For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொண்டாடப்படும் நவராத்திரியின் வகைகள்!!!

By Super
|

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தான் நவராத்திரி. நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளின் பட்டியலில் இது மிகவும் முக்கியமான ஒரு பண்டிகையாக கருதப்படுகிறது. இதனை கொண்டாட உலகத்திலிருந்து மக்கள் கூட்டம் பெரிய அளவில் திரண்டு, இத்திருவிழா மிகவும் கோலாகலாமாக கொண்டாடப்படும். நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்று அர்த்தமாகும். இத்திருவிழா ஒன்பது நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு நாளும் சமயஞ்சார்ந்த ஒரு முக்கியத்துவத்தை கொண்டதாக விளங்கும்.

நவராத்திரி என்பது சக்தி தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுள் வழிப்படபடுவார். நவராத்திரியின் போது இக்கடவுளை வணங்கியதால் கிடைக்கும் பலன்களும், சக்திகளும், தீமைகளை எதிர்த்து நிற்கும் என்று நம்பப்படுகிறது.

Types Of Navratri Celebrated Across India

பழங்காலத்தில் நவராத்திரி திருவிழாவின் போது பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்பட்டன என்று நம்பப்படுகிறது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு வகையான நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இன்றளவும் கூட இவ்வகை நவராத்திரிகளை மக்கள் கடைப்பிடிக்கின்றனர். இதில் உள்ள பல சடங்குகளில் முக்கியமானதாக கருதப்படுவது, ஒன்பது நாட்களுக்கும் விரதம் கடைப்பிடிப்பது. இது போக நாற்று நடுவது, ஒன்பது கிரகங்களுக்கும் மரியாதை செலுத்துவது, மகா நவமி மற்றும் விஜய தசமியை கொண்டாடுவது போன்ற சடங்குகளும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஒன்பது நாளில் நவராத்திரியின் போது நாம் ஏற்கனவே சொன்னது போல் பல விதமான சடங்குகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் அவைகளில் சிலவற்றை, குறிப்பாக இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கும் சடங்குகளை பற்றி தெரிந்து கொள்வோமா?

சாரதா நவராத்திரி:

சாரதா நவராத்திரி என்பது புகழ் பெற்ற ஒரு நவராத்திரி வகையாகும். இதனை இந்தியாவின் கிழக்கு பகுதியில் பரவலாக கடைப்பிடிக்கின்றனர். இந்த பகுதியில் துர்க்கை அம்மன் மஹிஷாசுர அசுரனை வதம் செய்யும் காட்சிகளை காண நேரிடலாம். இந்தியாவின் சில பகுதிகளில் சாரதா நவராத்திரியை மகா நவராத்திரி என்றும் அழைப்பதுண்டு. ஸ்ரீராம பிரான், தன் மனைவி சீதா தேவியை தேடி இலங்கைக்கு செல்வதற்கு முன், இந்த பூஜையை செய்ததால் இது மேலும் சிறப்பை பெற்றுள்ளது.

வசந்த நவராத்திரி:

இரண்டாவது முக்கிய வகையாக பார்க்கப்படுகிறது இந்த வசந்த நவராத்திரி. இதனை வட இந்தியாவில் தான் அதிகமாக கொண்டாடுகின்றனர். ஜம்முவில் உள்ள புகழ் பெற்ற வைஷ்னோ தேவி கோவில் இந்நேரத்தில் திருவிழா களை பெற்று கோலாகலாமாக காட்சி அளிக்கும். இதனை சைத்ர நவராத்திரி என்றும் அழைப்பார்கள்.

அஷாதா நவராத்திரி:

இந்தியாவின் சில பகுதிகளில் இந்த வகையை குஹ்யா நவராத்திரி என்றும் அழைப்பார்கள். அஷாதா நவராத்திரி 9 வகை சக்தி தேவியிக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.

பௌஷ் நவராத்திரி:

இவ்வகை நவராத்திரியை பௌஷ் சுக்லா பக்ஷாவின் போது காண நேரிடலாம். இது பிறை தேயும் காலமாகும்.

இவைகள் தான் இந்தியாவில் கொண்டாடப்படும் நவராத்திரி வகைகளிலேயே முக்கியமானதாகும். இவைகளில் சாரதா மற்றும் வசந்த நவராத்திரி தான் மிகவும் முக்கியமான வகைகளாகும்.

English summary

Types Of Navratri Celebrated Across India

The festival of Navratri sees all kinds of traditions which is celebrated all through the nine days. However, let us take a look at some of the types of Navratri which is celebrated all over India.
Desktop Bottom Promotion