For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த ராசிக்கல் போட்டா நல்லது நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

By Maha
|

பொதுவாக பெண்கள் நகைகளை வாங்குவதற்கு நகை கடைகளுக்கு செல்லும் போது, பல வகையான நகைகளைப் பார்ப்பார்கள். அவ்வாறு பல வகையான நகைகளை பார்க்கும் பெண்களால், பிடித்த நகைகளை எளிதில் வாங்குவது என்பது மிகவும் கடினம். ஏனெனில் இந்த நேரத்தில் நகைக் கடைக்காரர்கள் ரூபி, பவளம், வைரம், மரகதம் போன்றவற்றால் ஆன நகைகளையும் காண்பிப்பார்கள்.

ஆகவே இந்த நேரத்தில் அவற்றை பார்க்கும் போது அதை வாங்கலாம் என்று தோன்றும். ஆனால் அப்போது மனதில் ஒரு மணி அடிக்கும். அது என்னவென்றால், நம் ராசிக்கு இந்த மாதிரி அதிர்ஷ்டக் கற்களை அணிவது நல்லதா கெட்டதா என்பது தான்.

ஆகவே அத்தகையவர்களுக்காக அமெரிக்க நவரத்தினக் கற்கள் கழகத்தில் (Gemological Institute of America) உள்ள உலகப் புகழ்பெற்ற ராசிக்கல் நிபுணர் மற்றம் நகை வடிவமைப்பாளரான அமித் தோஷியிடம், தமிழ் போல்டு ஸ்கை அதிர்ஷ்டக் கற்களைக் குறித்தும், அவருக்கு இதன் மேல் ஆர்வம் வந்தது எப்படி என்றும் பேட்டி எடுத்தது. அதைப் படித்து பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராசிக்கல் நிபுணர்

இவர் தான் அமெரிக்க நவரத்தின கற்கள் கழகத்தில் உள்ள திரு. அமித் தோஷி. இவர் ஒவ்வொரு ராசிக்கற்களை அணிவதால் என்ன பலன் கிடைக்கும் என்று சொல்லியுள்ளார். படித்து பாருங்கள்.

ஜாதகத்தில் சந்திரன் சாதகமான இடத்தில் இருந்தால்...

ஜாதகத்தில் சந்திரன் சாதகமான இடத்தில் இருந்தால்...

இந்த வெள்ளை நிற முத்துக்கள் உள்ள மோதிரத்தை அணிந்தால், நல்ல செல்வாக்கு அதிகரிக்கும். அதிலும் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேற நினைப்பவர்கள் இதனை அணிந்தால், அனைவராலும் மதிக்கப்படும் வகையில் ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியும்.

ஜாதகத்தில் குரு சாதகமான இடத்தில் இருந்தால்...

ஜாதகத்தில் குரு சாதகமான இடத்தில் இருந்தால்...

இந்த வெளிர் நிற மஞ்சள் கற்கள், ஒருவரின் ஆன்மீகம், தன்னம்பிக்கை, தைரியமான ஒரு முடிவை எடுக்க தூண்டும். மேலும் இந்த கற்கள் அணிந்திருப்பவரை மிகவும் மரியாதைக்குரியவராய், தலைமைத்துவ குணாதியங்கள் நிறைந்த மனிதனாக்கும். இருப்பினும், இது அணிந்தவர்களுக்கு அதிகப்படியான கோபத்தையும் வரவழைக்கும்.

வருணபகவான் சாதகமான இடத்தில் இருந்தால்...

வருணபகவான் சாதகமான இடத்தில் இருந்தால்...

இந்த சிவப்பு நிற ரத்தினக் கற்கள் உள்ள மோதிரத்தை அணிந்தால், அது அவரது உண்மையான சுபாவத்தை மற்றும் தனித்துவத்தை வெளிக் கொண்டு வரும். இதனால் செல்வமும், அதிர்ஷ்டமும் அதிகரிக்கும்.

ஜாதகத்தில் புதன் சாதகமான இடத்தில் இருந்தால்...

ஜாதகத்தில் புதன் சாதகமான இடத்தில் இருந்தால்...

