For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் அணியக்கூடியவாறு இருக்கும் புடவை கலெக்ஷன்கள்!!!

By Maha
|

இந்திய பாரம்பரிய உடையான புடவையானது பெண்களுக்கு உடுத்துவதற்கு விருப்பமாக இருப்பதோடு, அதை உடுத்தி வரும் பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். முன்பெல்லாம் புடவையை விரும்பாத பெண்கள், இப்போது புடவையை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக பிரபலங்கள். அதிலும் பாலிவுட்டில் சோனாக்ஷி சின்ஹா, கரீனா கபூர், தீபிகா படுகோன், வித்யா பாலன், ஜெயா பச்சன் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற பலர் தற்போது நடைபெறும் விழாக்களில் புடவையிலேயே கலக்குகின்றனர்.

இந்த புடவைகள் அனைத்தும் பிரபலங்கள் மட்டும் உடுத்துமாறு இல்லாமல், அனைத்து பெண்களும் வீட்டில் சாதாரணமாக உடுத்துமாறும் உள்ளன. எனவே தினமும் வீட்டில் புடவையை அணிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு, மிகவும் அழகான மற்றும் வெயிட் இல்லாத சில புடவைகளின் கலெக்ஷன்களை கொடுத்துள்ளோம். அவற்றில் காட்டன், டாண்ட், ஷிப்பான், சூப்பர் நெட் புடவை போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் பார்ப்பதற்கு ஸ்பெஷலான புடவை போன்று இருப்பதோடு, தினமும் உடுத்தக்கூடியவாறு இருக்கும்.

இப்போது ஒரு ஃபேஷன் ஷோவில் தினமும் உடுத்தக்கூடியவாறு இருக்கும் அருமையான சில புடவைக் கலெக்ஷன்கள் வெளிவந்தன. அவைகளைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீலம் மற்றும் பிங்க் புடவை

நீலம் மற்றும் பிங்க் புடவை

உயர்ந்த பட்டால் ஆன நீலம் மற்றும் பிங்க் நிற புடவையில், சோனாக்ஷி மிகவும் க்யூட்டாக இருக்கிறார். இந்த உடை விழாக்களுக்கு மட்டுமின்றி, வீட்டில் அணியக்கூடியவாறும் இருக்கும்.

ஸ்லீவ் ஜாக்கெட்

ஸ்லீவ் ஜாக்கெட்

இந்த நீலம் மற்றும் பிங்க் புடவைக்கு முக்கால் அளவு ஸ்லீவ் வைத்த ஜாக்கெட்டை அணிந்திருப்பது, பழைய ட்ரெண்ட் மீண்டும் வந்துவிட்டது என்பதை நினைவூட்டுகிறது.

கருப்பு நிற புடவை

கருப்பு நிற புடவை

கருப்பு நிற காட்டன் புடவை எப்போதும் பெண்களுக்கு ஒரு அழகான தோற்றத்தைக் கொடுக்கும். மேலும் இந்த புடவைக்கு முழுக்கை ஜாக்கெட் போட்டிருப்பது ஹை லுக்கை கொடுக்கிறது.

பிரிண்ட்டட் புடவை

பிரிண்ட்டட் புடவை

பூ பிரிண்ட் போட்ட, உயர்தர பட்டால் ஆன இந்த புடவை பார்ப்பதற்கு ஆடம்பரமாக இருப்பதோடு, தினமும் அணியக்கூடியவாறும் இருக்கும்.

காட்டன் புடவை

காட்டன் புடவை

இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் காட்டன் புடவைகளைத் தான் விரும்புவார்கள். எனவே தினமும் புடவை உடுத்த ஆசைப்பட்டால், காட்டன் புடவையை தான் சிறந்தது.

பட்டை பார்டர் புடவை

பட்டை பார்டர் புடவை

சிம்பிளாகவும் சற்று ஸ்டைலாகவும் இருக்க வேண்டுமெனில், பட்டை பார்டர் கொண்ட புடவையை அணியலாம்.

காட்டன் சில்க்

காட்டன் சில்க்

காட்டன் சில்க் புடவை உடுத்துவதற்கு வசதியாக இருப்பதுடன், அழகான தோற்றத்தைக் கொடுக்கும். மேலும் காட்டன் சில்க் புடவைகளில் பல டிசைன்கள் மற்றும் நிறங்கள் உள்ளன.

ரா சில்க்

ரா சில்க்

இந்த வெள்ளை நிற பிரிண்ட்டட் புடவை மிகவும் வண்ணமயமான முந்தானையைக் கொண்டது. ஆகவே இந்த மாதிரியான புடவையைக் கூட சாதாரணமாக உடுத்தலாம்.

கட்டம் போட்ட காட்டன் சில்க்

கட்டம் போட்ட காட்டன் சில்க்

கட்டம் போட்ட காட்டன் சில்க் மிகவும் சாதாரணமாக இருக்கும். ஆனால் இதற்கு பொருத்தமான அணிகலன்களை அணிந்தால், இது கூட ஆடம்பர தோற்றத்தைக் கொடுக்கும்.

சின்ன கட்டம் போட்ட புடவை

சின்ன கட்டம் போட்ட புடவை

இந்த மாதிரியான புடவைகளில் நிறைய வண்ணங்கள் கலந்து, வித்தியாசமான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சற்று ஹை லுக்கையும் கொடுக்கும்.

பச்சை புடவை

பச்சை புடவை

மராத்தியில் இருந்தால், இந்த மாதிரியான பச்சை நிற உடலும், பலவண்ணம் கொண்ட பார்டரும் உள்ள புடவையை அணிந்தால் நன்றாக இருக்கும்.

மஞ்சள் புடவை

மஞ்சள் புடவை

இந்த மஞ்சள் நிற புடவை பார்ப்பதற்கு ராயல் லுக்கை கொடுத்தாலும், இதுவும் அன்றாடம் உடுத்தக்கூடியவாறு இருக்கும்.

சிவப்பு காட்டன் சேலை

சிவப்பு காட்டன் சேலை

அம்மன் கோவிலுக்கு செல்லும் போது சிவப்பு நிற புடவையை பெரும்பாலான பெண்கள் அணிவார்கள். அந்த சிவப்பு காட்டன் புடவையில் உள்ள சிறப்பு என்னவென்றால், இதில் பார்ப்பதற்கு ப்ளைனாக இருக்கும். ஆனால் உடலில் நெருக்கமான பூ டிசைன்கள் இருக்கும்.

கருப்பு புடவை

கருப்பு புடவை

பெரும்பாலான பெண்களுக்கு கருப்பு நிறம் என்றால் பிடிக்கும். இந்த சாதாரண கருப்பு நிற புடவையையும் சற்று ஹை லுக்கில் காணப்பட வேண்டுமெனில், இதற்கு கோல்டன் நிற ஜாக்கெட் அணியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, July 31, 2013, 18:51 [IST]
Desktop Bottom Promotion