For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலுவலகத்திற்கு செல்லும் போது நிச்சயம் அணியக்கூடாதவைகள்!!!

By Maha
|

தற்போது ஃபேஷன் என்ற பெயரில் நிறைய ஆடைகள் வந்துள்ளன. இந்த ஆடைகள் அனைத்தும் வெளியே செல்லும் போதோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ அணிந்து கொள்ள சிறந்ததாக இருக்குமே தவிர, அவற்றை அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடாது. எந்த ஒரு அலுவலகத்திற்கும் விதிமுறைகள் இருக்கும். அந்த விதிமுறைகளில் ஒன்று தான் ஆடை குறியீடு. இந்த ஆடை குறியீடு ஆண், பெண் அருபாலருக்குமே உள்ளது. பொதுவாக ஆண்களுக்கு அதிகமான ஃபேஷன் உடை இல்லாததால், அவர்களைப் பொருத்தவரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

ஆனால் பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு நிறைய ஃபேஷனான உடைகள் உள்ளன. அந்த உடைகள் அனைத்தும் வெளியிடங்களுக்கு செல்லும் போது உடுத்துவதற்கு பொருத்தமாக இருக்குமே தவிர, அலுவலகத்திற்கு ஏற்றது அல்ல. சரி, இப்போது அப்படி அலுவலகத்திற்கு செல்லும் போது, பெண்கள் நிச்சயம் அணியக்கூடாத சிலவற்றைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒற்றைத் தோள்பட்டை கொண்ட டாப்ஸ்

ஒற்றைத் தோள்பட்டை கொண்ட டாப்ஸ்

ஒவ்வொரு அலுவலகத்திலும் நிச்சயம் ஒரு நாளாவது கேஷூவல் ஆடைகளை அணிந்து வரலாம். அப்படி கேஷூவல் ஆடைகள் என்று வரும் போது ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணியலாம். ஆனால் டாப்ஸில் ஒற்றைத் தோள்பட்டை கொண்ட உடையை, அலுவலகத்திற்கு செல்லும் போது அறவே தவிர்க்க வேண்டும்.

சிறிய பாவாடை

சிறிய பாவாடை

அலுவலகத்திற்கு பெண்கள் சிறிய பாவாடைகளை அணிந்து செல்வது ஒருவகையான ஃபார்மல் உடையாகும். இருப்பினும், அந்த சிறிய பாவாடையில் பென்சில் கட் கொண்ட பாவாடை தான் ஃபார்மலே தவிர, மற்றவைகளை அணியக்கூடாது.

கிழிந்த ஜீன்ஸ்

கிழிந்த ஜீன்ஸ்

பொதுவாக அலுவலகத்திற்கு ஜீன்ஸ் அணிந்து செல்லலாம். இருப்பினும், ஆங்காங்கு கிழிந்த இருக்கும் ஜீன்ஸை அணிந்து செல்வது தவறு.

ஷீர் டாப்ஸ்

ஷீர் டாப்ஸ்

ஷீர் டாப்ஸ் என்பது உள்ளாடை அப்படியே வெளியே தெரியுமாறான ஆடையாகும். இந்த ஆடையை நிச்சயம் அலுவலகத்திற்கு அணிந்து வரக்கூடாது. வேண்டுமெனில், சரியான உள்ளாடையை அணிந்து, செக்ஸியான தோற்றத்தில் இல்லாதவாறு அணியலாம். இருப்பினும் இந்த மாதிரியான ஆடையை தவிர்ப்பது சிறந்தது.

செக்ஸியான உடை

செக்ஸியான உடை

சில ஆடைகள் மார்பகங்களை வடிவத்துடன் வெளிபடுத்துமாறு இருக்கும். இத்தகைய ஆடைகளை அலுவலகத்திற்கு எப்போதும் போடவேக் கூடாது.

ரேப்பர் தோற்றம்

ரேப்பர் தோற்றம்

படத்தில் காட்டியவாறான ஆடைகள் பப் போகும் போது அணிந்து செல்லக்கூடியவை. எனவே இந்த மாதிரியான ஆடையை அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடாது.

லேஸ்

லேஸ்

லேஸ் கொண்ட ஆடைகளை அணிந்து வருவதும் நாகரீகமற்ற செயல். எனவே அலுவலகத்திற்கு, இத்தகைய லேஸ் கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

டீப் நெக்

டீப் நெக்

சில ஆடைகளை அணிந்தால், மார்பகங்கள் வெளிப்படுமாறான நிலை உண்டாகும். எனவே படத்தில் காட்டியவாறு, டீப் நெக் கொண்ட ஆடைகளையும் போடக்கூடாது.

செக்ஸியான ஆடை

செக்ஸியான ஆடை

அலுவலகத்திற்கு படத்தில் காட்டியவாறு செக்ஸியான தோற்றத்தைக் கொடுக்கும் ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

மின்னும் ஆடைகள்

மின்னும் ஆடைகள்

திருவிழாவிற்கு தான் நன்கு ஜொலிப்பது போன்ற ஆடைகளை அணிய வேண்டுமே தவிர, அலுவலகத்திற்கு அல்ல.

அதிகப்படியான எம்பிராய்டரி

அதிகப்படியான எம்பிராய்டரி

உடுத்தும் உடையில் அதிகப்படியான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், அதனை அலுவலக அல்லது மற்ற விழாக்களின் போது அணிய வேண்டுமே தவிர, அலுவலகத்திற்கு தினமும் அணியக்கூடாது.

செருப்பு

செருப்பு

செருப்புக்களில் பல உள்ளன. அதில் ஒன்று தான் படத்தில் காட்டப்பட்டிருப்பது. ஆனால் இந்த மாதிரியான செருப்புக்களை வேலை செய்யும் அலுவலகத்திற்கு அணிந்து வரக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Not To Wear At Work?

If you are a working woman and want to know what you should not wear to office, then here is a compiled list for you. Take a look at the fashion dont's for workplace.
Desktop Bottom Promotion