For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலர் தினத்தன்று நிச்சயம் செய்யக்கூடாத செயல்கள்!!!

By Maha
|

இறுதியாக காதலர் தினம் வந்துவிட்டது. நிறைய மக்களுக்கு பிப்ரவரி 14 ஒரு ஸ்பெஷலான தினமாக இருக்கும். காதல் இல்லாத இடத்தை சொல்லவே முடியாது. எப்படி காற்று இந்த இடத்தில் மட்டும் தான் இருக்கும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதோ, அதேப் போல், காதல் இவரிடம் மட்டும் தான் வரும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அந்த அளவு காதல் அனைவரின் மனதிலும் இருக்கும். பெரும்பாலானோர் இந்த நாளன்று தனது காதலை வெளிப்படுத்த மிகவும் விரும்புவார்கள்.

ஆனால் காதல் செய்யும் சிலருக்கோ அல்லது காதலில் தோல்வி அடைந்தவருக்கோ, இது ஒரு சாதாரணமான நாளாக இருக்கும். என்ன தான் இருந்தாலும், உலகம் முழுவதும் காதல் செய்யும் அனைவரும் கொண்டாடும், காதலர் தினத்தில் சிலர் மட்டும் இதனை ஒரு பெரிய தினமாக கருதாமல், சாதாரணமாக இருப்பார்கள். ஆகவே அவ்வாறு இல்லாமல், ஒருசில செயல்களை இந்த தினத்தன்று செய்வதை தவிர்க்க வேண்டும். அத்தகைய செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதை தவிர்த்துவிடுங்கள்.

5 'Not To Do' Things On Valentines Day
* காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு, இந்த நாளன்று தனது காதலன்/காதலியின் நினைவு அதிகரிக்கும். எனவே இந்த நாளன்று உணர்ச்சி வசப்பட்டு அவர்களுக்கு போன் செய்து பேச வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவ்வாறு உணர்ச்சிவசப் படாமல், இந்த நேரத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். அதைவிட்டு போன் செய்தால், அதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, பின் மன அழுத்தம் தான் இருவருக்கும் அதிகரிக்கும். எனவே இத்தகைய செயலை நிச்சயம் தவிர்த்துவிட வேண்டும்.

* காதலர் தினத்தன்று என்ன தான் அலுவலகத்திற்கு சென்றாலும், விரைவில் வேலையை முடித்துவிட்டு, காதலன்/காதலியை சந்திக்க வேண்டும். அதைவிட்டு, வேலை உள்ளது என்று அலுவலகத்திலேயே நீண்ட நேரம் இருந்தால், பின் இருவருக்கும் இந்த நாளே இறுதி நாளாக மாறிவிடும். எனவே மற்றவர் உணர்ச்சியையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

* நிறைய பேர் காதல் இல்லாமல் இருப்பார்கள். அத்தகையவர்கள் இந்த நாளன்று நண்பர்களுடன் இருப்பதற்கு நினைப்பார்கள். இது தவறல்ல. ஆனால் அவ்வாறு அழைக்கும் நண்பர்களுக்கு காதலன்/காதலி இருந்தால், அப்போது அவர்களை கட்டாயப்படுத்தி அழைக்கக் கூடாது. பின் இதனால் நட்புறவு கூட முறியும் நிலை ஏற்படும். எனவே இந்த நாளன்று இந்த மாதிரியான செயலை அறவே தவிர்க்க வேண்டும்.

* காதலர்கள் சிலர் இந்த நாளன்று ஒரே மாதிரியான நிறத்தில், அதுவும் சிவப்பு நிறத்தில் ஆடை அணியலாம் என்று நினைத்திருப்பார்கள். இவ்வாறு செய்வது தவறல்ல. ஆனால் இவ்வாறு அணிந்தால், அது பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். எனவே இத்தகைய செயலைத் தவிர்க்கலாமே!

* காதலர் தினம் என்பதால் நிறைய பேர் இந்த நாளில் அதிக ரொமான்ஸ் செய்ய ஆசைப்படுவார்கள். ஆனால் உண்மையில் இந்த நாளன்று அவ்வாறு அதிகப்படியான ரொமான்ஸ் செய்வதை விட, மனம் விட்டு, சந்தோஷமாக பேசினால் தான் சிறப்பானதாக இருக்கும். அதிலும் துணையை கவரும் வகையில் அவர்களிடம் நடந்து கொண்டு, அவர்கள் மனதில் இன்னும் அன்பை பதிய வேண்டும். அதை விட்டு, எப்போதும் முத்தம் கொடுப்பது, கட்டிப் பிடிப்பது போன்ற செயல்களை மட்டும் செய்தால், அது சில நேரத்தில் ஒருவித வெறுப்பை ஏற்படுத்திவிடும். அதற்காக செய்யவே கூடாது என்பதில்லை. அளவாக வைத்துக் கொள்ளலாமே!

இவையே காதலர் தினத்தன்று நிச்சயம் செய்யக்கூடாத செயல்கள். உங்களுக்கு இது போன்று வேறு ஏதாவது செய்யக்கூடாத செயல்களாகத் தோன்றினால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

5 'Not To Do' Things On Valentines Day | காதலர் தினத்தன்று நிச்சயம் செய்யக்கூடாத செயல்கள்!!!

Finally the day has come. Its Valentine's Day. February 14th is a very special day for many people. Love is in the air and they are enjoying every bit of it. While few people wait for this day to express their feelings and impress their Valentine, there are are a set of people who take it as a normal day. But, there are few things that you must not do on Valentine's Day. What are these things? Find out...
Story first published: Thursday, February 14, 2013, 13:20 [IST]
Desktop Bottom Promotion