For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த நாட்டுல எந்த சரக்கு ஃபேமஸ்ன்னு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

By Maha
|

உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள மக்கள் ஆல்கஹாலை அருந்துவார்கள். ஆனால் இஸ்லாமியா நாடான வளைகுடா நாடுகளில் ஆல்கஹால் குடிக்கக் கூடாது. இருப்பினும் உலகின் மற்ற நாடுகளில் நிச்சயம் ஆல்கஹாலுக்கு என்று மார்கெட் இருக்கும். மேலும் ஒவ்வொரு ஆல்கஹாலின் சுவையும் வேறுபடும். அதேப் போன்று ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் அனைத்து ஆல்கஹாலை அருந்தினாலும், அந்த நாட்டில் உள்ள குறிப்பிட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட ஆல்ஹாலைத் தான் அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள்.

உதாரணமாக, ரஸ்யா சென்றால், அங்குள்ளவர்களின் உடலில் இரத்தத்தை விட வோட்கா தான் அதிகம் இருக்கும். அப்படியெனில், ரஸ்யாவில் வோட்கா தான் மிகவும் பிரபலமான அனைவராலும் அதிகம் பருகப்படும் ஆல்கஹால். இதுப்போன்று ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஆல்கஹால் மிகவும் பிரபலமானது.

இதற்கு அந்நாட்டின் பாரம்பரியமாகவோ அல்லது காலநிலையாகவோ என எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். இப்போது இங்கு எந்த நாட்டில் எந்த ஆல்கஹால் மிகவும் பிரபலமானது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒயின்: பிரான்சு

ஒயின்: பிரான்சு

உலகிலேயே பிரான்சு நாட்டை விட அமெரிக்காவில் ஒயின் அதிகம் குடிக்கப்பட்டாலும், பிரான்சு நாட்டில் உள்ள மக்கள் ஒயினை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கின்றனர் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஸ்காட்ச் விஸ்கி: இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா

ஸ்காட்ச் விஸ்கி: இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா

ஸ்காட்ச் விஸ்கியானது ஸ்காட்டிஷ் தீவுகளில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை ஆங்கிலேய மக்கள் தான் அதிகம் குடிப்பார்கள். இருப்பினும் ஸ்காட்ச் விஸ்கியை அமெரிக்கர்கள் தான் அதிக அளவில் குடிப்பார்கள்.

வோட்கா: ரஸ்யா

வோட்கா: ரஸ்யா

ரஸ்யர்கள் தான் வோட்காவை செய்தனர். பொதுவாக ரஸ்யா அதிக குளிர்ச்சியான காலநிலையைக் கொண்டதால், அங்குள்ளவர்கள் வோட்காவை சாதாரண பானம் போன்று பருகுவார்கள்.

போர்பன்: அமெரிக்கா (தெற்கு)

போர்பன்: அமெரிக்கா (தெற்கு)

போர்பன் என்பது ஒரு விஸ்கி. இந்த விஸ்கியானது போர்பன் என்னும் பகுதியில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டதால், அந்த மதுவிற்கு போர்பன் விஸ்கி என்று பெயரிட்டனர். மேலும் இந்த சரக்கானது அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் அதிகம் குடிப்பார்கள்.

போர்ட் ஒயின்: ஸ்பெயின்

போர்ட் ஒயின்: ஸ்பெயின்

ரெட் மற்றும் வெள்ளி நிற ஒயின் பிரான்ஸில் பிரபலம். ஆனால் ஒயினில் மற்றொரு வெரைட்டியான போர்ட் ஒயினானது ஸ்பெயினில் மிகவும் பிரபலமானது. மேலும் இங்கு இருந்து தான் பல்வேறு நாடுகளுக்கு போர்ட் ஒயின் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பீர்: ஜெர்மனி

பீர்: ஜெர்மனி

தற்போது அனைவரும் சாதாரணமாக பருகும் ஒரு ஆல்கஹால் தான் பீர். ஆனால் இந்த பீரை ஜெர்மன் நாட்டு மக்கள் தண்ணீரை விட அதிக அளவில் குடிப்பார்கள். மேலும் ஜெர்மன் நாட்டு பீர் கப் தான் உலகிலேயே மிகவும் பெரியது. அதுமட்டுமின்றி, மிகச்சிறந்த பீர் வேண்டுமானால் ஜெர்மனிக்கு சென்றால் நிச்சயம் கிடைக்கும்.

ரம்: இந்தியா

ரம்: இந்தியா

ரம் என்னும் ஆல்கஹால் பிரிட்ஷரால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்றும், இந்தியர்கள் தான் இந்த பானத்தை அதிகம் பருகுகிறார்களாம்.

டெக்கீலா: மெக்ஸிக்கோ

டெக்கீலா: மெக்ஸிக்கோ

அமெரிக்காவில் உள்ள மக்கள் டெக்கீலாவை அதிகம் பருகினாலும், அதற்கு அருகில் உள்ள மெக்ஸிக்கன் நாட்டு மக்கள் தான் உலகிலேயே அதிக அளவில் டெக்கீலாவை பருகி வருகின்றனர்.

ஜின்: பிலிப்பைன்ஸ்

ஜின்: பிலிப்பைன்ஸ்

ஜின் என்னும் மதுபானம் கடற்கரையோர நாடுகளான பிலிப்பைன்ஸில் மிகவும் பிரபலமான ஒரு பானமாகும்.

ஷாம்பெயின்: நைஜீரியா

ஷாம்பெயின்: நைஜீரியா

பிரான்ஸ் நாட்டில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் ஷாம்பெயின் என்னும் மதுபானம், பிரான்ஸை விட, நைஜீரியாவில் தான் அதிக அளவில் குடிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Countries And The Alcohol They Drink

People from all countries do not drink alcohol of the same type. In fact, some countries are known for their excess consumption of alcohol of only one kind. Here are some of the major countries and the alcohol they prefer to drink.
Story first published: Wednesday, December 18, 2013, 18:50 [IST]
Desktop Bottom Promotion