பச்சை நிற மரகதக் கற்களை அணிவது நல்லது. இதனால் பகுத்தறிவு, சொல்நயம் மற்றும் திறமை போன்றவை அதிகரித்து, அழகாக திகழ்வீர்கள். மேலும் இந்த கற்களை அணிந்தவர்கள், மிகவும் சந்தோஷமாகவும், அதிர்ஷ்டசாலியாகவும், கல்வியறிவுள்ளவர்களாவும், மொத்தத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவர்களாவும் செய்யும்.

சுக்கிரன் சாதகமான இடத்தில்இருந்தால்...

சுக்கிரன் சாதகமான இடத்தில்இருந்தால்...

வைரம் உள்ள மோதிரத்தை அணிவது சிறந்தது. இதனால் ஒருவரின் கவர்ச்சி, வசீரகம் மற்றும் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ ஆசீர்வதிக்கும். மேலும் இது ஒருவரின் தனிப்பட்ட பண்புகள் மற்றும் மனிதாபிமானம் உள்ளவராக வெளிப்படுத்தும்.

ஜாதகத்தில் கேது சாதகமான இடத்தில்இருந்தால்...

ஜாதகத்தில் கேது சாதகமான இடத்தில்இருந்தால்...

இதன் பெயருக்கு ஏற்றவாறே, இதனை அணிந்தால், வாழ்க்கையில் சந்தோஷமாகவும், சொத்துக்களை குவிக்கும் வண்ணம் சக்தி படைத்தவராகவும், வாழ்க்கையில் முன்னேறத் தடையாக உள்ள அனைத்து தீமைகளையும் உடைத்தெறிய முடியும்.

சனி சாதகமான இடத்தில் இருந்தால்...

சனி சாதகமான இடத்தில் இருந்தால்...

நீலக்கற்களை அணியும் போது, வாழ்நாளானது நீடிக்கும். மேலும் இந்த கற்கள் அணிந்திருப்பவரிடம் கருணை என்னும் இயற்கை பண்பை உருவாக்கி, அவரை அனைவருக்கும் பிடித்தவாறு செய்யும்.

ஜாதகத்தில் செவ்வாய் சூப்பராக இருந்தால்...

ஜாதகத்தில் செவ்வாய் சூப்பராக இருந்தால்...

இந்த அடர் சிவப்பு நிற கல்லானது, ஒருவரின் வாழ்வில் நேர்மறையான எண்ணங்களை அதிகரித்து, அவர்களது வலிமை, தைரியம், ஆர்வம் மற்றும் நேர்மறையான எண்ணங்களால், அனைவர் மத்தியிலும் புகழ்பெற்றவராக வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ரத்தினக் கற்களைப் பற்றி படிப்பது என்பது மிகவும் வித்தியாசமான ஒரு படிப்பு. உங்களுக்கு எப்படி இந்த படிப்பின் மீது ஆர்வம் வந்தது?

ரத்தினக் கற்களைப் பற்றி படிப்போர் மிகவும் குறைவு. அதனால் தான் முதலில் இது எனக்கு மிகவும் ஆர்வமான ஒரு படிப்பானது.

உண்மையில் நீங்கள் ரத்தினக் கற்களை அணிவதால் ஆரோக்கியம், பழக்கவழக்கம் அல்லது தலைவிதி மாறும் என்று நம்புகிறீர்களா?

இல்லை, எனக்கு ரத்தினக் கற்களால் தலைவிதியை மாற்றலாம் என்ற நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு கற்களிலும் ஒரு தனித்துவமான சக்தியான உள்ளது மற்றும் அதனை அணிவதால் தலைவிதியை எல்லாம் மாற்றாது.

இந்தியாவில் நிறைய மக்கள் ரத்தினக் கற்களை, அவர்களது ராசி அல்லது நட்சத்திரங்களின் படி அணிகிறார்கள். நீங்கள் இது மிகவும் அவசியம் என்று நினைக்கிறீர்களா?

