For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் சாப்பிடப்படும் சில விசித்திர உணவுகள்!!!

By Maha
|

இந்தியாவில் பல அபூர்வங்கள் உள்ளன. அதில் மக்கள், உணவுகள், கலாச்சாரங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் இவை அனைத்தும் இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். அந்த வகையில் உணவுகள் என்று வரும் போது, இந்திய உணவுகள் மிகவும் சுவையானதாக பார்க்கும் போதே நாஊறும். ஆனால் இந்தியாவிலும் சில பகுதிகளில் வித்தியாசமான மற்றும் விசித்திரமான உணவுகளை மக்கள் சாப்பிடுகின்றனர் என்பது தெரியுமா?

ஆம், இந்தியாவில் பல பகுதிகளில் நினைத்து பார்க்க முடியாத சில உணவுகளை சாப்பிடுகின்றனர். சொல்லப்போனால், அந்த உணவுகளை சொன்னால் நம்பமாட்டீர்கள். மேலும் அது ஆச்சரியமானதாகவும் இருக்கும். அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா?

சரி, அந்த விசித்திர உணவுகள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்க்க ரெடியா....?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காட்டெருது வெண்ணெய் டீ

காட்டெருது வெண்ணெய் டீ

ஆம், இந்த டீயானது காட்டெருதுவின் பாலில் செய்யப்பட்ட வெண்ணெய் கொண்டு செய்யப்பட்டது. இந்த டீயை திபெத்காரர்கள், இந்தியாவில் முதன்முதலில் வெளிப்படுத்தினர். மேலும் இந்த டீயில் வெண்ணெய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு அடித்து சாப்பிடக்கூடியதாகும்.

சிக்கன் இரத்தம் மற்றும் பன்றி குடல்

சிக்கன் இரத்தம் மற்றும் பன்றி குடல்

என்ன சிரிப்பா வருதா. ஆனால் இது தான் உண்மை. இந்த ரெசிபிக்கு ஜடோ என்று பெயர். இந்த உணவை இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் சாப்பிடுவார்கள்.

நாய் இறைச்சி

நாய் இறைச்சி

அனைவருக்கும் நாயை வளர்க்க பிடிக்கும். ஆனால் நாகாலாந்து பகுதியில் உள்ள மக்கள் நாய் இறைச்சியை விரும்பி சாப்பிடுவார்கள். சொல்லப்போனால், இந்த பகுதியில் இந்த உணவு மிகவும் விலை உயர்ந்தது.

குட்டி சுறா குழம்பு

குட்டி சுறா குழம்பு

சுறாவைப் பார்த்து பயப்படும் மக்கள், சுறாவின் குட்டியைப் பிடித்து, அதனை குழம்பு செய்து சாப்பிடுகிறார்கள். பொதுவாக இந்த ரெசிபி கோவாவில் மிகவும் பிரபலமானது மற்றும் விலை அதிகமானதும் கூட.

சிவப்பு எறும்பு சட்னி

சிவப்பு எறும்பு சட்னி

சத்தீஸ்கர் பகுதியில் சிவப்பு எறும்பை சட்னி செய்து சாப்பிடுவார்கள்.

கருப்பு அரிசி

கருப்பு அரிசி

மணிப்பூரில் இது மிகவும் ஸ்பெஷலானது. இந்த அரிசியின் நிறத்தால், இதனை 'மேஜிக் அரிசி' என்றும் சொல்வார்கள். மேலும் இந்த அரிசி அறுவடை செய்யும் போது கருப்பு நிறத்திலும், வேக வைத்தப் பின்னர் ஊதா நிறத்திலும் இருக்கும்.

பன்றி மூளை

பன்றி மூளை

மேகாலயாவில் பன்றியின் மூளையை வேக வைத்து அலங்கரித்து சாப்பிடுகிறார்கள்.

தவளை கால்கள்

தவளை கால்கள்

சிக்கிம் பகுதியில், வயிற்றுப் போக்கு மற்றும் இதர வயிறு சம்பந்தமான பிரச்சனைகளைப் போக்குவதற்கு தவளையின் கால்களை சூப் வைத்து சாப்பிடுவார்கள்.

கூட்டுப்புழு

கூட்டுப்புழு

அசாம் மாநிலத்தில் பச்சை நிற கூட்டுப்புழுவை சாப்பிடும் பழக்கம் உள்ளது. இந்த புழுவைக் கொண்டு செய்யப்படும் ரெசிபியானது மிகவும் வண்ணமயமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bizarre Foods That Are Eaten In India

There are many parts of India where you can find some 'unusual dishes' cooked either in an unconventional manner or with some bizarre ingredients. So, if you thought Indian food was all about masala dosa and butter chicken, then you are in for a huge surprise. Check out these bizarre foods that are eaten in India.
Story first published: Tuesday, July 30, 2013, 16:57 [IST]
Desktop Bottom Promotion