For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புகழ்பெற்ற சில இந்திய மூட நம்பிக்கைகள்!!!

By Ashok CR
|

இந்திய மண் மூட நம்பிக்கை நிறைந்த மக்களால் நிறைந்துள்ளது. ஒவ்வொரு பண்பாடு, மதம் மற்றும் வட்டாரத்தில் அவரவருக்கென ஒரு மூட நம்பிக்கை பட்டியலே உள்ளது. சில மூட நம்பிக்கைகளுடன் விஞ்ஞானபூர்வ காரணங்கள் இணைந்து கொண்டிருந்தாலும், பல நம்பிக்கைகள் மிகவும் முட்டாள்தனமாக தான் இருக்கும்.

நம் நாடு நாகரீக வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில், புதிய தலைமுறையினர் இந்த மூட நம்பிக்கைகளின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. இருப்பினும் இன்னமும் கூட சிலர் இவைகளை நம்பத் தான் செய்கின்றனர். குறிப்பிட்ட மூட நம்பிக்கையை பின்பற்ற வேண்டுமா வேண்டாமா என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் சில நேரங்களில் சில மூட நம்பிக்கைகளை நாமே நம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறோம்.

சமயம் சார்ந்த 12 சின்னங்களும்... அதன் அர்த்தங்களும்...

சில மூட நம்பிக்கைகள் நகைச்சுவையாக இருந்தாலும் கூட, சில நம்பிக்கைகளில் சமுதாய ஈடுபாடுகள் இருக்கிறது. இந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் ஒரு 10 மூட நம்பிக்கைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு ரூபாயின் தாக்கம்

ஒரு ரூபாயின் தாக்கம்

இந்திய பண்பாட்டில் ஒரு ரூபாய் என்பது புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் திருமணம் மற்றும் இதர விழாக்களில் பணத்தை அன்பளிப்பாக கொடுப்பது ஒரு பாரம்பரிய பழக்கமாகும். இருப்பினும் அப்படி அன்பளிப்பு கொடுக்கும் தொகை இரட்டை வரிசையில் இல்லாமல் ஒத்தை வரிசையில் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அத்தொகையுடன் ஒரு ரூபாய் நாணயம் சேர்த்து வைத்து கொடுக்கப்படும்.

எலுமிச்சை மிளகாய் மாயம்

எலுமிச்சை மிளகாய் மாயம்

இந்திய வீட்டு கதவுகளில் எலுமிச்சை மற்றும் மிளகாய் தொங்க விட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். பொதுவாக ஒரு நூலில், ஒரு எலுமிச்சையுடன் ஏழு மிளகாய்கள் சேர்த்து கதவுகளில் கட்டப்பட்டிருக்கும். ஏழு என்பது ராசியான எண் என்று கருதப்படுவதால், இது நம் வீட்டிற்கு அதிர்ஷ்டம் மற்றும் வளத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

கருப்பு பூனை

கருப்பு பூனை

நம் பாதையை கருப்பு பூனை கடப்பது மற்றொரு புகழ் பெற்ற மூட நம்பிக்கையாகும். இது ஏன் என்று தெரியாமலேயே பலர் இதனை பின்பற்றுகின்றனர். உங்கள் பாதையை கருப்பு பூனை குறுக்கிட்டால், உங்களுக்கு துரதிஷ்டத்தை உண்டாக்கும் என்றி நம்பப்படுகிறது. கருப்பு பூனை என்றால் மிகவும் புனிதமற்ற ஒன்றாக கருதப்படுகிறது; முக்கியமாக நல்ல காரியத்திற்காக வெளியே கிளம்பும் போது.

ராசியில்லாத சனிக்கிழமை

ராசியில்லாத சனிக்கிழமை

பொதுவாக சனிக்கிழமையை சனி பகவானுடன் ஒப்பிடுவர். சனி பகவான் கடும் கோபம் கொண்டவர் என்று நம்பப்படுகிறது. பொதுவாகவே சனிக்கிழமைகளில் பயணம் மேற்கொள்வது புனிதமற்றதாக கருதப்படுகிறது. அதே போல், சனிக்கிழமைகளில் நல்ல காரியங்களும் நடை பெறுவதில்லை.

கொள்ளிக்கண்

கொள்ளிக்கண்

பொல்லாத கண் அல்லது கொள்ளிக்கண் என்பது மற்றொரு புகழ் பெற்ற இந்திய மூட நம்பிக்கை. கொள்ளிக்கண் என்பது மற்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நம் மீது வீசும் ஒரு விசேஷ பார்வை. ஒருவர் உங்களை பார்த்து பொறாமை கொண்டு அல்லது அதிசயித்து பார்க்கையில், நீங்கள் நோய்வாய் படுவீர்கள் அல்லது கேட்டது ஏதேனும் நடக்கும் என்று நம்பப்படுகிறது.