பிறந்த நாளைக் கொண்டு ரத்தினக் கற்கள் அணிவதால் ஒன்றும் நடக்கப் போவது இல்லை. மக்கள் யோசிக்காமல் எந்த விதமான ரத்தினங்களால் ஆன நகைகளையும் அணியலாம்.

இந்தியாவில் உங்களது 'ஹெரிடேஜ் பாயிண்டே' (Heritage Pointe) என்னும் ரத்தினங்கள் விற்கப்படும் ஸ்டோரை எங்கு காணலாம்?

தற்போது அகமதாபாத்தில் உள்ளது. இருப்பினும் கூடிய விரைவில் மற்றொரு ஸ்டோரை மும்பையில் திறக்க உள்ளோம். இந்தியாவில் இந்த ஸ்டோரை விரிவுபடுத்துவது சற்று கடினம். ஆனால் இந்த 'ஹெரிடேஜ் பாயிண்டே'-வின் ஆய்வுக்கூடம் அமெரிக்கா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ளது.

உங்களது ஹெரிடேஜ் பாயிண்டே ஸ்டோர் ஆடம்பர மக்களுக்கு ஏற்றதாக இருக்குமா அல்லது நடுத்தர மக்கள் வாங்குவதற்கு ஏற்றவாறு இருக்குமா?

நான் எப்படி வித்தியாசமான படிப்பை மேற்கொண்டுள்ளேனோ, அதேப் போல் நான் செய்யும் நகை வடிவமைப்பும் சற்று வித்தியாசமானது. அதனால் அதன் விலை அதற்கேற்றாற் போல் இருக்கும்.

திரையுலக நட்சத்திரங்கள் நீங்கள் வடிவமைத்த நகைகளை அணிந்துள்ளனரா?

ஆம். இந்திய நடிகைகளான ரேகா மற்றும் சுஷ்மிதா சென் போன்றோரும், ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜூலியும் அணிந்துள்ளனர்.

நீங்கள் வைரங்களை விட ரத்தினக் கற்கள் அதிக விலை மதிப்புடையது என்று நினைக்கிறீர்களா?

நான் எப்போதுமே வைரங்கள் மிகவும் விலை மதிப்பானது என்று சொல்லமாட்டேன். ஆனால் மக்களால் நல்ல தரமான ரத்தினக் கற்களை கண்டுபிடிப்பது என்பது கடினம். எனவே வைரங்களை விட, ரத்தினங்கள் கிடைப்பது மிகவும் கடினமானது.

நகை வடிவமைப்பாளரான உங்களுக்கு எந்த ராத்தினம் மிகவும் பிடிக்கும்?

எனக்கு பிடித்தது அலெக்சான்ரைட் (Alexandrite) என்னும் ரத்தினம் தான் மிகவும் பிடிக்கும். இது கிடைப்பது கடினம் மற்றும் மிகவும் விலைமதிப்புமிக்க ரத்தினமும் கூட. அதிலும் இதன் விலை வைரத்தை விட 5 மடங்கு அதிகம்.

நீங்கள் நமது நேயர்களுக்கு எப்படி நல்ல தரமான ரத்தினக் கற்களை வாங்குவது என்று சொல்ல முடியுமா?

முதலில் ரத்தினக் கற்களை வாங்க நினைக்கும் போது, சான்றிதழ் இல்லாத ரத்தினங்களை வாங்க வேண்டாம். அதிலும் மூன்று சான்றிதழ்களானது மிகவும் முக்கியம். ஒன்று உண்மையான GIA (அமெரிக்க நவரத்தின கற்கள் நிறுவனம்). மற்றொன்று ஐரோப்பிய சான்றிதழான HRD. மூன்றாவது நம்பிக்கைத்தன்மையை கொடுக்கும் சான்றிதழான சர்வதேச இயற்கை (அ) செயற்கை மாணிக்க கற்களை பற்றிய ஆய்வு நிறுவனம் (IGI) போன்றவை.

English summary

Talking of Gemstones with Amit Doshi

Amit Doshi is the famous Gemologist and an Indian jewellery designer whose creations are famous even in Hollywood. He has the rare quality of mixing the scientific know-how of a gemologist with the creative brilliance of a jewellery designer.
Desktop Bottom Promotion