For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு இந்தியனிடமும் இருக்கும் பண்பற்ற பழக்கவழக்கங்கள்!!!

By Nobert Thivyanathan
|

பல்வேறுபட்ட மக்களை கொண்ட ஒரு நாடு இந்தியா. இருப்பினும், ஒருசில மக்களிடம் உள்ள அருவெறுப்பான பழக்கவழக்கங்கள், இந்த தேசத்தைப் பற்றி கவலை கொள்ளச் செய்கிறது. அதிலும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள், நாம் இந்தியர் என்ற வகையில் நம்மை வெட்கபடச் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு தெருவில் நீங்கள் நடந்து செல்லும் போது, குப்பைகளால் தெருக்கள் அலங்கரிக்கப்பட்டிருப்பதை (அசிங்ககரிக்கப்பட்டிருப்பதை) காணத்தவறமாட்டீர்கள். அதைவிட மோசமான ஒரு விஷயம், சில ஆண்கள் பொது இடங்களை சிறுநீரால் அசுத்தப்படுத்துவதாகும்.

இந்திய மக்கள் மட்டுமே செய்யக்கூடிய சில முரணான வேலைகள்!!!

இந்தியர்கள் பின்பற்றும் இந்த அசிங்கமான பழக்கவழக்கங்கள் பொதுவானவை மற்றும் இந்த சம்பவங்கள் நடப்பதை அனுபவிக்கத் தவறுவதற்கான வாய்ப்பே இல்லை. நம்மை இந்தியன் என்று காட்டும் சில பழக்கவழக்கங்கள் இதோ பாருங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பேரம் பேசுதல் தான் உண்மையான டீல்

பேரம் பேசுதல் தான் உண்மையான டீல்

பேரம் பேசும் திறன் இருந்தால் மட்டும் தான், இந்தியாவில், காய்கறி, ஆடைகள் மற்றும் பர்னிச்சர் ஆகியவற்றை மலிவான விலையில் உங்களால் வாங்க முடியும். இது ஒவ்வொரு இந்தியரிடமும் காணப்படும் பழக்கவழக்கங்களில் ஒன்று.

சுவர்களை நனைத்தல்

சுவர்களை நனைத்தல்

இந்திய ஆண்களிடம் காணப்படும் மிகவும் அருவெறுப்பான ஒரு பழக்கம் தெருக்களில் சிறுநீர் கழித்தல் அல்லது தெருக்களை சிறுநீரினால் நனைத்தல். ஆனால் பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தினால், இந்தப் பழக்கத்தை மாற்ற முடியும்.

சாக்கடைகளை அடைத்தல் அல்லது அடைப்பை ஏற்படுத்துதல்

சாக்கடைகளை அடைத்தல் அல்லது அடைப்பை ஏற்படுத்துதல்

குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடும் பழக்கம் மக்களிடம் இருந்தால் போதும், மாறாக சாக்கடை நீரில் குப்பைகளைப் போடுதல் அல்லது டாய்லெட்டில் போட்டு தண்ணீருடன் அடித்து விடுதல் ஆகியவை இருக்கக் கூடாது. குப்பைகளைத் தெருக்களில் கண்ட படி வீசுதல் இந்தியர்களின் பொதுவான பழக்கமாகும்.

அரசியல்வாதிகள் மீது பழி சுமத்துதல்

அரசியல்வாதிகள் மீது பழி சுமத்துதல்

அரசியல்வாதிகள் மீது பழி சுமத்துவதற்குப் பதிலாக, நாம் வாழும் நாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை முதலில் எடுங்கள். அரசியல்வாதிகள் மீது பழி போடுதல் ஒவ்வொரு இந்தியரிடமும் உள்ள பண்பற்ற பழக்கமாகும்.

