வேளாண் கொல்லி சீமைக் கருவேலம் இந்தியாவில் புகுந்த வரலாறு...

Subscribe to Boldsky

சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் என்றும் பொதுவாக அறியப்படுகிறது. இது வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் வேளாண் கொல்லி தாவரமாகும்.

இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா (Prosopis juliflora).இதை ஜப்பானிய மொழியில் "bayahonda blanca" எனவும் கூறுவர். மெக்சிகோ, கரீபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்ட இவை, ஆசிய, ஆஸ்திரேலியா கண்டங்களில் மிகப்பெரும் நச்சுத் தாவரமாக உருவெடுத்துள்ளது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஏமாற்றிக் கொண்டுவரப்பட்ட தாவரம்

வேளாண் பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற பெயரில் கடந்த 1950களில் ஆஸ்திரேலியாவில் இருந்து விதைகளாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது இந்த சீமைக் கருவேலம்.

அறுபது ஆண்டுகளாக நாசம்

கடந்த அறுபது ஆண்டுகளில் இது வேளாண் நிலங்களில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் பிடுங்கியெறியப்பட்டன

வேளாண் கொல்லியான இந்த தாவரம் கேரளாவில் வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இனிமேல் வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில், ஏறத்தாழ 25 விழுக்காட்டிற்கு மேலான விளை நிலங்களில் இது வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தி வருகிறது.

சீமைக் கருவேலம் வடிவமைப்பு

மரம் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது புளியமர இலைகளைப் போல் சிறு இலைகளையும், கருவேலமரத்தை ஒத்தும் காணப்படுகின்றன. இதன் வேர், நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது. இதனால் வேளாண் நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

மழை இல்லாவிட்டாலும் உயிர்வாழும்

வெயில் வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது சீமைக் கருவேலம் மரங்கள்.

மற்ற தாவரங்களின் வளர்ச்சியை கொல்கின்றன

எந்தவித நோயினாலும் பூச்சிகளாலும் பாதிப்பு அடையாத வகையிலும், எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு, தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. மேலும் இவை பிற தாவரங்களின் வளர்ச்சியையும் வெகுவாக தடுக்கின்றன.

மற்ற பெயர்கள்

தமிழ் நாட்டில் இந்த சீமைக் கருவேலம் மரங்கள் காட்டுக்கருவேல் மரம், சீமை உடை, சீமைக்கருவை, வேளிக்கருவை, டெல்லி முள், முட்செடி என அழைக்கப்படுகின்றது.

சீமைக் கருவேலம் மரத்தின் தீமைகள்

விவசாயம் மற்றும் ஏனைய செடிகள் தழைக்கா வண்ணம் நிலத்தை வீணடிக்கிறது.

சீமைக் கருவேலம் மரத்தின் தீமைகள்

அடர்ந்து வளர்ந்து பெரும் பகுதியே ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடியது

சீமைக் கருவேலம் மரத்தின் தீமைகள்

நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவை.

சீமைக் கருவேலம் மரத்தின் தீமைகள்

புல்களை அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பேற்படுத்துகிறது.

சீமைக் கருவேலம் மரத்தின் தீமைகள்

நிலத்தடி நீரைக்குறைப்பதால் அரிய மூலிகைகளின் வளர்ச்சி இழப்பு

சீமைக் கருவேலம் மரத்தின் தீமைகள்

இவைகளின் வீரியத்தால் பிறத்தாவரங்களுடன் கலந்து உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிறு கோளாறுகள் அடைகின்றன

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Anti-Agricluture Plant Prosopis Juliflora

How Anti-Agricluture Plant Prosopis Juliflora introduced in India? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter