For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபேஷனை கடைப்பிடிக்கும் போது ஆண்கள் செய்யும் 10 தவறுகள்!!!

By Super
|

பொதுவாக ஆடைகள், அலங்காரம் மற்றும் அழகை மேம்படுத்துதல் என்றாலே நம் நினைவுக்கு வருவது பெண்கள் தான். அவர்கள் தான் இதில் எல்லாம் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு பாடுபடுகிறார்கள். அதற்காக ஆண்கள் இதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை என்று சொல்ல முடியுமா? கண்டிப்பாக சொல்ல முடியாது. ஒரு காலத்தில் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் பெண்களுக்கு சமமாக ஆண்கள் இதில் எல்லாம் ஈடுபாட்டை செலுத்தி வருகின்றனர்.

ஆனால் பல ஆண்கள் தாங்கள் செய்வது தவறு என்றே தெரியாமல் தவறான பேஷனை பின்பற்றுகின்றனர். அது அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றி போய்விட்டது. ஆகவே அதன் விளைவுகளை பற்றியும் அவர்களுக்கு தெரிவதில்லை. இந்த வகையில் நீங்களும் கூட ஒருவராக இருக்கலாம் அல்லவா? என்ன நண்பர்களே வியப்பாக உள்ளதா? ஆம், அது தான் உண்மை. அப்படி பொதுவாக நடக்கும் தவறுகளை பற்றி தெரிய வேண்டாமா? தெரிந்து அதனை திருத்த வேண்டாமா? அப்படியானால் கீழ்கூறிய தவறுகளையும், அதனை சரி செய்வதற்கான டிப்ஸ்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனால் மற்றவர்கள் மத்தியில் சங்கடப்படாமல் அழகான தோற்றத்துடன் உலா வரலாம்.

சரி, இப்போது அந்த தவறுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியான அளவிலான ஆடைகளை அணியாதது

சரியான அளவிலான ஆடைகளை அணியாதது

இந்த தவறு தான் பட்டியலில் முதல் இடம் பிடிக்கிறது. பல ஆண்கள் தங்கள் அளவுக்கு ஆடை அணியாமல் சற்று பெரிய அளவிலான ஆடைகளையே அணிகின்றனர். சரியான அளவு பெரிய மாற்றத்தை உண்டாக்குவதில் எந்த சந்தேகமும் இல்லை.

கொடகொடவென பேண்ட், அளவை விட பெரிய சட்டை அணிவதால், தொங்கும் தோள்பட்டை என உங்கள் தோற்றத்தை அசிங்கமாக பிறருக்கு காட்டும். உங்கள் ஆடை அலமாரியில் உள்ள அனைத்து ஆடைகளும் இப்படி தான் இருக்கிறது என்றால் உடனே ஒரு தையல்காரரை அணுகும் நேரம் வந்துவிட்டது.

மிகவும் நீளமான பேண்ட்களை அணிவது

மிகவும் நீளமான பேண்ட்களை அணிவது

பேண்ட்களின் நீளம் சரியான அளவில் இருக்க வேண்டும், அவை அதிகமாகவும் இருக்கக்கூடாது குட்டையாகவும் இருக்கக்கூடாது. தேவையில்லாமல் சைனோஸ், காக்கீஸ் மற்றும் டெனிம் வகை பேண்ட்களை கீழ்பாகத்தில் மடித்து விடக்கூடாது. காக்கீஸ் மற்றும் சைனோஸ் வகை பேண்ட்கள் என்றால், அது உங்கள் ஷூ ஹீல்ஸிற்கு மேல் வரை இருக்க வேண்டும். இதுவே ஜீன்ஸ் வகை என்றால் இன்னும் கொஞ்சம் கீழே இறங்கலாம். ஆனால் கண்டிப்பாக தரையை தொடும் அளவிற்கு நீளமாக இருக்கக்கூடாது.

உங்கள் பேண்ட் அல்லது காக்கி வகை ஆடைகளில், அதில் செய்யப்பட்டுள்ள ஹெம்மிங்கிற்கு ஒன்னரை இன்ச் முன்பாக ஒரு பிரிவினை விட வேண்டும். ஹெம்மிங் செய்யாமல் பேண்ட் அணிவதையும் தவிர்க்கவும்.

குட்டை கை சட்டைக்கு, டை அணிவது

குட்டை கை சட்டைக்கு, டை அணிவது

குட்டை கைகளை கொண்ட சட்டையை அணிந்தால், அதற்கு டை போடாக்கூடாது. இது ஒரு மட்டமான பேஷனாகும். மேலும் அது ஒரு கார்ப்பரேட் தோற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தாது. டை என்பதை முழுக்கை சட்டையுடன் தான் போட வேண்டும். ஓய்வாக இருக்கும் போது கையை மடித்து விடுவதில் ஒன்றும் தவறில்லை.

பொருந்தாத நிறத்தில் சாக்ஸ் அணிவது

பொருந்தாத நிறத்தில் சாக்ஸ் அணிவது

இந்த பட்டியலில் பொதுவான பலரும் செய்யும் தவறு ஒன்று இருக்கிறது என்றால் அது பொருந்தாத நிறத்தில் சாக்ஸை அணிவது தான். சாக்ஸ் என்பது பேண்ட் நிறத்திற்கு ஈடாக இருக்க வேண்டுமே தவிர, ஷூ நிறத்திற்கு அல்ல. முக்கியமாக ஃபார்மல் வகை ஆடைகளுக்கு இந்த சந்தேகம் எழவே தேவையில்லை. இதுவே டெனிம் வகை பேண்ட் அணிந்திருந்தால், ஸ்போர்ட்ஸ் வகை வெண்ணிற சாக்ஸ் அணியலாம்.

வித்தியாசமான நிறத்தில் பெல்ட், ஷூ மற்றும் வாட்ச் இருப்பது

வித்தியாசமான நிறத்தில் பெல்ட், ஷூ மற்றும் வாட்ச் இருப்பது

வாட்ச் ஸ்ட்ராப் (வார்) மற்றும் பெல்ட்டின் லெதர் (தோல்) ஒன்றோடு ஒன்றாக ஒத்து போக வேண்டும். பெல்ட் லெதரின் நிறம், வாட்ச் ஸ்ட்ராப்பின் நிறம் மற்றும் உங்கள் ஷூவின் நிறமும் ஒத்துப்போக வேண்டும் என்பது ஒரு அடிப்படை விதியாகும். அதே நிறத்தில் கொஞ்சம் வேறுபாடு இருந்தால் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அதுவும் ஒரு அளவிற்கு தான். முற்றிலும் நிறம் வேறுபட்டு இருக்கக்கூடாது. நிறம் மட்டுமல்லாது, அவைகளின் பளபளப்பு மற்றும் நுண் அமைப்புக்கும் இது பொருந்தும்.

ஒருவேளை நீங்கள் காஷுவல் ஷூ அணிந்திருந்தால், பெல்ட்டின் அகலம் சற்று பட்டையாக இருக்க வேண்டும்.

செருப்புக்கு சாக்ஸ் போடுவது

செருப்புக்கு சாக்ஸ் போடுவது

செருப்பு போடும் போது சாக்ஸ் போடுகிறீர்களா? ஐயோ ப்ளீஸ் வேண்டாமே! தயவு செய்து இதனை தவிர்த்திடுங்கள்.

