For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பிரபலமான சில இசைக் கலைஞர்கள்!!!

By Super
|

இந்திய இசை பல்வேறு வகையான நாட்டுப்புறம், பாப், பாரம்பரிய இசை மற்றும் ஆர் & பி யை உள்ளடக்கியது. கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசை உட்பட இந்தியாவின் இசை பாரம்பரியம், நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டது மற்றும் பல யுகாப்தங்களாக வளர்ந்து வந்துள்ளது. அத்தகைய இந்திய இசை முதலில் சமூக-மத வாழ்க்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக தொடங்கியது. இந்திய இசையானது அடிப்படையில் இனிமையாகவும் சமூகத்தின் பல்வேறு உணர்ச்சிகளை விவரிக்கும் ஒலியின் வெளிப்பாடாகவும் அமைகிறது.

இந்தியாவின் இசை கலைஞர்கள் போற்றுதற்குரிய திறமைசாலியான தனி நபர்கள். அவர்களது மெல்லிசைகளும், தாளங்களும், பாடல்களும், கவிதை மற்றும் அவர்களின் குரல்வளமும் காலம் காலமாக பார்வையாளர்களை மெய் மறக்க செய்கிறது. அத்தகையவர்கள் பாலிவுட்டில் தனிப்பட்ட இடத்தை பெற்றிருப்பது மட்டுமல்லாமல், பொது ஜனங்களின் மத்தியில் பெரும் செல்வாக்கையும் பெற்றுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளையராஜா

இளையராஜா

இளையராஜா தமிழ் இசைத்துறையில் அனைவராலும் மதிக்கப்படுபவர். அவர் ஒரு இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என்று சிறப்பு வாய்ந்த மனிதர். கடந்த மூன்று சதாப்தங்களாக இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, 4500 பாடல்களுக்கு இசை பதிவு செய்திருக்கிறார். மேற்கத்திய மற்றும் இந்திய உணர்வுகளுக்கு ஏற்ப இசையமைப்பதில் அறியப்படும் இவருக்கு பல தலைமுறை கண்ட ரசிகர்கள் உள்ளனர்.

ஷாகிர் லூதியன்வி

ஷாகிர் லூதியன்வி

பத்மஸ்ரீ பட்டம் வென்ற இவர் 1921ம் ஆண்டு லூதியானாவில் அப்துல் ஹாயியாக பிறந்தார். எஸ்டி பர்மான் மற்றும் குருதத் உடன் சேர்ந்ததன் மூலம் லூதியன்வி ஹிந்தி திரைபடங்களுக்கு அர்த்தமுள்ள பாடல்களை அளித்தார்.

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான்

அவருக்கு உண்மையில் அறிமுகம் தேவையில்லை. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் இருந்து வெளிப்பட்ட மிகவும் பிரபலமான இசை கலைஞர் இவர். அந்த காலக்கட்டத்தில் அவர் எண்ணற்ற மறக்க முடியாத இசையை கொடுத்தார். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த இவர் உலகின் பெரிய இரண்டு ஜாம்பவான்களுக்கு இசையமைத்தார். இரண்டு ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை பெற்றிருக்கிறார். நான்கு தேசிய விருதுகள் மற்றும் பாப்டா விருதை பெற்ற தனது நேரத்தை இந்தியா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் இசை கோர்ப்பு பணிக்காக செலவிடுகிறார். ‘சென்னையின் மொசார்ட்' என்று செல்லமாக அறியப்படும் இவர் 2009ம் ஆண்டு டைம்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றது.

லக்ஷ்மிகாந்த்-பியாரிலால்

லக்ஷ்மிகாந்த்-பியாரிலால்

லக்ஷ்மிகாந்த் மற்றும் பியாரிலால் (அ) எல்.பி என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற இவர்கள் பாலிவுட்டின் மிகவும் பிரபலமான, சுறுசுறுப்பான இசையமைப்பாளர்கள் ஆவர். இந்த இருவரும் இந்திய பாரம்பரிய இசை, மேற்கத்திய இசை, டிஸ்கோ மற்றும் ராக் அண்ட் ரோல் இசையை, தங்களது இசையில் வெற்றிகரமாக சேர்த்து இசையமைத்து வருகிறார்கள்.

லக்கி அலி

லக்கி அலி

லக்கி அலி, அவரது தனி ஆல்பம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார். அவரது கரடுமுரடான குரல் மற்றும் வெகுளிதனமான பாடல் வரிகளும் இளைஞர்களின் உடனடி ஆதரவை பெற்று தந்தது. அவரது மென்மையான ஆத்மார்த்தமான குரல் மற்ற எந்த பாடகருக்கும் ஒப்பிட முடியாதது. இன்று கூட அவரின் எந்த ஒரு பாப் ஆல்பத்தையும் திரும்ப கேட்டு, அவரின் மெஸ்மரிச குரலில் மூழ்க முடியும்.

