For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பையை மறைக்க வேண்டுமா? அப்ப இந்த ஆடைகளை அணியலாமே!!!

By Maha
|

உடல் எடையை குறைக்க எவ்வளவு தான் டயட் மேற்கொண்டாலும், தொப்பையை மட்டும் சில சமயங்களில் இருக்கும். அதிலும் இதில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால், உடல் எடை குறைக்க மேற்கொள்ளும் டயட்டினால் உடல் எடை குறையும். ஆனால் டம்மி அப்படியே இருக்கும். இந்த நேரங்களில் ஏதாவது விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் வந்துவிட்டால், பின் எந்த ஆடையையும் சரியாக அணிய முடியாத நிலை உண்டாகும்.

ஆனால் அத்தகைய டம்மியை மறைக்க எளிய வழிகள் உள்ளன. அது என்னவென்றால், எப்படி டம்மி உள்ளது என்று ஆடைகளை அணிய ஒருவித கூச்சத்தில் இருப்போமோ, அதே ஆடைகளில் ஒருசில ஆடைகளை அணிந்தால், நிச்சயம் தொப்பை இருப்பதை மறைக்கலாம். அதிலும் அத்தகைய உடைகள் பார்ப்பதற்கு பிட்டாக இருப்பது போல் இல்லாவிட்டாலும், ஃபேஷன் போன்று இருக்கும்.

சரி, இப்போது அத்தகைய உடைகள் என்னவென்று உங்களுக்காக பட்யலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் டம்மியை குறைக்கும் வரை அணிந்து, அனைவரையும் அசத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுத்தை பிரிண்ட்

சிறுத்தை பிரிண்ட்

இந்த மாதிரியான பிரிண்ட் போட்ட ஆடைகள், தொப்பை இருப்பதை மறைத்துவிடுவதோடு, ஃபேஷனாகவும் இருக்கும். வேண்டுமெனில் இதுபோன்று வேறு சில விலங்குகளின் பிரிண்ட் போட்ட ஆடைகளையும் அணியலாம்.

சேலை மற்றும் முழுக்கை ஜாக்கெட்

சேலை மற்றும் முழுக்கை ஜாக்கெட்

சேலைகள் தொப்பையை மறைத்து உடலை ஒல்லியாக வெளிப்படுத்தும். ஆனால் அது உடையை அணிபவர்களின் ஸ்டைலைப் பொறுத்தது. உதாரணமாக, ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றை மறைக்க, முழுக்கை ஜாக்கெட்டுடன் கூடிய சேலை அணிந்து, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதனால் அவர் இளமையோடு வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டுள்ளார்.

குர்தா

குர்தா

பாரம்பரிய உடைகளுள் குர்தாவும் ஒன்று. அதிலும் டைட்டான பேண்ட், ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்றவற்றை அணிந்து, அத்துடன் மேலே சுடிதாரின் மேலாடையைப் போன்று டாப்ஸ் வாங்கி அணிந்து, சாதாரண ஜங்க் அணிகலன் மற்றும் ஜோத்புரி செப்பலை அணிந்தால், அது பார்ப்பதற்கு அழகாகக் காணப்படும்.

கருப்பு லேஸ்

கருப்பு லேஸ்

உடல் தொப்பையை மறைக்க கருப்பு சிறந்த நிறம். ஏனெனில் இந்த நிறத்தில் உடை அணிந்தால், உடல் ஒல்லியாக காணப்படுவதோடு, அழகாகவும் காணப்படும். அதிலும் தற்போது லேஸ் தான் ஃபேஷன். எனவே அந்த உடையை கருப்பு நிறத்தில் அணிந்து, அதோடு மறக்காமல் அடர்த்தியான பெல்ட் அணிய வேண்டும்.

ப்ரில்ஸ்

ப்ரில்ஸ்

பெண்களின் உடல் அழகியத் தோற்றத்தில், பிட்டாகக் காணப்படுவதற்கு ப்ரில்ஸ் உடைகள் சரியானதாக இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த உடைகள் தொப்பை உள்ள பெண்களுக்கு சிறப்பானதாக இருக்கும். எனவே நல்ல அடர்ந்த நிறம் உள்ள மஞ்சள் அல்லது நியான் ஆரஞ்சு ப்ரில் உள்ள ஆடைகள் சரியானதாக இருக்கும்.

பேரரசியின் உடை

பேரரசியின் உடை

நிறைய திரையுலகினர், தங்களது தொப்பையை மறைக்க, இதுப் போன்ற ஆடைகளை தான் தேர்ந்தெடுத்து அணிவார்கள். இதனால் உடல் அழகே தொப்பையை மறைத்துவிடும்.

கஃப்தான்

கஃப்தான்

இது மற்றொரு சிறப்பான ஃபேஷனான, டம்மியை மறைக்கும் உடைகளுள் ஒன்று. அதிலும் நீலம் மற்றும் பச்சை நிற கஃப்தான் அருமையானதாக இருக்கும். குறிப்பாக இந்த ஆடை சில்க்கில் இருப்பதே சிறந்தது. காட்டனில் வாங்கிவிட வேண்டாம். ஏனெனில் சில்க் என்றால், அழகாக பூ போன்று, உடலுக்கு ஏற்றவாறு காணப்படும்.

கோர்செட்

கோர்செட்

வயிற்று தொப்பையை மறைக்க எப்போதும் சரியான உள்ளாடையை அணிய வேண்டும். உதாரணமாக கோர்செட் அணிந்தால், உடலில் தொப்பை இருந்தாலும், அது அதனை மறைத்து, சரியான வடிவத்தைக் கொடுக்கும்.

முடிச்சுள்ள ஆடை

முடிச்சுள்ள ஆடை

இந்த மாதிரியான ஆடையை பெல்லி உள்ளவர்கள் அணிந்தால், சரியாக இருக்கும். ஏனெனில் இந்த உடையில் வரும் முடிச்சானது. இடுப்பிற்கு கீழே வருவதால், தொப்பையானது மறையும். அதிலும் இதனை அணிந்து, ஹீல்ஸ் அணிந்து கொண்டு போனால், சும்மா டக்கரா இருக்கும்.

முடிச்சுள்ள சட்டைகள்

முடிச்சுள்ள சட்டைகள்

பெல்லி உள்ள பெண்கள் சட்டை அணிவதாக இருந்தால், முடிச்சுள்ள சட்டைகளை அணிவதே சிறந்தது. இதனால் அசட்டையில வரும் முடிச்சானது, சரியாக தொப்பை உள்ள இடத்தில் வருவதால், தொப்பையானது மறையும்.

நீளமாக கவுன்

நீளமாக கவுன்

நீளமாக கவுன்களும் உடலை ஒல்லியாக வெளிப்படுத்தும். அதிலும் சற்று லூசாக இருக்கும் கவுன்களை அணிய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fashion Tricks To Hide Belly Fat | தொப்பையை மறைக்க வேண்டுமா? அப்ப இந்த ஆடைகளை அணியலாமே!!!

There are many diet plans to lose weight and shed the belly fat. However, when you are on a weight loss diet, you need time to see the results. Till that time, the only thing you want to hide is your bulging tummy. There are many fashion tricks that can help you hide your tummy fat easily. So, if you want to wear something that looks good on you and also hides your belly fat, then check out.
Story first published: Monday, February 4, 2013, 15:35 [IST]
Desktop Bottom Promotion