For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நடைமுறையில் உள்ள விநோதமான பழக்கங்கள்!!!

By Super
|

'வேற்றுமையில் ஒற்றுமை' காணும் பல்வேறு வளமான கலாச்சாரங்களை கொண்டிருக்கும் இந்தியாவில் நீங்கள் சில விநோதமான பழக்க வழக்கங்களை காண முடியும். இந்நாட்டின் உண்மையான ஆழத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. பல்வேறு மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், உணவுகள், உடைகள், பாரம்பரியங்கள் என என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்! இங்கு எல்லாம் உள்ளன. அனைத்திலும் ஏதாவதொரு மூடநம்பிக்கைகளும், விநோதமான பழக்க வழக்கங்களும் இந்நாடு முழுவதும் நிரம்பியுள்ளன. தற்கால அறிவியலை கணக்கில் கொள்ளும் போது, இந்நாடு மிகவும் சிறந்த நிலையில் உள்ளது. ஆனால் மற்றொரு பக்கத்தில் சில விநோதமான பழக்கங்களும் நடைமுறையில் உள்ளன.

மும்பை மாநகரம் - அமெரிக்க நகரங்களுடன் ஒப்பிடப் பட்டு வரும் வேளையிலும், பெங்களூர் நகரம் - இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று சொல்லப்பட்டு வரும் நிலையிலும் கூட, இந்த விநோத பழக்கங்களால் சில இருண்ட பகுதிகளும் இந்நாட்டில் உள்ளதை 21-ம் நூற்றாண்டிலும் மறுக்க முடியவில்லை. இங்கு பின்பற்றப்பட்டு வரும் சில மத பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகள் உலகில் வேறெங்கும் காண முடியாதவைகளாக உள்ளன. பொதுவாகவே எல்லா மதங்களிலும் விநோத பழக்கங்கள் இருந்தாலும், இந்த விநோத பழக்கங்கள் பழங்குடியினரிடம் அதிகம் உள்ளன. இந்திய அரசாங்கம் நாட்டில் நிலவும் விநோதமான மூடப் பழக்கங்களை தடுக்க சில நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. எனினும், இவை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இங்கே இந்தியாவில் பின்பற்றப்படும் சில விநோதமான பழக்கங்களைப் பற்றி காண்போம்.

Bizarre Practices In India

1. அதிர்ஷ்டத்திற்காக

அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைப்பது நல்லது தான், இதில் உள்ள விநோதத்தை சற்றே கவனியுங்கள். ஆம்!! அதிர்ஷ்டத்திற்காக குழந்தைகளை 50 அடி உயர கோபுர உச்சியிலிருந்து கீழே எறிகிறார்கள், விழும் குழந்தைகளை ஏந்திக் கொள்ள கீழே தயாராக மற்றவர்களும் நிற்பார்கள். இவர்கள் தாங்கள் கேட்ச் பிடிக்கும் குழந்தைகளை உரியவர்களிடம் சேர்ப்பார்கள். இதன் மூலம் அந்த குழந்தை நல்ல உடல் நலம் மற்றும் செல்வத்தைப் பெறும் என்பது இவர்களின் நம்பிக்கை.

2. நிர்வாணமும் இரட்சிப்பும்

இந்த விநோதமான பழக்கமும் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. திகம்பரர்கள் என்ற பிரிவினர் துறவிகள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இது அனைத்து விதமான உலக இன்பங்களிலிருந்து விடுபட்டு, இரட்சிப்புக்கு செல்லும் வழி என்பது நம்பிக்கை. துரதிஷ்டவசமாக பெண்களால் நிர்வாணமாக இருக்க முடியாத நிலை உள்ளதால், அவர்களால் இரட்சிப்பை அடைய முடியாது. அவர்கள் மீண்டும் ஆண்களால பிறந்து மீட்சி அடைய வேண்டும்.

3. அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடும் வழி

பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் பழக்கமாக இது உள்ளது. பிராமணர்கள் உண்ட வாழை இலையை எடுத்துச் செல்வது சிலரின் வழக்கமாக உள்ளது. இந்த விநோதமான பழக்கத்தின் மூலம் தங்களுடைய பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விட முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

4. பிஸ்நோய்களின் நம்பிக்கை

பிஸ்நோய் என்பவர்கள் இராஜஸ்தானைச் சேர்ந்த சுற்றுச்சூழலுக்கேற்ற பழங்குடியினராவார்கள். அவர்களின் மரங்களை கட்டிப்பிடிக்கும் குணம் மற்றும் விலங்குகள் மேலான அன்பின் மேல் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. இந்த பிரிவினரின் பெண்கள் மான் குட்டிகளுக்கு தங்களுடைய மார்பக பாலை கொடுத்து அவற்றை மரணத்திலிருந்து காக்கும் குணம் கொண்டவர்களாவர்.

5. இந்தியாவின் அகோரிகள்

இந்தியாவில் விநோதமான பழக்கங்களை பின்பற்றும் பிரிவினர்களில் ஒருவராக அகோரிகள் உள்ளனர். சிவ பெருமானை வணங்கும் அகோரிகள் சில விநோத பழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். ஆவர்கள் இறந்த மனித உடல்களை சாப்பிடவும் மற்றும் மனிதர்களின் மண்டையோட்டில் தண்ணீர் குடிக்கவும் செய்கிறார்கள்.

6. கூர்மையான கொக்கிகள்

தென்னிந்தியாவின் காளி கோவில்களில் சிலர் கருட வேடம் புனைவதற்காக செய்யும் விநோத பழக்கம் ஒன்று உள்ளது. அவர்கள் தங்களின் முதுகில் கூர்மையான கொக்கிகளை போட்டு, தங்களை தரையில் இருந்து தூக்கிக் கொள்கிறார்கள். இந்த விநோதமான பழக்கம் நெடுங்காலமாகவே இங்கே பின்பற்றப்பட்டு வருகிறது.

7. வாழை-மர கல்யாணம்

தாலியுடன் சேர்ந்த நடைமுறையான இது இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் விநோதமான பழக்கங்களில் ஒன்றாகும். இந்த பழக்கத்தில் பெண்ணுக்கு பதிலாக வாழை மரத்துடன் ஆணுக்கு திருமணம் நடக்கும். இந்த ஜோதிட கணிப்புகளின் படி, அந்த மாங்கல்ய தானம் துரதிஷ்டத்தை கொண்டு வருவதாக இருக்கும். இந்த திருமணத்தால் துரதிஷ்டம் வாழை மரக்கட்டைக்கு மாறி விடும் என்றும், அதன் பின்னர் பெண்ணை அந்த ஆணுக்கு கொடுக்கலாம் என்பதும் நம்பிக்கையாகும்.

English summary

Bizarre Practices In India

Bizarre practices are found in almost every religion but it is most commonly found among the tribal groups. The Indian Government had taken several steps to prevent some of the uncommon practices that prevailed in the country. However, there are a few being practiced even now. Take a look at some of the strange Indian practices.
Story first published: Saturday, November 16, 2013, 16:09 [IST]
Desktop Bottom Promotion