சுனிதி சவுகான்

சுனிதி சவுகான்

சுனிதி சவுகான் இன்றைய பிரபலமான பின்னனி பாடகிகளுள் ஒருவர். ஹிந்தி தவிர சுனிதி சவுகான் மற்ற இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடா, பெங்காலி மற்றும் குஜராத்தியில் தனது இசையை பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு மற்ற ஹிந்தி திரைப்படத்திலும் குறைந்தது இவர் பாடிய பாடல் இடம் பெறுகிறது.

சோனு நிகாம்

சோனு நிகாம்

சோனு நிகாம் எப்போதும் சாக்லெட் பாயான பின்னனி பாடகர் அமீர் கான் ஆவர். முதலாவதாக அவரது காதல் கதைப்பாடல்கள் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் தன்னை முழு நேர பாடகராக ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்னர் அவரின் இசை வீடியோக்கள் ஒவ்வொரு வீடுகளிலும் பெயரை பெற்று தந்தது. கடந்த சில வருடங்களில் தனது இசை ரசிகர்களுக்கு பல பிரபலமான காதல் பாடல்களை பாடியுள்ளார்.

ஆர். டி. பர்மன்

ஆர். டி. பர்மன்

பாலிவுட்டின் மிகவும் செல்வாக்குள்ள இசையமைப்பாளர்களுள் ஒருவர். பஞ்சம்டா (ஆர். டி. பர்மன் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார்) இசை துறைக்கு தனது தனி அடையாளத்தை விட்டு சென்றிருக்கிறார். பல டிஜேக்கள் அவரது பிரபலமான பாடல்களை இன்று ரீமிக்ஸ் செய்கின்றனர். அவரது இசை உருவாக்கம் இன்றும் பல இசையமைப்பாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

எஸ். ஜானகி

எஸ். ஜானகி

1938 இல் ஆந்திரா மாநிலத்தில் பிறந்து, இந்தியாவின் புகழ்பெற்ற பாடகிகளுள் ஒருவராக உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் 10,000 மேல் பாடல்களை பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார். மேலும் இவர் பல பாடல்களை தாமே எழுதியும் பாடியுள்ளார்.

ஆஸா போஸ்லே

ஆஸா போஸ்லே

ஆஸா போஸ்லே 1940 ஆம் ஆண்டு முதல் பாடி வருகிறார். கின்ன்ஸ் உலக சாதனை புத்தகம் உலக இசை வரலாற்றிலேயே அதிக அளவு இசையை பதிவு செய்தவர் என்று அவருக்கு கவுரம் அளித்திருக்கிறது.

லதா மங்கேஸ்கர்

லதா மங்கேஸ்கர்

லதா மங்கேஸ்கர் இந்திய இசையுடன் இசைந்து சென்றவர். எப்போதாவது கருப்பு வெள்ளை படங்களின் பிரபலமான இசையை கேட்கும் போதோ அல்லது சில வருடங்களுக்கு முன் இசைக்கப்பட்ட ஆத்மார்த்தமான இசையையும் கேட்டால், அந்த இரண்டு பாடல்களையும் பாடியவர் லதா மங்கேஸ்கராக இருக்க கூடும்.

எஸ். பி. பாலசுப்பிரமணியம்

எஸ். பி. பாலசுப்பிரமணியம்

நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ். பி. பி அவர்கள், 1960-களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அடியெடுத்து வைத்தார். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான பாடகர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். இவரது குரலுக்கு நிகர் எவரும் இல்லை என்ற வகையில் மெல்லிசை மற்றும் பல இனிமையான பாடல்களைப் பாடியுள்ளார். இதுவரை இவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 40,000-கும் மேல் இருக்கும். மேலும் இவர் தேசிய விருதும் பெற்றுள்ளார். இன்றும் இவரது பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

பி. சுசீலா

பி. சுசீலா

ஆந்திரா மாநிலத்தில் பிறந்த பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பல இந்திய மொழிகளில் அருமையான பல பாடல்களை பாடியுள்ளார். இதுவரை அவர் 25,000 பாடல்களுக்கு மேல் பாடியிருப்பதுடன், அனைவரது மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். மேலும் 5 தேசிய விருதுகளையும் இவர் வாங்கியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

most popular music artists In India | இந்தியாவின் மிகப் பிரபலமான சில இசைக் கலைஞர்கள்!!!

Musicians in India are a revered bunch of talented individuals. Their melodies, tunes, compositions, poetry and voice have mesmerized audiences for ages.They hold a special place in Bollywood and are major influences in public domain. Here are the 10 most popular music artists from the industry over the years.
Desktop Bottom Promotion