For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க மக்கள் செய்யும் வேடிக்கையான செயல்கள்!!!

By Boopathi Lakshmanan
|

உலகில் மூன்று வகை மனிதர்கள் உண்டு. தங்களுக்கென்று தனிப்பட்ட விதத்தில் கவனத்தை எதிர்பார்க்காதவர்கள் முதல் வகையினர், பிறரின் கவனத்தை எதிர்பார்த்;து அதை எந்த ஒரு உழைப்புமின்றி எளிதில் பெற்றுக்கொள்பவர்கள் இரண்டாவது வகையினர் மற்றும் பிறர் கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனவர்கள் மூன்றாவது வகையினர். இந்த மூன்றாவது வகையை சேர்ந்தவர்கள் சிறிதே முயற்சிகள் செய்தால் எளிதில் காரியத்தை சாதிக்கலாம். இவ்வாறு செய்யும் போது சிலர் தங்களின் தடைகளைக் கடந்து சென்று தாங்களும் உள்ளோம் என்பதை பிறகுக்கு பிரதிபலித்து காட்டுகின்றனர். இத்தகைய மக்களையே கவனத்தை தேடுபவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பிறரின் கவனத்தை ஈர்த்து அனைவரும் அவர்களை கவனிக்கச் செய்ய வேண்டும் என்பது தான் இவ்வாறு கவனத்தை தேடும் மனிதர்களின் குறிக்கோளாகும். இவர்கள் ஏதேனும் ஒரு மூடத்தனமான காரியத்தை செய்து கவனத்தை தங்கள் மேல் திசை திருப்ப வைக்கின்றனர். இவர்களின் எண்ணத்திற்கேற்ப பலரும் அந்த முயற்சிகளில் வெற்றி பெறுகின்றனர். எத்தகைய சில்மிஷ வேலையையாவது செய்தும் மற்றவர்களை தங்கள் மேல் கவனம் செலுத்த செய்வது மட்டுமல்லாமல் மற்றவர்கள் அவர்களை பற்றி பேச வைக்கவும் செய்கின்றனர். ஆனாலும், பிறரின் கவனத்தை தங்கள் மேல் திருப்ப விரும்புபவர்கள் எதிர்காலத்தில் இன்னும் அதிகமான செயல்களை செய்து மற்றவர்களை மேலும் ஈர்க்க வேண்டியுள்ளது.

மற்றவர்களை ஈர்க்க வேடிக்கையான செயல்கள் பல இருப்பினும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Crazy Things People Do To Be An Attention Seeker

1. 'நானும் திருடன், நானும் திருடன்' - ஒரு சிறிய திருட்டு செய்வதின் மூலம் கவனத்தை ஈர்க்கும் மனிதர்கள் பலர் உண்டு. பிக் பாக்கெட் அடித்தோ, வேகமாக வண்டி ஓட்டியோ அல்லது கடையில் திருடியோ பிறரின் கவனத்தை திருப்பும் மனிதர்கள் இவர்கள். சிலர் அண்டை வீட்டாரின் அனுமதியின்றி அவர்களின் வீட்டிற்கு சென்று எதையும் திருடாமல் கவனத்தை மட்டும் ஈர்க்கும் செயலை செய்கின்றனர். பிறரின் கவணம் தன் மேல் இருக்க விரும்பும் மனிதரின் பட்டியலில் இத்தகைய காரியங்கள் தவருவதில்லை.

2. பேஷன் என்ற பெயரில் அகோரம் - சிலர் பேஷன் என்ற பெயர் கொண்டு மிகவும் மோசமான வகையில் ஆடை அணிந்திருப்பதை கவனித்தருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அதை பார்க்கையில் நிச்சயம் ஹார்ட் அட்டாக்கே வந்து விடும். தீபாவளி வண்ணத்தில தொப்பியும், கடுக்கனும் அணிந்து கவனத்தை திருப்பவும் அவர்கள் முயற்சி செய்வது உண்டு. சாதாரண நாட்களில் விசேசமான ஆடைகளை அணிந்தும், மஞ்சள் மேல் சட்டையும் சிகப்பு கால் சட்டையும் அணிந்தும் இவர்கள் மற்றவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவார்கள். நல்ல பேஷன் தான் போங்க!

3. அனுதாபம் - பிறர் கவனத்தை ஈர்க்க நினைக்கும் சிலர் தங்களையே காயப்படுத்திக் கொள்கின்றனர். சிலரின் கவனத்தை திசை திருப்பவும், அவர்களின் பரிதாபத்தைப் பெறவும் தங்கள் கைகளை காயப்படுத்தி கௌ;ளுதல், தற்கொலை முயற்சி ஆகிய செயல்களை இவர்கள் செய்கின்றனர். தன்னைப் பற்றி வதந்தி பரப்புதல், கொச்சையான வீடியோக்களையோ அல்லது போட்டோக்களையோ எடுத்து மற்றவர்கள் பார்கும்படி செய்வது, பிரபலமான ஒருவருடன் சேர்ந்தே இருப்பது ஆகிய செயல்களிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

4. அன்பையும் வெறுப்பையும் காண்பித்தல் - பொது மக்கள் தங்கள் மேல் கவனம் செலுத்த விரும்பும் மக்கள் பொது இடங்களில் மற்றும் தெருக்களில் அல்லது கடைகளில் தேவையில்லாத சண்டை சச்சரவுகளை ஏதேனும் ஒரு சாதாரண காரணத்திற்காக கூட துவங்கி விடுவார்கள். பித்து பிடித்தவர்கள் போலவும் ஏற்க முடியாத வகையில் சண்டையிட்டு மற்றவர் காணும் படி செய்வார்கள். மற்றும் சிலர் வேறு வகைப்பட்டவர்கள். அதாவது தங்களின் அன்பை பொது இடங்களில் காட்ட விரும்புவார்கள். பொது இடங்களில் மக்கள் பார்பதற்காகவே கொஞ்சி குலவுவார்கள். அது மட்டுமல்லாமல் இருவரில் ஒருவர் பிரபலமானவராக இருந்தால் மற்றவர் இன்னும் சிலமிஷங்களை செய்து பொதுமக்களின் கவனத்தை தன் மீது திருப்புவார். இத்தகையவர்கள் கவனத்தை திருப்புவதை நோக்கமாக கொண்டு வேடிக்கையான செயல்களை செய்வார்கள்.

5. ஆடையின்மை - பிறரின் கவனத்தை ஈர்க்க மிகவும் முட்டாள்தனமாக பயன்படுத்தும் விஷயம் நமது உடல் தான். இதை விட மூடத்தனமான செயல் வேறு ஏதேனும் இருக்க முடியாது. முன்னேறப் போராடும் நடிகர் நடிகைகள் பலர் படபிடிப்பிற்கும், விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கும் மற்றும் பணி சார்ந்த வேலைகளுக்கும் ஆடையின்றி செல்கின்றனர். தற்போது பொதுமக்கள் கூட இத்தகைய செயல்களை செய்கின்றனர். பல பெண்களும் தங்கள் உடலை காண்பித்து சுற்றிலுமுள்ளவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றனர்.

English summary

Crazy Things People Do To Be An Attention Seeker

Attention seekers have just one purpose in life – that is to grab interest and get noticed. They end up doing the craziest things to make the rest of the world to concentrate on them. To some extent attention seekers do get their aim achieved by doing weird and crazy things.
Desktop Bottom Promotion