For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தவறாமல் சுவைத்து பார்க்க வேண்டிய இந்திய ஒயின்கள்!!!

By Maha
|

இந்தியாவில் திராட்சையின் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் தயாரித்தல் கலை என்பது மிகவும் புதியது. இத்தகைய இந்திய ஒயின் பிராண்டுகள் சர்வதேச அளவில் மிகவும் சிறந்ததாக கருதப்படாவிட்டாலும், இந்தியாவில் மிகவும் சிறப்பான சில ஒயின் பிராண்டுகள் உள்ளது. இவை அனைத்தும் உலக அளவில் சிறந்தாக இல்லாவிட்டாலும், "காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு" என்பது போல், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒயின் நம்மைப் பொறுத்த வரை, மிகவும் சிறந்த ஒயின் தான்.

அந்த வகையில் இந்தியாவில் ஒருசில பிரபலமான ஒயின் பிராண்டுகள் உள்ளன. பெரும்பாலான இந்திய ஒயின்கள் ரெட் ஒயின்கள் தான். இருப்பினும் வெள்ளை ஒயின்களின் வளர்ச்சியும் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. மேலும் தற்போது நிறைய பேர் மதுவில் ஒயினை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆய்வு ஒன்றிலும், ரெட் ஒயினை தினமும் 1 அவுன்ஸ் குடித்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே ஒயினை விரும்புபவர்கள், இந்திய ஒயின் பிராண்டுகளின் சிலவற்றை தவறாமல் சுவைத்து பாருங்கள். அதுமட்டுமின்றி, இந்திய ஒயின்களின் விலை, வெளிநாட்டு ஒயின்களை விட விலை மிகவும் குறைவு. இப்போது அனைவரும் தவறாமல் சுவைத்து பார்க்க வேண்டிய இந்திய ஒயின் பிராண்டுகளைக் கொடுத்துள்ளோம். அதை முயற்சித்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுலா (Sula)

சுலா (Sula)

சுலா திராட்சைத் தோட்டம் நாசிக் நகரத்தில் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சுலா பிராண்டு ஒயின் இந்தியாவில் மிகவும் பிரசித்திப் பெற்றது.

விண்டேஜ் ஒயின் (Vintage Wines)

விண்டேஜ் ஒயின் (Vintage Wines)

விண்டேஜ் ஒயின் கர்நாடகாவின் பசுமை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. எலைக் விண்டேஜ் ஒயின்கள் 2007 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. ஆனால் இவற்றில் ரிவீலோ-சைரா ரிசர்வ் 2005 தான் நட்சத்திர ஒயின்களாகும்.

சாட்டே டி'டோரி (Chateau d’Ori)

சாட்டே டி'டோரி (Chateau d’Ori)

மகாராஷ்டிராவிள் டின்டோரியில் ஒரு பெரிய திராட்சை தோட்டம் அமைந்துள்ளது. அந்த தோட்டத்தில் தயாரிக்கப்படுவது தான் சாட்டே டி'டோரி.

மெர்குரி ஒயின் (Mercury wines)

மெர்குரி ஒயின் (Mercury wines)

மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் அமைந்துள்ள ஓசார் பகுதியில் மெர்குரி ஒயின் தயாரிக்கப்படுகிறது. இந்த மெர்குரி ஒயினும் இந்தியாவில் மிகவும் பிரபலமானது.

இண்டஸ் ஒயின் (Indus wines)

இண்டஸ் ஒயின் (Indus wines)

நாசிக் அருகில் உள்ள நாபா பள்ளத்தாக்கில் மிகப் பெரிய திராட்சை தோட்டம் உள்ளது. அங்கு தான் இண்டஸ் ஒயின் தயாரிக்கப்படுகிறது. இண்டஸ் ஒயினில் சாவிக்னன் பிளாங்க் என்னும் வெள்ளை நிற ஒயின் தயாரிக்கப்படுகிறது.

குரோவர் ஒயின் (Grover Wines)

குரோவர் ஒயின் (Grover Wines)

இந்தியாவின் மிகவும் பழமையான ஒயின் குடும்பத்தை சேர்ந்தது தான் குரோவர் ஒயின். இது பெங்களூர் நகரத்தின் அருகில் உள்ள நந்தி மலையின் அமைந்துள்ளது. இது மிகவும் சுவைமிக்க ஒரு ஒயினாகும்.

ஷீகிராம் (Seagram)

ஷீகிராம் (Seagram)

ஷீகிராம் என்பது ஒயின் பிராண்டுகளை சேர்ந்தது இல்லை. ஆனால் அதன் நயன் ஹில்ஸ் காபர்னெட் சாவிக்னன் 2007 (Nine Hills Cabernet Sauvignon 2007) என்னும் ஒயின், இந்தியாவிலேயே மிகவும் பிரபலமானது.

சாட்டே இன்டேஜ் (Chateau Indage)

சாட்டே இன்டேஜ் (Chateau Indage)

இன்டேஜ் என்பதும் மிகவும் பெரிய ஒரு திராட்சை தோட்டம். இது புனே-நாசிக் பெல்ட்டில் அமைந்துள்ளது. இந்த இன்டேஜில் 2000 ஏக்கரில் திராட்சைக் கொடிகள் நிரப்பப்பட்டுள்ளது. ஆகவே இந்த சாட்டே இன்டேஜை தவறாமல் முயற்சித்து பாருங்கள்.

ஜம்ப்பா ஒயின் (Zampa Wines)

ஜம்ப்பா ஒயின் (Zampa Wines)

ஜம்ப்பா ஒயின் தயாரிக்கப்படும் இடமானது மகாராஷ்டிராவின் இகத்புரி பகுதியில் உள்ளது. இங்கு பலவகையான திராட்சைகளான சிராஷ், ரோசா போன்றவை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Wine Brands That You Must Try

Indian wine brands are not usually held in very high regard in the international market. The art of wine making is new to India. And the market for Indian wine brands is still quite nascent. And for that you need the Indian wines to be substantially cheaper than their foreign cousins. Here are some the best India wine brands that you should certainly try.
Story first published: Friday, August 2, 2013, 16:58 [IST]
Desktop Bottom Promotion