For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்துமத தெய்வங்களின் வாகனமாக இருக்கும் சில விலங்குகள்!!!

By Maha
|

இந்து மதத்தில் விலங்களும், பறவைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏனெனில் இந்து மதத்தில் இருக்கும் தெய்வங்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வாகனங்களை வைத்துள்ளனர். அந்த வாகனங்கள் பறவைகளும், விலங்குகளும் ஆகும். உதாரணமாக, இந்துக்கள் அனவைரும் பசு மாட்டை மிகவும் மரியாதையுடன் நடத்துவார்கள். ஏனெனில் பசு மாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வங்கள் குடி கொண்டுள்ளனர் என்பதால் தான். மேலும், பசு மாட்டை அனைத்து கடவுள்களின் அம்மா என்றும் கூறுவர்.

அதுமட்டுமின்றி இத்தகைய விலங்குகளும், பறவைகளும் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களின் கோபுரங்களிலும் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு அந்த விலங்குகளும், பறவைகளும் இடம் பெற்றிருப்பதற்கு இந்துப் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு தெய்வங்களின் வாகனம் என்பதாலேயே தான். மேலும் இந்த விலங்குகளும், பறவைகளும் தெய்வங்களின் பயணத்திற்கு மட்டும் பயன்படுவதில்லை. அவை ஒவ்வொன்றும், கடவுள்களின் தன்மையை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது.

இப்போது மிகவும் பிரபலமாக அனைவரது மனதிலும் இடம் பெற்ற ஒருசில கடவுள்களின் வாகனங்களாகப் பயன்படும் விலங்குகள் மற்றும் பறவைகளைப் பற்றி பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூஞ்சூறு

மூஞ்சூறு

எலி வகைகளில் ஒன்றான மூஞ்சூறு, விநாயகரின் வாகனம் ஆகும். இந்த மூஞ்சூறு, விநாயகரின் வாகனமாக இருப்பதோடு, ஒவ்வொரு தடையையும் அழித்து வெற்றி பெறுபவர் விநாயகர் என்பதையும் குறிக்கிறது.

நந்தி

நந்தி

மும்மூர்த்திகளுள் ஒருவரான நெற்றிக்கண் உடைய சிவபெருமானின் வாகனம் தான் காளை. இந்த காளையை நந்தி என்று சொல்வார்கள். எந்த ஒரு சிவன் கோவில்களுக்கு சென்றாலும், அங்கு சிவனின் முன்பு நந்தி இருப்பதைக் காணலாம்.

புலி

புலி

மிகவும் வலிமை வாய்ந்த புலியானது, சக்திவாய்ந்த துர்கை அம்மனின் வாகனமாக உள்ளது. சில சமயங்களில் புலிக்கு பதிலாக காட்டின் ராஜாவாக உள்ள சிங்கமும் இருக்கும். இந்த வாகனங்கள் அந்த அம்மனின் வலிமையை வெளிப்படுத்துகின்றன. மேலும் இநத் புலியானது ஐயப்பனின் வாகனமாகவும் உள்ளது.

மயில்

மயில்

அழகிய மயிலானது, அழகுக்கு பேர் போன ஆறுபடை முருகனின் வாகனம் ஆகும். இந்த மயில் எப்படி அழகுக்கு பேர் போனதோ, அதேப் போல் வாகனமாக இருக்கும் முருக பெருமானின் அகம் மற்றும் புற அழகை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

ஆந்தை

ஆந்தை

மகாலட்சுமியின் வாகனமாக ஆந்தை உள்ளது. ஆந்தையின் தன்மை இரவில் கண் தெரியாது என்பது. அது போல், கடவுள் மகாலட்சுமியும் நல்லவர் தீயவர் என்று பார்க்காமல், அனைவருக்கும் செல்வத்தை வாரி வழங்குவதில் சிறந்தவராக உள்ளார் என்பதை அறிவுறுத்துகிறது.

கருடன்

கருடன்

அனைத்து பறவைகளுக்கும் கருடன் தான் கடவுளாக உள்ளது. அத்தகைய கருடன் எந்த இடத்தில் பாம்பை கண்டாலும், அனைத்து தடைகளையும் தாண்டி அந்த பாம்பை வேட்டையாடி வெற்றி பெறும் தன்மையுடையது. இத்தகைய கருடன் விஷ்ணுவின் வாகனமாக வருவதற்கு காரணம், ஒரு முறை கருடன் நிலவினை திருடி மறைத்து வைத்துள்ளார். அப்போது அதனை மீட்பதற்கு அனைத்து தேவர்களும், தெய்வங்களும் வந்தனர். ஆனால் விஷ்ணுவைத் தவிர அனைவரும் தோல்வியடைந்தனர். எனவே விஷ்ணு வெற்றிப் பெற்றதால், அது விஷ்ணுவின் வாகனமாக உள்ளது.

யானை

யானை

யானையை ஐயராவதம் என்றும் அழைப்பர். இந்த ஐராவதம் தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமாகும். எப்படி யானையின் முன் யார் போட்டி போட்டாலும், வெற்றி பெற முடியாத வகையில் மிகவும் வலிமையானதோ, அதேப் போல் இந்திரனும் மிகவும் வலிமையானவர் என்பதை வெளிப்படுத்தவே, இது இந்திரனின் வாகனமாக உள்ளது.

முதலை

முதலை

வருண பகவானின் வாகனமாக முதலை உள்ளது. எப்படி முதலை புத்திசாலித்தனத்திலும், வலிமையிலும் சிறந்ததோ, அதேப் போல் அதனை வாகனமாக கொண்ட வருண பகவானும் மிகவும் வலிமையானவர் என்பதை அறிவுறுத்துகிறது.

குதிரை

குதிரை

சூரியனின் வாகனம் தான் குதிரை. இவர் ஏழு நிறம் கொண்ட வானவில்லைக் குறிக்கும் வகையில், ஏழு குதிரையின் மீது சவாரி செய்கிறார்.

காகம்

காகம்

இன்றும் மக்கள் காகத்திற்கு சாதம் வைப்பதற்கு காரணம், அதுவும் ஒரு தெய்வத்தின் வாகனம் என்பதாலே தான். அத்தகைய காகம் நவகிரகங்களில் ஒருவரான சனி பகவானின் வாகனம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Animals n Birds: Hindu Deities Vehicle | இந்துமத தெய்வங்களின் வாகனமாக இருக்கும் சில விலங்குகள்!!!

Animals are often mentioned in Hindu mythology holds a prominent role in the Hinduism. Usually these animals are often mentioned to be the vehicles of the Hindu Gods. Some may think that they just act as a means of transportation. But they are symbolic representative of something immaterial and formless. The vehicles of the gods and goddesses are always depicted that is related to the humans. Some of the animals and birds which are popularly known to be the vehicles of the Hindu deities are:
Story first published: Thursday, February 21, 2013, 15:23 [IST]
Desktop Bottom Promotion