அளவுக்கு அதிகமாக நகைகள் மற்றும் அணிகலன்கள் அணிவது

அளவுக்கு அதிகமாக நகைகள் மற்றும் அணிகலன்கள் அணிவது

இது நம் பட்டியலில் உள்ள மற்றொரு தவறான பேஷனாகும். நீங்கள் ஒரு ராக் அல்லது பாப் ஸ்டார் என்றாலொழிய ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான நகைகள் அணிவதை தவிர்க்கவும். ஆண்களுக்கு நகை வகை என்றால் அவர்களின் வாட்ச், கல்யாண மோதிரம் மற்றும் சட்டைக்கு அணியும் கப்லின்க் போன்றவைகளை சொல்லலாம். கையில் ப்ரேஸ்லெட் அல்லது கழுத்தில் செயின் அணியலாம், ஆனால் பார்மல் ஆடைகள் அணியும் போது அல்ல. இருப்பினும் நீங்கள் அணியும் நகைகளின் எண்ணிக்கைகளில் ஒரு கண் இருக்க வேண்டும்.

டை கட்டும் போது நீளமாக விடுவது

டை கட்டும் போது நீளமாக விடுவது

ஆண்மகன்களுக்கு டை என்பது முக்கியமான ஒன்றாகும். அதனால் அதில் கவனம் தேவை. டை என்பது பெல்ட் பக்கிலுக்கு மேலாக முடிந்து விட வேண்டும். அதே போல் டையின் நுனி, பெல்ட் பக்கிலின் நடுவே இருக்க வேண்டும். ஒரு ஆணாக இருந்து கொண்டு ,டையில் உள்ள டிம்பிளை மறக்கலாமா? டையில் உள்ள டிம்பிளை, அதாங்க உங்கள் கழுத்து மையப் பகுதியில் நீங்கள் போடும் டையின் முடிச்சை சரியாக போடவில்லை என்றால் எவ்வளவு அழகாக ஆடை அணிந்திருந்தாலும் கூட, உங்கள் தோற்றம் எடுப்பாக இருப்பதில்லை. மேலும் டையின் அகலம் ஒவ்வொரு பேஷனை பொறுத்து மாறுபடும்.

பேக்

பேக்

முதுகில் மாட்டிக் கொள்ளும் பேக் ஃபார்மல் வகையை சேர்ந்ததாக இருந்தால், பார்க்க அவ்வளவு நன்றாக இருக்காது. அனைத்து நகரங்களிலும் இதை பலர் பின்பற்றினாலும் கூட, நீங்கள் ஒரு மெல்லிய சின்ன பையை மாட்டிக் கொண்டு சுற்றினால் உங்களுக்கு வசதியாக மட்டுமல்லாமல், தோற்றத்தையும் அழகுறச் செய்யும். ஆகவே உடைக்கு ஏற்றவாறு பேக்குகளை வைத்துக் கொள்ளுங்கள்.

பருமனான முன் பாக்கெட்டும் பின் பாக்கெட்டும்

பருமனான முன் பாக்கெட்டும் பின் பாக்கெட்டும்

இரண்டில் ஒரு ஆண் இந்த கொடுமையான பேஷனை பின்பற்றுகின்றனர். இது நமக்கு சிலவற்றை எடுத்துக்காட்டும். ஒன்று உங்கள் பேண்ட் மிகவும் இறுக்கமாக இருக்கும்; அதனால் நீங்கள் உங்கள் பர்ஸ் வைக்கும் போது இடம் பத்தாமல் புடைத்துக் கொண்டு தெரியும். அல்லது உங்கள் பர்ஸ் மிகவும் பெரியதாக இருக்கும். ஆடை அணிவதில் உங்கள் ரசனை மிகவும் மட்டமாக இருக்கிறது என்பதை இது வெளிக்காட்டும். அதனால் பர்ஸில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, அதனை மெல்லியதாக மாற்றுங்கள்.

மேற்கூறியவைகளை பின்பற்றினால் போதும் உங்களை ஒரு அழகான ஆண்மகனாக மாற்ற!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Fashion Mistakes Men Make

The most common fashion faux pas made by men are so inbuilt in the daily routine and are so general / common that one does not even realize the impact of it. You can follow the tips provided here and save yourself from the embarrassment and look your best.
Desktop Bottom Promotion