For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகரை முதன்மைக் கடவுளாக வணங்கக் காரணங்கள்!!!

By Super
|

இந்துக்களின் பிரபலமான கடவுளாக விநாயகர் விளங்குகிறார். யானைத் தலையும், பெரிய வயிறும், மூஞ்சூரு வாகனமும் அவரது சிறப்பம்சங்கள். அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுளாக காணப்படும் விநாயகர், தீயவற்றை அழிக்கும் கடவுளாகவும் வணங்கப்படுகிறார். யானைத் தலை அறிவின் அம்சமாகவும், நீண்ட காதுகள் அவருக்கு அனைத்து விஷயங்களும் கேட்கும் என்பதற்கான சின்னமாகவும் விளங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

எந்த செயலும் செய்வதற்கு முன் விநாயகரை வணங்குவது இந்தியாவில் பழக்கமாக உள்ளது. கிட்டத்தட்ட எல்லா வேலைகளுமே விநாயகருடனே துவங்குகின்றன. ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? வாருங்கள் அதைப் பற்றிப் பார்ப்போம்.

Reasons Why We Worship Ganesha First

என்ன எழுதப்பட்டிருக்கிறது?

கணபதி உபனிடதத்தின் படி, பிராகிருதி எனப்படும் இயற்கையின் படைப்பிற்கும், புருஷா எனப்படும் விழிப்புணர்வுக்கும் முன்பே விநாயகர் தோன்றிவிட்டாராம். இதனால் தான் அவர் முதன்மைக் கடவுளாக வணங்கப்படுகிறார் என்பதை அறியலாம்.

புராணங்கள்

ஒருமுறை பார்வதி வாயிலைக் காக்குமாறும், யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் கணபதியை பணித்தாராம். அப்போது அங்கே வந்த சிவனை கணபதி தடுக்கவும் கோபம் கொண்ட சிவன் கணபதியின் தலையை சீவிவிட்டாராம். கணபதியின் அலறலைக் கேட்ட பார்வதி ஓடிவந்து, அவரின் நிலையை கண்டு கோபம் கொண்டாராம். அதுமட்டுமல்லாது அவரது மகன் கணபதி மீண்டும் உயிர்பெறவில்லையென்றால் உலகத்தையே அழிக்கப்போவதாக சூளுரைத்தாராம்.

பிறகு கணபதியின் தலை இருந்த இடத்தில் யானை தலையை மாட்டி அவரை உயிர்ப்பித்தாராம் சிவன். தன் மகனின் நிலையைக் கண்டு பார்வதி வருந்தியதைக் கண்ட சிவன், கணபதிக்கு விஷேச சக்திகளை வழங்கி, எந்த ஒரு வேலையையும் கணபதியை முதலில் தொழாமல் மேற்கொண்டால் வெற்றி பெறாது என்றும் வாழ்த்தினாராம்.

அதுமுதல் முதற்கடவுளாக எந்த விஷயத்திலும் கணபதியை தொழும் வழக்கம் துவங்கியது.

மற்றொரு கதையில் கடவுள்களிலேயே சிறந்தவர் தாந்தான் என விநாயகரின் தம்பி கார்த்திகேயன் கூறிக்கொண்டிருந்தாராம். அதனால் சிவன் இருவருக்கும் ஒரு போட்டியை ஏற்பாடு செய்தார். அதன் படி யார் உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களே முதலில் வணங்கப்படும் கடவுளாவார்கள் என்றும் அறிவித்தாராம். அதன்படி போட்டி துவங்கியது. கார்த்திகேயன் தனது மயில் வாகனத்தில் உலகைச் சுற்றி வருவதற்கும், விநாயகர் தனது தந்தை தாய்தான் தனக்கு உலகம் எனக் கூறி, அவர்களைச் சுற்றி வந்து வெற்றி பெற்றுவிட்டாராம். அதிலிருந்து கணபதியே முதலில் வணங்கப்படுவதாகவும் கூறுவர்.

யோகிகளின் நம்பிக்கை

வாழ்க்கையின் எந்த விஷயமும் பொருள் மற்றும் ஆன்மீகம் என்ற இரு விஷயங்களுக்குள் அடங்கிவிடுவதாக யோகிகள் நம்புகிறார்கள். பொருள் மற்றும் ஆன்மீக தத்துவங்களின் இணைப்பாக விளங்கும் நம் உடலின் மூலாதார சக்கரத்தை கணபதி ஆளுவதாக அவர்கள் நம்புகிறார்கள். பொருள் சார்ந்த மகிழ்ச்சிகளையெல்லாம் அளிக்கும் அதே நேரத்தில், உலகின் சகல துன்பங்களில் இருந்து, அவர் நம்மை காப்பாதாகவும் நம்புகிறார்கள்.

யோக சித்தாந்தங்களின் படி, முலாதாரச் சக்கரத்தில் இருந்தே நமது பொருள் மற்றும் ஆன்மீக வாழ்க்கை துவங்குகிறது. எனவே நமது வாழ்க்கையை பிரச்சனைகள் இன்றி முழுமையாக வாழ, எந்த விஷயத்திற்கு முன்பும் கணபதியை வணங்குதல் அவசியம் என்கிறார்கள்.

English summary

Reasons Why We Worship Ganesha First

In India, Lord Ganesha is worshiped before the commencement of almost every task. He is worshiped first in almost all rituals of Hinduism. In fact, Lord Ganesha is almost synonymous with the beginning of any work. Ever wondered why is it that we worship Ganesha first? Let's find out.
Story first published: Sunday, September 8, 2013, 16:07 [IST]
Desktop Bottom Promotion