For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2013 கிராமி விருதில் வெற்றிப் பெற்றவர்கள்!!!

By Maha
|

கிராமி விருது அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளில் ஒன்றாகும். 1951 முதல் இன்று வரை ஆண்டுதோறும் இந்த விருதுகள் தேசிய ஒலிப்பதிவு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்கப்படுகின்றன.

பொதுவாக கிராமி விருதானது அமெரிக்காவில் வருடத்திற்கு ஒரு முறை இசைக்கலைஞர்களுக்காக நடைபெறும் ஒரு பெரிய விழா. ஒவ்வொரு இசைக்கலைஞனுக்கும், இந்த விழாவின் போது ஏதேனும் ஒரு விருதை எப்படியாவது தட்டிச் செல்ல வேண்டும் என்று ஆசை நிச்சயம் இருக்கும். மேலும் இதற்காக எத்தனையோ கஷ்டப்பட்டு, மிகவும் சிறப்பான முறையில் இசையமைத்து பாடி, சாதனை புரிய வேண்டுமென்று பாடுபடுவார்கள். இந்த விருதைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அத்தகைய இசைக்காக நடத்தப்படும் விழாவில், உலகில் உள்ள அனைத்து இசைக்கலைஞர்களும் இதில் கலந்து கொள்வார்கள்.

இந்த விருது விழாவானது இசைக்கு மட்டுமின்றி, ஃபேஷனுக்கும் தான் சிறந்தது. மேலும் இந்த விருதில் சிறந்த இசை, பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என்று பல விருதுகள் உள்ளன. இந்த கிராமி விருதை 1951 முதல், தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) நடத்தி வருகின்றன. இது 55-வது கிராமி விருது விழாவாகும். இது தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டாப்பில்ஸ் சென்டரில் நடந்தது. இத்தகைய பெரிய விழாவிற்கு செல்ல முடியவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். ஏனெனில் இப்போது 2013 இல் கிராமி விருதை வென்றவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காட்டே (Gotye)

காட்டே (Gotye)

இவர் கிராமி விழாவில் மூன்று விருதுகளான ஆண்டின் சிறந்த பதிவு, சிறந்த பாப் இசை நிகழ்ச்சி: இருவர் அல்லது குழு மற்றும் சிறந்த மாற்று இசை ஆல்பம் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளார்.

ஃஜாக் ப்ரௌன் பேன்ட் (Zac Brown Band)

ஃஜாக் ப்ரௌன் பேன்ட் (Zac Brown Band)

இவர் சிறந்த 2013 ஆம் ஆண்டின் சிறந்த நாட்டுப்புற ஆல்பம் விருதைப் பெற்றுள்ளார்.

அடெல் (Adele)

அடெல் (Adele)

அடெல் கடந்த வருடத்தில் 6 கிராமி விருதுகளைப் பெற்றிருந்தார். இந்த வருடம் ஒரே ஒரு விருதான பாப் பாடலில் சிறந்த பெண் குரல் என்ற விருதைப் பெற்றுள்ளார்.

உஷர் (Usher)

உஷர் (Usher)

இவர் மிகச்சிறந்த பாடகர். இவர் இந்த 2013 கிராமி விழாவில் சிறந்த ஆர் & பி நிகழ்ச்சி விருதினைப் பெற்றுள்ளார்.

பெயான்ஸ் (Beyonce)

பெயான்ஸ் (Beyonce)

அழகான கருப்பு மற்றும் வெள்ளை நிற உடையில் வந்துள்ள பெயான்ஸ், இந்த கிராமி விருதில் சிறந்த பாரம்பரிய ஆர் & பி நிகழ்ச்சி விருதைப் பெற்றுள்ளார்.

கெல்லி க்ளார்க்சன் (Kelly Clarkson)

கெல்லி க்ளார்க்சன் (Kelly Clarkson)

இந்த 30 வயதான பாடகி, கிராமி விருது விழாவில் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றுள்ளார். அவை சிறந்த பாப் குரல் ஆல்பம் மற்றும் ஆண்டின் சிறந்த பதிவுக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

ட்ராக் (Drake)

ட்ராக் (Drake)

26 வயதுள்ள ட்ராக், இந்த விழாவில் சிறந்த ராப் ஆல்பம் என்னும் விருதைப் பெற்றுள்ளார்.

ஜேய்ஜி மற்றும் கேன்யே வெஸ்ட் (Jay-Z and Kanye West)

ஜேய்ஜி மற்றும் கேன்யே வெஸ்ட் (Jay-Z and Kanye West)

இந்த ஜோடி சிறந்த ராப் பாடல், சிறந்த ராப்/பாடியது இணைப்பு மற்றும் சிறந்த ராப் நடிப்பிற்கான விருதுகளைப் பெற்றுள்ளனர்.

தி ப்ளாக் கீஸ் (The Black Keys)

தி ப்ளாக் கீஸ் (The Black Keys)

அமெரிக்கன் ராக் பேன்ட் 4 கிராமி விருதுகளை வென்றுள்ளது. அவற்றில் ஆண்டின் சிறந்த ஆல்பம், சிறந்த ராக் நிகழ்ச்சி போன்றவை.

ஃபன் (Fun)

ஃபன் (Fun)

இந்த புதிய கலைஞர் 3 கிராமி விருதுகளை வென்றுள்ளார். அவை வருடத்தின் சிறந்த ஆல்பம், வருடத்தின் சிறந்த பாடல் மற்றும் சிறந்த புதிய கலைஞர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

மம்ஃபோர்டு (Mumford and Sons)

மம்ஃபோர்டு (Mumford and Sons)

இந்த குழு வருடத்தின் சிறந்த ஆல்பத்திற்கான விருதைப் பெற்றுள்ளது.

ஃப்ராங்க் ஓஷன் (Frank Ocean)

ஃப்ராங்க் ஓஷன் (Frank Ocean)

இந்த இசையமைப்பாளர் சிறந்த அர்பன் கண்டெம்பரரி ஆல்பம் என்ற விருதை பெற்றுள்ளார்.

டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift)

டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift)

கிராமி விருது விழாவில் டெய்லர் திரைப்படம், தொலைக்காட்சி அல்லது மற்ற காட்சி ஊடகங்களில் சிறந்த பாடல் வரிகளுக்கான விருதைப் பெற்றுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Grammy Awards 2013 Winners List | 2013 கிராமி விருதில் வெற்றிப் பெற்றவர்கள்!!!

Grammy Awards is a prestigious event that is presented by The Recording Academy every year. The 55th Grammy Awards was held at Staples Center in Los Angeles today. If you have missed the event, don't worry. We are here to bring down the winners list from the Grammy Awards 2013.
Story first published: Monday, February 11, 2013, 18:24 [IST]
Desktop Bottom Promotion