தமே உருவான இந்துக் கடவுளான ராமபிரானின் உண்மையான பக்தனான இவரையும் பலரும் தெய்வமாக வணங்குகின்றனர். கோபத்தின் நிறமான ஆரஞ்சுதான் இவருக்குப் பிடித்த நிறமும்கூட. அநியாயம் செய்பவர்களைக் கண்டால் இவருக்கு பழியாகக் கோபம் வரும். வலிமையின் கடவுளாகவும் ஹனுமான் அழைக்கப்படுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Angry Gods In Hinduism

Who do you think are the angry Gods in Hinduism? Know why people strive so hard to please these angry Hindu Gods...
Desktop Bottom Promotion