திருமண நிகழ்ச்சிகளில் அதிகமாக சாப்பிடுதல்

திருமண நிகழ்ச்சிகளில் அதிகமாக சாப்பிடுதல்

இந்தியாவில் திருமணங்கள் பகட்டான நிகழ்ச்சியாகும். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாத ஒரு நுழைவு உங்களுக்குக் கிடைத்தால், மக்கள் எவ்வாறு பேராசையோடு சாப்பிடுகிறார்கள் எனப் பாருங்கள். இது கண்களுக்கு அருவெறுப்பானதாகவும் மற்றும் வெறுப்பூட்டுவதாகவும் இருக்கும்.

பெண் குழந்தை பேரச்சம்

பெண் குழந்தை பேரச்சம்

உங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தால், மொத்தக் குடும்பமும் உங்களை தீய கண்களோடு பார்க்கும். பாலினம் பற்றிய இந்த எண்ணம் இந்தியர்களிடம் உள்ள ஒரு மோசமான பழக்கமாகும்.

சகுணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நம்பிக்கை வைத்தல்

சகுணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நம்பிக்கை வைத்தல்

நமது நாட்டில் சகுணம் இல்லாத நிலை ஒருபோதும் ஏற்படாது. இது வழக்கமோ அல்லது கடமையோ, தங்கம் அளவிடப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு நோட்டும் இருமுறை எண்ணப்பட வேண்டும்.

முடிந்தவரை எல்லா சிக்னலிலும் ஜம்ப் ஆகுதல்

முடிந்தவரை எல்லா சிக்னலிலும் ஜம்ப் ஆகுதல்

நேரத்தோடு செல்கிறீர்களோ அல்லது தாமதமாக செல்கிறீர்களோ அது மேட்டர் இல்லை, ஒவ்வொரு இந்தியரிடமும் உள்ள பொதுவான பழக்கம், ரெட் சிக்னலில் ஜம்ப் ஆகுதல் அல்லது ஆம்புலன்ஸ்சுக்குப் பின்னால் ரேஸ் செல்லுதல்.

லஞ்சம் வாங்குதல்

லஞ்சம் வாங்குதல்

உயர் பதவியில் இருப்பவர்கள் முதல் சிறிய பதவியில் இருப்பவர்கள் வரை, ஒரு சிறிய தொகையாக இருந்தால் கூட, அதை வேகமாக வாங்கிக் கொள்ளும் ஒரு பழக்கத்தைக் காணலாம். இனாமாகக் கிடைக்கும் காசுக்கு கையை விரித்தல் இந்தியர்களிடம் உள்ள இன்னுமொரு பண்பற்ற பழக்கமாகும்.

ஈவ் டீசிங்கை மறப்பதில்லை

ஈவ் டீசிங்கை மறப்பதில்லை

இந்தியாவில் அதிகமாக நடைபெறும் ஒரு பொதுவான விஷயம் ஈவ் டீசிங். இது சட்டவிரோதமானது என்றாலும், நாட்டின் பல பகுதிகளில் இது இன்னும் இருக்கிறது.

மத சக்தி

மத சக்தி

உனது மதத்திற்கும், எனது மதத்திற்கும் இடையிலான சண்டை என்பது இந்தியர்கள் மத்தியில் ஒருபோதும் நின்றுவிடாத ஒரு விஷயமாகும். இது இந்தியர்களிடம் மட்டும் இருக்கும் மற்றும் பின்பற்றும் ஒரு பண்பற்ற, விந்தையான பழக்கமாகும்.

பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமண முறையைப் கண்டிப்பாகப் பின்பற்றுதல்

பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமண முறையைப் கண்டிப்பாகப் பின்பற்றுதல்

பெரும்பாலான இந்திய வீடுகளில் அல்லது குடும்பங்களில் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணம் கட்டாயமானதாக உள்ளது. நீங்கள் டேட்டிங் செய்து, உண்மையாக காதலித்தாலும், பெற்றோர்களின் விருப்பப்படியே திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Dirty Habits Every Indian Has

Are you an Indian? Here are some habits that makes us Indian. Some of them may even be shameful, but it is true! Take a look.
Desktop Bottom Promotion