அரச மரம்

அரச மரம்

அரச மரம் என்பது பேய்கள் குடிகொண்டிருக்கும் இடம் என்பது இந்தியாவின் பல பகுதிகளில் நம்பப்படுகிற ஒன்று மூட நம்பிக்கையாகும். அரச மரத்திலிருந்து இரவு நேரத்தில் அதிக அளவில் கார்பன் டையாக்சைட் வெளியேறும். அதனால் இந்த மரத்தடியில் யாரேனும் இரவு நேரத்தில் படுத்தால் ஆபத்தாகும். அதனால் யாரையும் இரவு நேரத்தில் அதற்கடியில் படுக்க வைக்காமல் விரட்டவே இந்த மூட நம்பிக்கை பரப்பப்பட்டு அந்து புகழும் பெற்றுள்ளது.

நகம் வெட்டுதல்

நகம் வெட்டுதல்

வாரத்தின் சில நாட்களில் அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நகம் வெட்டுவதும் ஒரு பொதுவான மூட நம்பிக்கையே. பொதுவாக செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது என்று நம்பப்படுகிறது. அது நமக்கு கெட்ட அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம். அதே போல தான் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் நகம் வெட்ட அனுமதி மறுக்கப்படுகிறது.

மாதவிடாய் கட்டுக்கதைகள்

மாதவிடாய் கட்டுக்கதைகள்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை வைத்து உடாக்கிய ஏற்றுக்கொள்ள முடியாத மூட நம்பிக்கை இதுவாகும். மாதவிடாய் ஏற்படும் பெண் தூய்மையற்று புனிதமில்லாமல் இருப்பாள் என்று நம்பப்படுகிறது. அதனால் அவர்களை சமையலறைக்குள் நுழைய விடுவதில்லை. அதே போல் பூஜை காரியங்களில் ஈடுபடவும் விடுவதில்லை. பழங்காலத்தில், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணை பார்ப்பதே பாவம் என்று கூட கருதப்பட்டது. அதனால் தான் மாதவிடாய் ஏற்படும் பெண்களை வீட்டின் ஒரு மூலையில் உட்கார வைத்து வீட்டின் பிற உறுப்பினர்களின் கண்களில் அவர்களை காட்டுவதில்லை.

கிரகணத்தின் தாக்கம்

கிரகணத்தின் தாக்கம்

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தை சுற்றியும் பல மூட நம்பிக்கைகள் நிலவுகிறது. ஹிந்து புராணத்தின் படி, கிரகணம் ஏற்பட்டுள்ள நாளன்று, சூரியன் அல்லது சந்திரன் ஒரு அரக்கனாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் அனைவரையும் வீட்டிற்குள்ளேயே இருக்க சொல்கிறார்கள். முக்கியமாக கர்ப்பிணி பெண்களை இந்நேரத்தில் வெளியே அனுப்பவதில்லை; காரணம் அவர்கள் வயிற்றில் வளரும் சிசு எந்த ஒரு குறைபாடும் இன்றி பிறக்க வேண்டும். அதே போல் இந்நேரத்தில் உணவருந்த கூடாது என்றும் கூறப்படுகிறது. ஏன் கிரகண காலத்தில் சமைக்க கூட கூடாது என்று கூறுகிறார்கள். சில வட்டாரங்களில், உணவு பண்டங்கள் கெட்டுப்போகாமல் இருக்க, ஒவ்வொரு உணவு பண்டங்களின் மீதும் துளசி செடியின் இல்லை வைக்கப்படும்.

அதிர்ஷ்டமில்லாத இந்திய விதவை பெண்கள்

அதிர்ஷ்டமில்லாத இந்திய விதவை பெண்கள்

விதவைகள் என்பது இன்னமும் கூட இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிற ஒரு சோகமான மூட நம்பிக்கையாகும். இந்தியாவில் விதவை பெண்கள் ஒரு விலங்கினை போல் நடத்தப்படுகிறார்கள். ஒரு விதவை பெண் தன் வாழ்நாள் முழுவதும் நகை நட்டு அணியாமல் வெறும் வெள்ளை புடவையை மட்டுமே அணிய வேண்டும். அவர்கள் காரசாரமான உணவுகளை உண்ண கூடாது. மேலும் சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், விதவை பெண்கள் என்றாலே ராசியற்ற பெண்கள் என்று நம்பப்படுகிறது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Popular Indian Superstitions

Some of these superstitions are funny while some have grave social implications. Let us take a close look at these 10 popular Indian superstitions:
Desktop Bottom Promotion