For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் உள்ள பிரபலமான சில சிவன் கோவில்கள்!!!

By Maha
|

உலகிலேயே இந்தியாவை எடுத்துக் கொண்டால், இந்தியா ஆன்மீகத்துவம் அதிகம் நிறைந்த ஒரு பரந்த நாடு. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள், இந்தியாவின் பல கோவில்களுக்கு வருகைத் தருகின்றனர். ஏனெனில் இந்தியாவின் வடக்கே இமயம் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை, நிறைய கோவில்கள் நிறைய கோவில்கள் உள்ளன. மேலும் இந்தியாவில் உள்ள இந்து மதத்தில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் உள்ளனர். இவர்கள் இந்தியாவின் மிகவும் பிரபலமான கடவுள்களாகும்.

அந்த மும்மூர்த்திகளுள் ஒருவரான அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கு நிறைய கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்தியாவில் மிகவும் பிரபலமாக சில சிவன் கோவில்களாகும். ஒவ்வொருவரும் இந்த கோவில்களுக்கு சென்று வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இப்போது இந்தியாவில் உள்ள சில பிரபலமான சிவன் கோவில்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காசி விஸ்வநாதர் கோவில், வாரணாசி

காசி விஸ்வநாதர் கோவில், வாரணாசி

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியின் புனித கங்கை நதிக் கரையில் அமைந்திருப்பது தான் விஷ்வநாதர் கோவில். இந்த சிவ ஆலயத்திற்கு ஒவ்வொருவரும் சென்று வர வேண்டும் ஆசைப்படுவார்கள். ஏனெனில் இந்த கோவிலில் உள்ள சிவ லிங்கமானது பன்னிரெண்டு ஜோதி லிங்கங்களுள் ஒன்று.

கேதார்நாத் கோவில், உத்தரகண்ட்

கேதார்நாத் கோவில், உத்தரகண்ட்

மந்தாகினி நதி அருகே அமைந்துள்ள கோதார்நாத் கோயிலும், 12 ஜோதி லிங்கங்களுள் ஒன்று. இந்த கோவிலானது கர்வால் இமயமலையின் மத்தியில் அமைந்துள்ளது.

அமர்நாத் குகை கோவில், ஜம்மு காஷ்மீர்

அமர்நாத் குகை கோவில், ஜம்மு காஷ்மீர்

அமர்நாத் குகைக் கோயிலானது ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோமீட்டர் சுற்றி அமைந்துள்ள சிவனுக்காக அர்பணிக்கப்பட்டுள்ள ஒரு குகைக் கோயில். இங்கு சிவன் இயற்கையாகவே பனியால் ஆன லிங்கம் உள்ளது.

சோம்நாத் ஜோதிலிங்க கோவில், குஜராத்

சோம்நாத் ஜோதிலிங்க கோவில், குஜராத்

சோம்நாத் ஜோதிலிங்க கோவிலானது அரபிக் கடலின் கடற்கரையில் உள்ள குஜராத்தில் அமைந்துள்ள செளராஷ்டிரத்திரத்தின் அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் உள்ள சிவபெருமானின் பெயரானது சோமமேஸ்வரர். மேலும் இந்தியாவிலேயே 12 ஜோதிலிங்கங்களுள், இங்கு தான் சிவபெருமான் முதன் முதலில் நிலவினை தன் தலையில் வைத்துள்ளார்.

லிங்கராஜ் கோவில், ஒரிஸா

லிங்கராஜ் கோவில், ஒரிஸா

மிகவும் பழமையான கோவில்களில் ஒரிஸாவில் அமைந்துள்ள லிங்கராஜ் கோவில் ஒன்று. இந்த கோவில் தான் இந்துமத புனித யாத்திரைகளில் மிகவும் பெரியது. இதனை "கோவில் நகரம்" அல்லது "இந்தியாவில் கோவில் நகரம்" என்றும் சொல்வர்.

முருடேஸ்வரர் சிவன் கோவில், கர்நாடகா

முருடேஸ்வரர் சிவன் கோவில், கர்நாடகா

முருடேஸ்வரர் கோவில் அல்லது முருடேஸ்வரர் சிவன் கோவில், கர்நாடகாவில் உள்ள முருடேஸ்வர் கடற்கரை நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஒரு சிவன் கோவில். இங்கு தான் உலகிலேயே மிகவும் பெரிய சிவன் சிலை உள்ளது.

மல்லிகார்ஜுன கோவில், ஆந்திர பிரதேசம்

மல்லிகார்ஜுன கோவில், ஆந்திர பிரதேசம்

மல்லிகார்ஜுன கோவில், தென் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் நகருக்கு அருகில் உள்ளது. இங்குள்ள கோவில் சிற்பங்கள் மற்றும் கட்டடக்கலை மிகவும் சிறப்பானது.

மகாகலா கோவில், மத்திய பிரதேசம்

மகாகலா கோவில், மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள மகாகாலீஸ்வரர் கோவிலும் மிகவும் பிரபலமான கோவில். இதன் சிறப்பு என்னவெனில், ஷிப்ரா நதியில் கரையில் அமைந்துள்ள இந்த கோவில், கும்ப மேளா நடைபெறும் நான்கு இடங்களில் ஒன்றாகும்.

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோவிலில் உள்ள நந்தி சிலையானது மிகவும் பெரியது. இந்த கோவிலும் மிகவும் அழகான இந்தியாவில் உள்ள பிரபலமான சிவன் கோவில்களுள் ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Popular Lord Shiva Temples In India | இந்தியாவில் உள்ள பிரபலமான சில சிவன் கோவில்கள்!!!

If you are an ardent devotee of Lord Shiva and plan to visit his temples, we give you the famous and popular Shiva Temples all over India. Take a look at these temples.
Desktop Bottom Promotion