For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழுப்பு நிறக் கண்களைக் கொண்டவரா? உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயங்கள் :

By Hemalatha
|

கண்களில் பலவகை உண்டு. மீன் போன்ற கண்கள், முட்டைக் கண்கள் , நீளமான கண்கள், சிறிய கண்கள். ஒவ்வொரு வகையான கண்களுக்கும் குணாதிசயங்கள் வேறுபடும்.
அப்படி ஆராய்ச்சியாளர்கள் பிரவுன் நிற கண்களை உடையவர்களிடம் ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்கள்.

Secretes of people with brown eyes

உங்களில் நட்பு வட்டத்தில் அத்தகைய கண்களை பெற்றிருப்பவரகள் இருந்தால் அவர்களைப் பற்றி தெரியாத விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.அல்லது நீங்கள் பரவுன் நிற கண்களைக் கொண்டவரா?உங்களைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் சொல்வது சரியா என எடைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எளிதில் யாரையும் நம்பி விடுவீர்கள். எல்லாரிடமும் எளிதாக பேசிவிடுவீர்கள்.உங்களிடம் ரகசியங்கள் தங்காது. உங்களைப் பற்றி எவ்வளவு பெரிய ரகசியத்தையும் நீங்கள் நம்பும் எல்லாரிடமும் சொல்லிவிடுவீர்கள்.

உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். உங்கள் நட்பு வட்டம் பெரியதாக இருக்கும். நீங்கள் நட்பிற்கு முதல் மரியாதை அளிப்பவர்.

பிரவுன் நிற கண்களைக் கொண்டவர்கள் எப்போதும் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்பர்கள். எங்கும், என்றும், எனர்ஜியுடனே காணப்படுவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் கூட வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியுடன் நடத்துவது என்றே யோசிப்பார்களாம் சைக்காலஜிஸ்டுகளும் இதையே வழிமொழிகிறார்கள். வாழ்க்கையை எப்படி என்ஜாய் செய்வது என இவர்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.

பரவுன் நிறக் கண்கள் கொண்டவர்கள் உணர்ச்சிகரமானவர்கள.இளகிய மனம் கொண்டவர்கள். சின்ன சிம்பதிக்கும் அழுதுவிடுவார்களாம்.அடுத்தவர்களின் சின்ன சின்ன கஷ்டங்களைக் கூட தாங்க முடியாமல் கண்ணீர் விடுவார்களாம்.

அதே போல் அடுத்தவர்களின் மன நிலையை புரிந்து கொள்வதில் அவர்களை யாரும் அசைக்க முடியாது. அதனால்தான் எல்லோரும் பழுப்புக் கண்களைக் கொண்டவர்களிடம் நம்பிக்கையாய் மனம் விட்டு பேசுவார்களாம்.

பிரவுன் நிற கண்கள் கொண்ட பெண்கள், அவர்கள் நேசிப்பவர்களுக்காக எதையும் செய்வார்களாம். அவர்கள் மீது அளவு கடந்த காதலை வைத்திருப்பார்கள்.

தங்கள் காதலனை எப்போதும் கொண்டாடுவார்களாம். அதனால் ஆண்களே உங்கள் கேர்ள் ஃபிரண்டிற்கு பிரவுன் நிறக் கண்கள் இருந்தால் நீங்கள் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

மொத்தத்தில் பழுப்பு நிற கண்கள் கொண்டவர்கள் வாழ்க்கையை நேசிப்பவர்கள்,அன்பானவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று சைக்காலஜிஸ்டுகளும் ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.

English summary

Secretes of people with brown eyes

Secretes of people with brown eyes
Desktop Bottom Promotion