இந்த உலகில் பிறந்த அனைவருமே ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவ்வாறு ஆசைப்படுபவர்கள் அனைத்தும் அவ்வளவு எளிதில் எதையும் சாதிப்பதில்லை. அதற்கு பின்னால் நிறைய முயற்சிகள் நிச்சயம் இருக்கும். மேலும் சாதனையாளர்களின் பெயர்களை பதியும் ஒரு அழியாத புத்தகம் தான் கின்னஸ் புத்தகம். சாதிக்க அனைவருக்கும், இந்த புத்தகத்தில் தனது பெயர் வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவ்வாறு முயற்சித்ததில், சிலர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவார்கள்.
இத்தகைய சாதனைகள் ஒருவருக்கு மட்டுமின்றி, ஒரு நாட்டிற்கும் சேரும். மேலும் சாதனை புரிய நினைப்பவர்கள், இந்த உலகிலேயே தான் செய்ததை யாரும் மறக்கக் கூடாது என்று நினைத்து தான் சாதனையைத் தொடங்குவர். அத்தகைய உலக சாதனைகளில் ஒருசில சாதனைகளை மறக்கவே முடியாது. ஏனெனில் இந்த அளவு சாதனையானது அற்புதமாக, மறக்க முடியாத அளவில், அவரது சாதனையை முறியடிப்பதற்கு சரியான போட்டி தரும் வகையில் இருக்கும். மேலும் ஒவ்வொரு சாதனைகளும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.
இப்போது அத்தகைய சாதனைகளில் வித்தியாசமான சாதனைகளான உலகிலேயே மிகப் பெரிய கட்டிடம், சிலை, விமானம், பாலம், அரண்மனை, பேருந்து போன்றவை அடங்கும். ஆகவே இப்போது அந்த சாதனைகளுள் ஒருசிலவற்றை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.




































