For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமானின் நெற்றிக்கண் உருவானது பற்றிய சில கதைகள்!!!

By Ashok CR
|

சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணுக்கு புகழ் பெற்றவர். அவருடைய நெற்றிக்கண் மூலமாக தீப்பொறியை வெளிவந்து அனைத்தையும் பஸ்பமாக்கி விடும். சிவபெருமான கடும் கோபத்துக்கு ஆளாகும் போது, குற்றவாளியை தண்டிக்க தன்னுடைய நெற்றிக்கண்ணை திறப்பார் என்று நம்பப்படுகிறது. அழிக்க உதவும் இந்த மூன்றாவது கண்ணை மனதில் வைத்து தான் பலரும் அவரை அழிக்கும் கடவுள் என்று எடுத்துக் கொண்டுள்ளனர்.

சிவபெருமான் அணிந்திருக்கும் ஆபரணங்களின் முக்கியத்துவம்!!!

சிவபெருமானின் நெற்றிக்கண்ணை ஞானக் கண் என்றும் சில நேரம் குறிப்பிடப்படுகிறது. வலது கண்ணும் இடது கண்ணும் இவ்வுலகத்தில் அவருடைய நடவடிக்கையை குறிக்கும். மூன்றாவது கண்ணோ அவருடைய ஆன்மீக ஞானம் மற்றும் சக்தியை குறிக்கும். அவருடைய நெற்றிக்கண் மூலமாக தோற்ற நிலைக்கு அப்பாற்பட்டவைகளையும் பார்த்து, தீய சக்தியை அழிப்பார் உன்று நம்பப்படுகிறது.

Significance Of Shiva's Third Eye

சிவபெருமானின் நெற்றிக்கண் உருவான கதை சற்று சுவாரசியமானது. ஏன் மூன்றாவதாக ஒரு கண்ணை அவர் உருவாக்கினார் என்பதை இப்போது பார்க்கலாம்.

மகா சிவராத்திரியின் முக்கியத்துவம்...!

காமாவை எரித்தல்

சதி தேவியின் இறப்புக்கு பின், அவரின் மறைவை எண்ணி சிவபெருமான் மீளா துயரத்தில் மூழ்கினார். அதனால் ஒரு குகைக்கு சென்று ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அப்போது தான் சதி தேவி மீண்டும் பார்வதி தேவியாக பிறந்து, சிவபெருமானை திருமணம் செய்ய தயாரானார். ஆனால் கடவுள்கள் தீவிர முயற்சி செய்தும் கூட, சிவபெருமானை அவரின் தவத்தில் இருந்து எழுப்ப முடியவில்லை.

அப்போது, சிவபெருமானின் தவத்தை களைக்க, காதல் கடவுளான, காமா தேவி அனுப்பி வைக்கப்பட்டார். காமா சிவபெருமானை அம்பு மூலமாக தாக்கிய போது, சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறந்து, காமாவை எரித்து சாம்பலாக்கினார்.

நெற்றிக்கண்ணின் முக்கியத்துவம்

சிவபெருமானின் நெற்றிக்கண் ஆசைகளை நிராகரிப்பதை குறிக்கும். அது காதல் மற்றும் ஆசைகளின் கடவுளான காமாவை கொன்றது. நாம் ஆசைப்பட்டது நம்மை விட்டு போகும் போது, அது நம்மை மீளா துயரத்தில் தள்ளி விடும் என்பதை சதியின் மறைவில் அவர் உணர்ந்ததால் தான் ஆசையை நிராகரிக்கிறார். அதனால் ஆசைகளிடம் இருந்து விலகியிருந்தால், அதுவே பேரின்பத்தை பெறும் சிறந்த வழியாக கருதப்படுகிறது.

அந்தகா கதை

சிவபெருமானின் நெற்றிக்கனுக்கு மற்றொரு கதையும் உண்டு. ஒரு முறை, சிவபெருமானின் கண்களை தன் கைகளால் பார்வதி தேவி விளையாட்டாக மூடினாராம்.அப்போது இந்த அண்ட சராசரமே இருளில் மூழ்கி போனதாம். அதனால் இந்த உலகத்திற்கு வெளிச்சத்தையும் ஆற்றலையும் அளிக்க, சிவபெருமான் தன் நெற்றிகண்ணை திறக்க வேண்டியாக ஆயிற்று என்று நம்பப்படுகிறது.

சிவபெருமானின் நெற்றிக்கண் வெப்பம் பார்வதி தேவியின் கைகளை வியர்க்க வைத்ததாம். அந்த வியர்வையின் ஒரு துளி மண்ணில் விழுந்த போது, அது ஒரு குழந்தையாக உருமாறியது. அந்தகா என்றழைக்கப்பட்ட அந்த குழந்தையை, சிவபெருமானை வழிப்பட்டு வந்த குழந்தையில்லா ஒரு அசுரனுக்கு தத்து கொடுத்தனர். தன் பிறப்பை பற்றிய உண்மை தெரியாமல் வளர்ந்தான் அந்தகா. தன் தாயின் மீது காமவெறி உருவானால், தன் தந்தையால் தான் கொல்லப்பட வேண்டும் என்ற வரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றுக்கொண்டான்.

இந்த வரத்தை பெற்ற அந்தகா, உலகத்தின் மீது படையெடுத்து வெற்றிக்கொள்ள கிளம்பினான். அப்படி செல்லும் வேளையில், பார்வதி தேவியை சந்தித்து அவரின் அழகில் மயங்கினான். அவரை விரட்டி சென்றதால், சிவபெருமானால் கொல்லப்பட்டான்.

உலகத்தில் நிலவும் அனைத்து விதமான ஆசைகளையும் நிராகரிக்கும் நெற்றிக்கண்ணின் இருட்டு பக்கத்தை இந்த கதை வெளிக்காட்டுகிறது. அதற்கு காரணம் மனித இனம் வாழ்வதற்கு ஆசைகள் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. ஆசைகள் இல்லாமல் போகும் போது, இந்த உலகமே ஸ்தம்பித்து விடும்; இனப்பபெருக்கமும் இருக்காது, தலைமுறை புதுப்பித்தலும் இருக்காது.

அதனால் சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. மேலும் மனித இனத்திற்கு அது அறிவை அளிக்கும் மூலமாகவும் விளங்குகிறது.

English summary

Significance Of Shiva's Third Eye

Shiva's third eye is also sometimes known as the eye of wisdom. But there are many other meanings of Shiva's third eye as well. Read on to find out.
Desktop Bottom Promotion