For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்பான மற்றும் நேர்மறையான நபராக வாழ சில வழிமுறைகள்!!!

By Super
|

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். எல்லா காரியங்களிலும் குறை கூறுகிற ஒருவரால் எந்த இனிமையான சூழ்நிலையையும் மகிழ்ந்து அனுபவிக்க முடியாது. நேர்மறையான நபரோடு பழகவே நண்பர்களும், உறவினர்களும் விரும்புவார்கள். நேர்மறையான சிந்தனை இருக்கும் போது, வாழ்வின் கவலைகள், கடலில் கரைத்த வெல்லக்கட்டியை போல மறைந்து போய்விடும்.

நேர்மறையாக இருப்பதை குறித்து பேசுவது என்பது இதயத்தில் நேர்மறையாக இருப்பதை காட்டிலும் வித்தியாசமானது. நேர்மறையாக தோற்றம் அளிக்க வேண்டும் என்று நினைக்கின்ற அதே சமயத்தில் அதன் குறைபாடுகளையே மதிப்பிடுகிறோம். பாராட்டுவதற்கு முன்பு பல முறை யோசிக்கிறோம். ஒருவர் ஆலோசனை கேட்க வரும் போது அவர்களுடைய தவறுகளை மாத்திரமே நாம் வெளிப்படுத்துகிறோம். மிகவும் நகைச்சுவையான ஒரு காரியத்திலும் சிறிய புன்னகையை மாத்திரமே வெளிப்படுத்துகிறோம். எல்லாவற்றிலும் நிறையை விட குறையையே அதிகமாக கவனிக்கிறோம். ஆகவே நேர்மறையான நபராக மாற சில குறிப்புகளை இங்கே காணலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆசை வைத்தல்

ஆசை வைத்தல்

நேர்மறையான நபராக மாறுவதற்கு முதலில் தேவைப்படுவது, நேர்மறையாக இருக்க ஆசைப்படுவதே ஆகும். நேர்மறையாக வாழ்வதன் மூலம் வாழ்க்கை தரம் உயரும் என்று நம்பினால் மாத்திரமே நேர்மறையாக இருக்க விருப்பம் ஏற்படும். நேர்மறை என்பது ஒரு நறுமணம் போன்றது, நேர்மறையாக இருந்தால் அறிமுகம் இல்லாதவர்களும் கனிவாக நடந்து கொள்வார்கள், உடன்பணியாளர்கள் பாராட்டுவார்கள், சுலபமாக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

புதிய முயற்சிகள்

புதிய முயற்சிகள்

கூர்ந்து கவனிக்கவும். தினசரி வாழ்க்கை சம்பவங்களை பார்த்து, அவற்றை நேர்மறையாக எவ்வாறு கையாள்வது என்பதை குறித்து யோசிக்க வேண்டும். தோற்றத்தை அதிக நேர்மறையாக மாற்ற அத்தகைய சிந்தனைகள் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்ற, ஐந்து வழிகளை யோசிக்கவும். முக பாவணைகளை வைத்து காரியங்களை அறிந்து கொள்ள கற்றுக் கொள்ளலாம். மற்றவரை நம்புகிற தன்மை நேர்மையை வெளிப்படுத்தும்.

பேச்சு மற்றும் உடல் பாவணை

பேச்சு மற்றும் உடல் பாவணை

தினசரி பயன்படுத்தும் வார்த்தைகளில் நேர்மறையாக இருக்கவும். நட்பு உடையவராகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும் காணப்படும்படி உடல் பாவனைகளை பயன்படுத்த வேண்டும். ஒருவர் வியக்கத்தக்கவாறு இருந்தால், அவரை பார்த்து வியக்கவும், நகைச்சுவைகளுக்கு சிரிக்கவும், ஒருவர் ஏதாகிலும் புதிதாக செய்தால் அவரை பாராட்டவும், ஒரு காரியத்தை குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே சொல்ல அனுமதிக்கவும்.

உடன் இருப்பவர்கள்

உடன் இருப்பவர்கள்

நேர்மறை சிந்தனையும், எதிர்மறை சிந்தனையும் மற்றவரிடம் இருந்து பரவக்கூடியது என்பதால், நேர்மறையான நபர்களுடன் இருக்க நாடுங்கள். கோபமான அல்லது குறைகண்டுபிடிக்கின்ற நபர்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிட்டால், மற்ற மக்கள் முன்பாகவும் அவர்களுடைய குணத்தை பிரதிபலிப்பதை உணர்வீர்கள். நேர்மறையாக இருப்பதற்கு, உங்கள் நண்பர்கள் வட்டாரம் நேர்மறையாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்.

செயல்பாடுகள்

செயல்பாடுகள்

எப்போதும் செயல்பாடற்று ஆழ்ந்த சிந்தனையோடே இருக்கக்கூடாது. பிறருடனோ அல்லது தனியாகவோ நேர்மறையான செயல்பாடுகளை செய்ய வேண்டும். நல்ல நகைச்சுவையை பகிர்ந்துகொள்ளவும், இனிமையான ஒரு சம்பவத்தை விவரிக்கவும், விளையாட்டுகளில் பங்கெடுத்துக் கொள்ளவும், வேலை நேரத்திற்கு பிறகு மாலையில் நன்றாக ஓடவும், நல்ல ஆரோக்கியமான உடல் உறவை பெற்றிடுங்கள், இவற்றின் மூலமாக நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதை காணலாம்.

எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும்

எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும்

வாழ்க்கை தினந்தோறும் பல அதிர்ச்சிகளை கொடுக்கும். அதன் தாக்கத்தை குறைத்து, தோல்களை குலுக்கி அவற்றை உதரிச் செல்ல வேண்டும். வேலைக்கு செல்லும் போதும், வண்டியை நிறுத்த இடம் தேடும் போதும் அதிகமான பிரச்சனைகள் ஏற்படலாம். சில காரியங்களை மாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டால், மற்றவர்களுடன் எளிதாக நடந்துகொள்ளலாம்.

யோகா

யோகா

நன்றாக கவனம் செலுத்தி தியானத்தில் ஒன்றான பிராணயாமத்தை தினந்தோறும் பயிற்சி செய்ய வேண்டும். அது மகிழ்ச்சியான ஹார்மோன்களை சுரப்பது மட்டுமல்லாமல், ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு முறை யோகா செய்யும் போதும் உடலுக்குள் ஒரு நேர்மறையான ஆற்றலின் பேரலையை உணர முடியும். மேலும் அது நரம்புகளை அமைதிப்படுத்தி, மனதிற்கு ஆறுதல் அளித்து, மனநிலையை உயர்த்துகின்றது. யோகா சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கிறது.

ஒரு குறிப்பேட்டை பராமரிக்கவும்

ஒரு குறிப்பேட்டை பராமரிக்கவும்

நாளின் எல்லா நிகழ்வுகளையும் எழுதி வைப்பதற்கு பதிலாக, நேர்மறையான காரியங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து, அவற்றை குறித்து வைக்கவும். சிறிய காரியங்களில் நேர்மறையான காரியங்களை பார்க்கும் போது, எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் இருக்காது.

’நன்றி’ என்று கூறவும்

’நன்றி’ என்று கூறவும்

கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். பெற்றோருக்கும், நண்பர்களுக்கும், ஏன் நாம் செய்த அனைத்து கடின உழைப்புகளுக்கும், சாதித்த அனைத்து காரியங்களுக்காகவும் நமக்கே நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும். "அடிக்கடி நன்றி என்று கூறுவது தாழ்மை உள்ள நபராக மாற்றும், தாழ்மை உள்ளவர்கள் குறை கூறுவது அரிது".

இந்த குறிப்புகளை பின்பற்றினால், மற்றவர்கள் உங்களிடம் மாற்றத்தை காணும் போது ஆச்சரியம் அடைவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

tricks to become a loving, positive person | அன்பான மற்றும் நேர்மறையான நபராக வாழ சில வழிமுறைகள்!!!

Despite believing to have a positive outlook, we invariably weigh the cons first, consider several times before sparing a compliment, and broadcast only the odds when someone counts on us for advice. What's more, we prefer needless sarcasm for humour, manage a wry smile when something is genuinely funny, and believe deep down that the glass is actually half empty. Here there are some tricks to prove yourself as a positive person.
Desktop Bottom Promotion